என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை
- பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
- இந்நிலையில் புதுவையில் இந்த திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி:
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவர்களி–டையே ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்ற உணர்வு இருக்கவேண்டும் என்பதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சீருடை கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி அரசு பள்ளிகளில் இலவச சீருடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் புதுவையில் இந்த திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சீருடை இல்லாத காரணத்தால் மாணவர்களிடையயே உடை ரீதியாக தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மேலும் பல மாணவர்களின் இதனை காரணம் காட்டி பள்ளிக்கு விடுப்பு எடுக்கின்றனர். இதன்காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு,எதிர்காலம் கேள்விக் குறியாகி விடுகிறது.
கடந்த ஆண்டு புதுவையில் இலவச சீருடைக்கு பதிலாக அதற்கான பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலு–ணத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட வில்லை.
இந்த ஆண்டும் இதுவரை மாணவர்களுக்கு பணமோ, சீருடையோ வழங்கப்படவில்லை. பணமாக வழங்கினால் பலர் அதனை சீருடை வாங்கதான் பயன்படுத்துவார்களா? என்பது கேள்விக் குறிதான். எனவே இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பணமாக இல்லாமல் இலவச சீருடை வழங்க கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கை–யில் கூறப்பட்டுள்ளது.






