என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டிரைவர் தூக்கு போட்டு சாவு
    X

    கோப்பு படம்.

    டிரைவர் தூக்கு போட்டு சாவு

    • வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் கணுவா பேட்டை புது நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி (வயது 66). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 2 மகளும் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக கிருஷ்ண சாமி கடந்த சில ஆண்டுகளாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த மாலதி துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கிருஷ்ணசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் பார்த்த சாரதி தந்தை தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை தூக்கில் இருந்து மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×