search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தட்டுப்பாடின்றி பாண்லே பால் வழங்க வேண்டும்-சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    தட்டுப்பாடின்றி பாண்லே பால் வழங்க வேண்டும்-சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது.
    • பாண்லே நிறுவனம் இந்தியாவிலேயே தரமான பாலை கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி–யிருப்பதாவது:-

    பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரகாலமாக பாண்லே நிறுவனத்திற்கு கர்நாடகாவில் இருந்து வாங்க வேண்டிய பாலை வாங்காமல் இருந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக பாண்லே பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு முகவர்களுக்கும், பாண்லே பூத்களுக்கும் வழங்கப்படும் பாலின் அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து முகவர்கள் போராட்டம் நடத்திய பின்னரும் அரசு கண்டுகெள்ளவில்லை. இதனால் குழந்தைகள், மகளிர், முதியோர், நோயாளிகள் பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் பாண்லே நிறுவனத்தை அமுல் நிறுவனத்திடம் விற்கப்போவதாக பேசப்பட்டு வருகின்றது. பாண்லே நிறுவனம் இந்தியாவிலேயே தரமான பாலை கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அப்படிப்பட்ட சிறப்பான பாண்லே நிறுவனத்தை ஆட்சியாளர்கள் தங்களின் சுயநலத்திற்காக சீரழித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது மக்களுக்கும் மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக விழாக்காலமான இந்நேரத்தில் பால் தட்டுப்பாட்டை திட்டமிட்டு உருவாக்குவது மிகுந்த கண்டனத்திற்குரியது. எனவே உடனடியாக பாண்லே நிர்வாகத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை கலைந்து தட்டுப்பாடின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×