என் மலர்
புதுச்சேரி

பாலம் அமைக்கும் பணியை மோட்டார் சைக்கிளில் சென்று சிவா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.
மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
- வில்லியனூர் தொகுதியில் உள்ள மணவெளி தண்டுக்கரை இணைப்பு பாலம், தாங்கள்பாலம், பொறையாத்தம்மன் பாலம் ஆகிய 3 பாலங்கள் சுமார் ரூ.94 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றது.
- ஆய்வின்போது விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதியில் உள்ள மணவெளி தண்டுக்கரை இணைப்பு பாலம், தாங்கள்பாலம், பொறையாத்தம்மன் பாலம் ஆகிய 3 பாலங்கள் சுமார் ரூ.94 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றது.
பாலம் அமைக்கும் பணிகளை எதிர்க்கட்சி தலைவர் சிவா மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கையின்படி பாலத்தை அமைத்துத்தரும்படி அதிகாரிகளிடம் சிவா வலியுறுத்தினார்.
ஆய்வின் போது செயற்பொறியாளர் சுந்தர்ராஜி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் வாசு, தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதி திராவிட அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தொகுதி துணை செயலாளர் குலசேகரன், வர்த்தக அணி முருகையன், ரமணன், ரபீக், திலகர், திருவேங்கடம், பாலு, வீரா, காளி, மிலிட்டரி முருகன், சிலம்பு, சுப்பிரமணி, ரமேஷ், பாலா ஆகியோர் உடன் இருந்தனர்.






