என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை சுசிலாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சுசிலாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி துணைமுதல்வர் சுகந்தி ராஜவேலு தலைமை தாங்கினார்.

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து மாணவர் முன்னேற்றத்திற்கு திறன் மேம்பாட்டு பற்றி விளக்கினார்.

    பள்ளி துணை முதல்வர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கி கூறினார். அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

    விழாவின் ஏற்பாடுகளை அன்னை தெரசா மக்கள் இயக்க நிர்வாகிகள் செல்வபாண்டியன், கிருஷ்ணவேணி, கம்சலை, பைரவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றி கூறினார். 

    • பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது.
    • பாண்லே நிறுவனம் இந்தியாவிலேயே தரமான பாலை கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி–யிருப்பதாவது:-

    பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரகாலமாக பாண்லே நிறுவனத்திற்கு கர்நாடகாவில் இருந்து வாங்க வேண்டிய பாலை வாங்காமல் இருந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக பாண்லே பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு முகவர்களுக்கும், பாண்லே பூத்களுக்கும் வழங்கப்படும் பாலின் அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து முகவர்கள் போராட்டம் நடத்திய பின்னரும் அரசு கண்டுகெள்ளவில்லை. இதனால் குழந்தைகள், மகளிர், முதியோர், நோயாளிகள் பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் பாண்லே நிறுவனத்தை அமுல் நிறுவனத்திடம் விற்கப்போவதாக பேசப்பட்டு வருகின்றது. பாண்லே நிறுவனம் இந்தியாவிலேயே தரமான பாலை கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அப்படிப்பட்ட சிறப்பான பாண்லே நிறுவனத்தை ஆட்சியாளர்கள் தங்களின் சுயநலத்திற்காக சீரழித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது மக்களுக்கும் மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக விழாக்காலமான இந்நேரத்தில் பால் தட்டுப்பாட்டை திட்டமிட்டு உருவாக்குவது மிகுந்த கண்டனத்திற்குரியது. எனவே உடனடியாக பாண்லே நிர்வாகத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை கலைந்து தட்டுப்பாடின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
    • புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.நீர்த்துப்போன இந்தி திணிப்பு கோஷத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றும் வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல்.

    தமிழே சொல்லிக்கொடுக்காத பல கல்வி நிறுவனங்கள் உள்ளது. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்தியை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்துக் கொள்ள நினைக்கும் இன்றயை காலத்தில் அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்தியை கற்க கூடாது என நினைக்கும் தி.மு.க.வின் செயல் கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை பின்பற்றப்படவில்லை.புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும். நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

    பா.ஜனதா கூட்டணி ஆட்சி தான் புதுவையில் நடந்து வருகிறது. ஆனால் 50 சதவீதம் இடத்தை பெற ஏன் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை கவர்னர் அமல்படுத்துவாரா? ஏன் இதுவரை அமல்படுத்தவில்லை? இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி களின் உரிமையாளர்களிடம் சாதமாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    வருடத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வாங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஏன் தனியார் மருத்துவ கல்லூரில் வாங்காமல் அதிகமாக வாங்குகின்றனர்.கட்டண நிர்ணய குழு தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • விபத்தில் சிக்கி புத்தி சுவாதீனம் மாறியதால் நண்பர்கள் கிண்டல் செய்ததையடுத்து பெயிண்டர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • அதற்காக சிகிச்சை பெற்றுவந்த விஜயகுமாருக்கு நாளடைவில் புத்தி சுவாதீனம் மாறி குழந்தை தனமாக பேசி வந்தார்.

    புதுச்சேரி:

    விபத்தில் சிக்கி புத்தி சுவாதீனம் மாறியதால் நண்பர்கள் கிண்டல் செய்ததையடுத்து பெயிண்டர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை கோரிமேடு காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39). இவருக்கு அனிதா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

    பெயிண்டர் வேலை செய்து வந்த விஜயகுமார் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்தார். அதற்காக சிகிச்சை பெற்றுவந்த விஜயகுமாருக்கு நாளடைவில் புத்தி சுவாதீனம் மாறி குழந்தை தனமாக பேசி வந்தார். இதனை அவருடைய நண்பர்கள் கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகுமார் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்து வந்தார்.

    மேலும் இது பற்றி விஜயகுமார் தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் கூறி தனக்கு வாழ பிடிக்க வில்லை என்று சொல்லி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறிவந்தானர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று விரக்தி அடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை தின்று விட்டார்.

    பின்னர் இது குறித்து தனது தாய் மற்றும் மனைவியிடம் விஜயகுமார் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக விஜயகுமாரை சிகிச்சைகாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது தாயார் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் கணுவா பேட்டை புது நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி (வயது 66). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 2 மகளும் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக கிருஷ்ண சாமி கடந்த சில ஆண்டுகளாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த மாலதி துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கிருஷ்ணசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் பார்த்த சாரதி தந்தை தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை தூக்கில் இருந்து மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.
    • புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.

    தற்போது புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் நகரின் மையத்தில் உள்ள குபேர் மீன் அங்காடியில் அதிக அளவில் மீன் வந்துள்ளது.அசைவ பிரியர்கள் காலை 6 மணி முதலே அங்காடிக்கு வந்து மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளை வாங்கினர்.

    புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வஞ்சிரம் மீன் ரூ.300 முதல் ரூ.800 வரையிலும், வவ்வால் ரூ.400 முதல் ரூ.600 வரையிலும், நண்டு ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், இறால் கிலோ ரூ.200 எனவும் விற்கப்படுகிறது.

    கடந்த மாதத்தை விட அனைத்தும் கூடுதல் விலையில் விற்கப்பட்டது. இதேபோல் சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    • பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    • இந்நிலையில் புதுவையில் இந்த திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களி–டையே ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்ற உணர்வு இருக்கவேண்டும் என்பதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சீருடை கட்டாயமாக்கப்பட்டது.

    அதன்படி அரசு பள்ளிகளில் இலவச சீருடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் புதுவையில் இந்த திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    சீருடை இல்லாத காரணத்தால் மாணவர்களிடையயே உடை ரீதியாக தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மேலும் பல மாணவர்களின் இதனை காரணம் காட்டி பள்ளிக்கு விடுப்பு எடுக்கின்றனர். இதன்காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு,எதிர்காலம் கேள்விக் குறியாகி விடுகிறது.

    கடந்த ஆண்டு புதுவையில் இலவச சீருடைக்கு பதிலாக அதற்கான பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலு–ணத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட வில்லை.

    இந்த ஆண்டும் இதுவரை மாணவர்களுக்கு பணமோ, சீருடையோ வழங்கப்படவில்லை. பணமாக வழங்கினால் பலர் அதனை சீருடை வாங்கதான் பயன்படுத்துவார்களா? என்பது கேள்விக் குறிதான். எனவே இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பணமாக இல்லாமல் இலவச சீருடை வழங்க கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை–யில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.
    • அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.

    புதுவை இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட புரட்சி தலைவி நகரில் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்ற ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உலக மனநல வார விழா வை முன்னிட்டு புதுவை மணகுள விநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையும், மனநல செவிலியர் துறையும், செவிலியர் கல்லூரியும், மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல வாரவிழா கொண்டாடியது.
    • மனநலத்துறை உதவி பேராசிரியர் சுகன்யா தேவி வரவேற்றார். மனநலத்துறை தலைவர் அருண் இந்த வருட மைய கருத்தை எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    உலக மனநல வார விழா வை முன்னிட்டு புதுவை மணகுள விநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையும், மனநல செவிலியர் துறையும், செவிலியர் கல்லூரியும், மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல வாரவிழா கொண்டாடியது.

    இதன் நிறைவு விழா நடைபெற்றது. மணகுள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைதலைவர் சுகுமாறன், செயலாளார் டாக்டர் நாராயணசாமி கேசவன், மருத்துவகல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடமிக்) கார்த்திகேயன் டீன் (ஆராய்ச்சி) கலைச்செல்வன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ், மனநலத்துறை தலைவர் அருண் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மனநலத்துறை உதவி பேராசிரியர் சுகன்யா தேவி வரவேற்றார். மனநலத்துறை தலைவர் அருண் இந்த வருட மைய கருத்தை எடுத்துரைத்தார்.

    சுவரொட்டி போட்டி, பேச்சு போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாராயணசாமி கேசவன் பரிசு வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் சபரி ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். செவிலியர் மனநலத்துறை உதவி பேராசிரியர் நதியா நன்றி கூறினார்.

    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி, கே.எஸ்.பி ரமேஷ் எம்.எல்.ஏ.,ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி முனைவர். அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி, கே.எஸ்.பி ரமேஷ் எம்.எல்.ஏ., அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் டாக்டர் முத்தம்மா, துறை இயக்குநர் பிரியதர்ஷினி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் செல்வராஜ், அப்துல் கலாம் - வாழ்க்கை மற்றும் சாதனைகள் என்னும் தலைப்பிலும் திசையன்விளை கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குனர் அஷ்வினிகுமார் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - கணக்கிடுவதற்கான சக்தி என்னும் தலைப்பிலும் விரிவுரையாற்றினர்.

    தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனம் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்த ப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.
    • போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடா விட்டால், போராட்டம் தொடரும்.

    புதுச்சேரி:

    புதுவை சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

    ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்த ப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா முழுவதும் நமது போராட்டம் பரவியுள்ளது.தி.மு.க.விற்கு ஆட்சி முக்கியமில்லை, பல முறை ஆட்சியை இழந்துள்ளோம். பூச்சாண்டிக்கு பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது. தலைமை தபால் நிலையத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது சூட்டிங் ஆர்டர் போடுவோம் என்றனர்.

    ஜனநாயகத்தில் கடமை, கண்ணியத்துடன் போராட்டம் நடத்த நினைக்கின்றோம், தி.மு.க. எத்தனையோ சூட்டிங் ஆர்டர்களை பார்த்துள்ளது. தி.மு.க. திருட்டுத்தனமாக ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல. கொள்கை இல்லாமல் விலைபேசி ஆட்களைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் கிடையாது. தி.மு.க. 27 ஆண்டாக ஆட்சியில் இல்லை, ஆனாலும் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

    போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடா விட்டால், போராட்டம் தொடரும்.

    மத்திய அரசின் முகமூடி மக்களுக்கு தெரிந்துவிட்டது. புதுவையில் மின்துறை, சுற்றுலாத்துறை என அனைத்தும் குட்டிச்சுவர் ஆக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். தேர்தலில் அறிவித்தபடி துறைமுகத்தை இயக்கத்திற்கு கொண்டுவந்தீர்களா? மூடப்பட்ட சுசேதி மில், ரோடியர் மில், கூட்டுறவு சர்க்கரை ஆலை எதை திறந்தீர்கள்? கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    கவர்னர் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும். புதுவை வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று ஜனநா யகத்தின் அடிப்படையில் மரியாதை கொடுத்து பேசி வருகின்றோம். ஆனால் கவர்னர் என்பதை மறந்து 2024 ஆட்சிக்கு பா.ஜனதா வருவதற்கான ஆலோசனை குழுவில் பங்கேற்று கருத்துக்களை கூறி வருகிறார்.

    இவர் புதுவையின் கவர்னராக பொறுப்பேற்றவுடன் செய்த காரியம், ஆட்சியை கலைத்ததுதான்.

    புதுவை சபாநாயகரும் ஜனநாயக மரபுகளை மீறுகின்றார். நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.தான், இந்துத்துவாதான் என்று கூறி நமச்சிவாயம் உள்ளிட்டோர் தைரியமாக வெளியில் கூறி வரவேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தம் தமிழகம், புதுவையில் ஒரு காலமும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சி ற ப் பு விருந்தினராக வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாலிபால், கேரம், கிரிக்கெ ட், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி செயலாளர் சதீஷ் குமார், பா.ஜனதா .பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந் திரன் மற்றும் அய்யனார் கோவில் மேடு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த செல்வி, சத்தியா ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    ×