search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் மீது அன்பழகன் குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    கவர்னர் மீது அன்பழகன் குற்றச்சாட்டு

    • கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
    • புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.நீர்த்துப்போன இந்தி திணிப்பு கோஷத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றும் வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல்.

    தமிழே சொல்லிக்கொடுக்காத பல கல்வி நிறுவனங்கள் உள்ளது. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்தியை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்துக் கொள்ள நினைக்கும் இன்றயை காலத்தில் அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்தியை கற்க கூடாது என நினைக்கும் தி.மு.க.வின் செயல் கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை பின்பற்றப்படவில்லை.புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும். நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

    பா.ஜனதா கூட்டணி ஆட்சி தான் புதுவையில் நடந்து வருகிறது. ஆனால் 50 சதவீதம் இடத்தை பெற ஏன் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை கவர்னர் அமல்படுத்துவாரா? ஏன் இதுவரை அமல்படுத்தவில்லை? இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி களின் உரிமையாளர்களிடம் சாதமாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    வருடத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வாங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஏன் தனியார் மருத்துவ கல்லூரில் வாங்காமல் அதிகமாக வாங்குகின்றனர்.கட்டண நிர்ணய குழு தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×