என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • பருவ மழை தீவிரமடையும் முன்பே இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பெய்த சிறிய மழைக்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து ஈரப்பதமாகவே காணப்பட்டு வருகிறது.

    புதுவை மாநில நெல் களஞ்சியமான பாகூரில் பகுதியில் சம்பா போக நெல் பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல பகுதிகளில் நெல் நடவு நட்டுள்ளனர்‌.

    பருவ மழை தீவிரமடையும் முன்பே இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பெய்த சிறிய மழைக்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து உதவி பொறியாளர் மனோகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு நாளை தூர்வாரும் பணியை தொடங்குவதாக உறுதி அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    • கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து, கம்பெக்டிங் அண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டண்ட் எனும் முதல் சர்வதேச மாநாடு புதுவை, ஆனந்தா இன் ஓட்டல் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
    • புதுவை வி.சி. ஆர்.சி. தலைவர் டாக்டர். அஸ்வனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து, கம்பெக்டிங் அண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டண்ட் எனும் முதல் சர்வதேச மாநாடு புதுவை, ஆனந்தா இன் ஓட்டல் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.

    மாநாட்டுக்கு விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் தலைமை தாங்கினார்.

    புதுவை வி.சி. ஆர்.சி. தலைவர் டாக்டர். அஸ்வனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதுவை பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் ஜோசப் செல்வின் கவுரவ விருந்தினரக கலந்து கொண்டார்.

    ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் லதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர். கோட்டூர் தொடக்கவுரை ஆற்றினார். கல்லூரி ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் விஷ்ணு பட் மாநாட்டு செயல்பாட்டினை விளக்கும் நினைவுப் புத்தகத்தை வெளியிட்டார். கல்லூரி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் டாக்டர்.ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

    கல்லூரி நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் டாக்டர். கவிதா விழா ஏற்பாட்டினை செய்திருந்தார். மாநாட்டில் லண்டன் இம்பிரியல் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    மேலும் இந்தியாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் பேராசிரியர்களும், மாணவர்களும், மேற்ப–டிப்பு மாணவர்களும் மற்றும் ஆராய்ச்சி துறை மாணவர்களும் கலந்துகொண்டு வாய்வழி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி வழங்கினர்.

    இதில் சிறப்பான விளக்கக்காட்சிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் சென்னை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் டாக்டர். ஹிமாணி டெம்பர்மாவுக்கு "இளம் ஆராய்ச்சியாளர் விருதும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும்" வழங்கப்பட்டது. இறுதியில் மருத்துவ மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர்.
    • இதையடுத்து அபினேஷ் லாரியை நிறுத்தியதும் அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 28) லாரி டிரைவர். இவர் புதுவை இந்திரா காந்தி சிலை வழியாக விழுப்புரத்துக்கு லாரியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தமிழக பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென லாரியை வழிமறித்தனர்.

    இதையடுத்து அபினேஷ் லாரியை நிறுத்தியதும் அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். அப்போது அருகில் இருந்த பொது மக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது அவர்களையும் அந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கினர்.

    அதோடு தங்களை பிடிக்க முயன்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிசென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அபினேஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து லாரிடிரைவர் மற்றும் பொதுமக்களை தாக்கி மிரட்டிவிட்டு சென்ற வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நினைவாக, மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.
    • பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்தியாவில் உள்ள 75 கிளையும் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நினைவாக, மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.

    புதுவை யூனியன் பிரதேசத்திற்கு 2 கிளைகளை அரசு ஒதுக்கியுள்ளது. அதில் ஒன்று புதுவையிலும் மற்றொன்று காரைக்கால் மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ஒரு கிளையும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு மற்றொரு கிளையும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்தியாவில் உள்ள 75 கிளையும் திறந்து வைத்தார்.

    புதுவை புஸ்சி வீதியில் அமைந்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகிளையின் தொடக்க விழாவில் செல்வகணபதி எம்.பி. பங்கேற்று டிஜிட்டல் வங்கி கிளையை திறந்து வைத்தார்.

    அவர் பேசும் போது, புதுவையின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் வங்கி கிளை திறப்பு ஒரு உண்மையான வரப்பிரசாதம்.

    இதன் மூலம் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பது, இருப்புச் சரிபார்ப்பு, வங்கிக் கணக்குகளை அச்சிடுதல், நிதி பரிமாற்றம், நிலையான வைப்புத்தொகையில் முதலீடு, கடன் விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட காசோலைகளுக்கான பணபரிமாற்றம் நிறுத்தம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள், வரி மற்றும் பில் செலுத்துதல் போன்றவற்றை இந்த டிஜிட்டல் வங்கி கிளை எளிதாக்கும்.

    பரிந்துரை வசதிகள் போன்றவை டிஜிட்டல் வடிவில் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை ஊசுடு அகரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க பள்ளியில் தேர்தல் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஊசுடு அகரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க பள்ளியில் தேர்தல் நடைபெற்றது.

    தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர்களின் பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிகள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு–வராக பதவி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    • மக்களுக்காகதான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது.

    புதுச்சேரி:

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் சொங்காவதே ஆகியோர் விழாவில் பங்கேற்றனவிழாவினை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களுக்காகதான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது. நான் மக்களை பார்க்க கூடாது என கூறும் அதிகாரத்தை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது? மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொண்டு அதை அதிகாரிகளுக்கு சொல்வதற்கு தான் இந்த சந்திப்பு கூட்டமே. கவர்னர் அன்போடு மக்களை சந்தித்து குறைகேட்பதில் என்ன தவறு?

    இந்த பிரச்சனையை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன். மக்களே இதற்கு பதில் கூறட்டும். அதிகாரிகள் தினமும் மக்களை எளிதில் சந்திக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்கு முதல்- அமைச்சர் எப்போதும் தடை போட மாட்டார். அண்ணன் நாராயணசாமி அன்று இருந்த கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன். இன்று உள்ள கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன் என செயல்பட்டு வருகிறார்.

    நான் மக்களை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது. கொரோனாவில் இருந்து தடுப்பூசி மூலம் மக்களை காப்பாற்றி, அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியுள்ளோம். இதனை உலக நாடுகளே வியந்து பாராட்டுகின்றன.இன்று 3- வது பொருளாதாரமாக முன்னெடுத்து செல்கிறோம்.

    உலகத்தில் பல நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. நாட்டில் 7500 ஸ்டார்ட் அப் கொண்டு வரப்படுகிறது. இணையதளத்தில் என் படங்களை வைத்து விமர்சனம் செய்வதும், தவறாக பயன்படுத்துவதும் நடந்துவருகிறது. நான் உண்மையாக இருக்கிறேன் அதனை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களுக்கான எனது பணி தொடரும்.

    தெலுங்கானா மக்கள் என்னை பாராட்டி வருகின்றனர். அரசுக்கும் எனக்கும் சில பிரச்சனைகள் உள்ளன. அங்குள்ள முதல்வர் மத்திய அரசை எதிர்க்கிறார். அதனால் நான் அங்கு சில பணிகளை மேற்கொள்ளும்போது என்னை எதிர்க்கிறார். அண்ணன் நாராயண சாமிக்கு என்ன பிரச்சனை. மக்கள் நலனை விட அவர்களது நலன் தான் முக்கியமாக உள்ளது. கவர்னர் என்றாலே நாராயணசாமிக்கு அலர்ஜியாக உள்ளது நேர்மையான ஆட்சி புதுவையில் நடந்து வருகிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை கிழக்கு மாநிலம் சார்பில் உப்பளம் தலைமைக் அலுவலகத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • தி.மு.க.வின் எண்ணப்படி அ.தி.மு.கவை பிளவுபடுத்த முயற்சித்த நயவஞ்சகர்களின் வஞ்சக செயலை தனது மதி நுட்பத்தால் வென்று ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் கட்டிக் காத்தவர் நம் இடைக்காலப் பொதுச்செயலாளர எடப்பாடியார் ஆவார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநிலம் சார்பில் உப்பளம் தலைமைக் அலுவலகத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

    அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கட்சி கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலை படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில், மாநில செயலாளர் அன்பழகன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    தி.மு.க.வின் எண்ணப்படி அ.தி.மு.கவை பிளவுபடுத்த முயற்சித்த நயவஞ்சகர்களின் வஞ்சக செயலை தனது மதி நுட்பத்தால் வென்று ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் கட்டிக் காத்தவர் நம் இடைக்காலப் பொதுச்செயலாளர எடப்பாடியார் ஆவார்.நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து நம்மோடு இருந்த ஒரு சில துரோகிகள் துணையோடு தமிழகத்தில் தி.மு.க.வினர் ஆட்சி அமைத்தனர்.

    பின்னர் தி.மு.க.வின் எண்ணத்தை ஈடேற்ற அ.தி.மு.க. செயல்பாட்டை முடக்கம் செய்து பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட ஒருசிலரின் செயலை அடியோடு ஒழித்து அ.தி.மு.க.வின் மதிப்பையும் மாண்பையும் எடப்பாடியார் கடின உழைப்பால் நிலை நாட்டப்பட்டது.

    ஓராயிரம் துரோகிகள் ஒன்று சேர்ந்துஅ.தி.மு.க.வை அழிக்க நினைத்தாலும் தொண்டர்களின் இரும்பு போன்ற விசுவாசம் என்ற அஸ்திரத்தை அசைக்க கூட முடியாமல் ஓ.பி.எஸ். தலைமையிலான துரோகிகள் கூட்டம் சில்லறை தேங்காய் போன்று காணாமல் போய்விடும்.

    தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் அமையும் போது பூலோக ரீதியில் தமிழகத்தோடு பின்னி பிணைந்துள்ள புதுவை மாநிலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் புனித ஆட்சி மீண்டும் அமைய அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு,.மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, கணேசன், நாகமணி, குமுதன், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா, தொகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம்,பாஸ்கர், துரை, பொன்னுசாமி, கருணாநிதி, ராஜா, சம்பத், குணசேகர், கிருஷ்ணன்,, கமல் தாஸ், வேலவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலன், சிவராமராஜா, செந்தில்முருகன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்கள் கணேசன், அன்பழகன். துணைச் செயலாளர்கள் கணபதி, சத்தியமூர்த்தி, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், பிரகாஷ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை செயலாளர்கள் ராசு, கேசவன், மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், விவசாய அணி இணைச் செயலாளர் சிவக்குமார்,தொகுதி தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் புதுவையில் இருந்து கொம்பாக்கம், ஒதியம்பட்டு, வில்லியனூர் வழியாக பத்துக்கண்ணு வரை 12–ஏ எண் கொண்ட பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • இதனையடுத்து சிவா போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பஸ் இயக்க வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் புதுவையில் இருந்து கொம்பாக்கம், ஒதியம்பட்டு, வில்லியனூர் வழியாக பத்துக்கண்ணு வரை 12–ஏ எண் கொண்ட பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் கொம்பாக்கம், ஒதியம்பட்டு மற்றும் வில்லியனூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

    இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் முறையிட்டனர். இதனையடுத்து சிவா போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பஸ் இயக்க வலியுறுத்தினார்.

    அதனடிப்படையில் பஸ் மீண்டும் இன்று காலை இயக்கப்பட்டது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய பஸ் சேவையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா கொடியசைத்து தொடங்கி வைத்து மக்களுடன் பயணம் செய்தார். மேலும் இன்று ஒரு நாள் முழுவதும் இந்த பேருந்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய சீட்டுக்கான முழு கட்டணத்தையும் எதிர்கட்சி தலைவர் சிவா நடத்துனரிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்துக் கழக மேலான் இயக்குனர் சிவக்குமார், பொது மேலாளர் ஏழுமலை, உதவி மேலாளர் குழந்தைவேலு, பணி கட்டுப்பாட்டாளர் திருவேங்கடம், பி.ஆர்.டி.சி. தொ.மு.ச. சங்க செயலாளர் ராஜேந்திரன், தலைவர் திருகுமரன், வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, விவசாய அணி அமைப்பாளர் சோமு , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜீவானந்த புரத்தில் வீட்டில் காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    ஜீவானந்த புரத்தில் வீட்டில் காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    புதுவை ஜீவானந்த புரம் எம்.ஜி.ஆர். வீதியில் ஒரு வீட்டில் பெரிய அளவில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ரமேஷ் (37) கதிரவன் (52) சிவா (56) சம்பத் ராஜ் (45) மற்றும் அனந்த புரத்தை சேர்ந்த சந்திர சேகரன் (35) வில்லியனூர் உருவையாறு பகுதியை சேர்ந்த பிரபு (31) தட்டாஞ்சாவடியை சேர்ந்த சங்கர் (56) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப்பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு பகுதி இளைஞர்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மைய நிர்வாகி மதன்பாபு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
    • இதில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, மீனவர் அணி அமைப்பாளர் தங்கராசு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு பகுதி இளைஞர்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மைய நிர்வாகி மதன்பாபு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இதில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, மீனவர் அணி அமைப்பாளர் தங்கராசு, எழிலன் ,முன்னாள் கவுன்சிலர் தனசேகர், நவீன், கோபிநாத் ,செந்தில் முருகன், சந்துரு மற்றும் பார்த்திபன், ஸ்ரீகாந்த், ஐடி பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்ராஜ், குமரன், ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உட்பட்ட இந்திராணி செவிலியர் கல்லூரி சார்பில் உலக பெண்கள் மார்பக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி புதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வடமங்கலம் வரை சென்று, மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உட்பட்ட இந்திராணி செவிலியர் கல்லூரி சார்பில் உலக பெண்கள் மார்பக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மல்லிகா கண்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

    மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பொதுமேலாளர் சவுந்தரராஜன், வில்லியனூர் அனை த்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, அரியூர் சுகாதார மைய டாக்டர் பிரேமா, பெண் போலீஸ் அமுதா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், துணை பே ராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி புதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வடமங்கலம் வரை சென்று, மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ெபாதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாண–ரப்பேட்டை சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் சுரேஷ் அனைத்து மின்விளக்குகளையும் புதியாக மாற்றியமைத்து எரிய வைத்துள்ளார்.
    • பிறகு மின்விளக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகளை ெதாகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் சுரேஷ் அனைத்து மின்விளக்குகளையும் புதியாக மாற்றியமைத்து எரிய வைத்துள்ளார்.

    அப்போது உப்பளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதியதாக மின்விளக்கு அமைத்த போது அங்கு புதர் மண்டி கிடந்ததால் மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் இருந்து வந்தது.

    ஆகையால் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமையில் தி.மு.க.வினர் புதுவை நகராட்சி ஊழியர்கள் மூலம் அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த செடி, கொடி, மரம் உள்ளிட்ட புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பிறகு மின்விளக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பிறகு அங்குள்ள செயற்கை நீருற்றையும் சீரமைப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளநிலை பொறியாளர் துரைசண்முகம், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் அஷரப், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×