என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி கடந்த 16-ந் தேதி முதல் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலும், 17-ந் தேதி முதல் திருக்கனூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கி வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக அங்காடி திறந்த சில மணி நேரங்களிலேயே தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி கடந்த 16-ந் தேதி முதல் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலும், 17-ந் தேதி முதல் திருக்கனூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கி வருகிறது.

    பாப்ஸ்கோ அங்காடியில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட தொகுப்பு பை ரூ.800-க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது புதுவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த தொகுப்பு பையை வாங்க புதுவை நகரம் மற்றும் கிராமங்களை சேர்ந்த மக்கள் தீபாவளி அங்காடிக்கு வந்து குவிகிறார்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அங்காடி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த 3 நாட்களாக அங்காடி திறந்த சில மணி நேரங்களிலேயே தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விடுகிறது.

    இதனால் மக்கள் ஏமாந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  11 மணி ஆகியும் தீபாவளி அங்காடி திறக்கப்படவில்லை. ஆனால் பொருட்களை வாங்க மக்கள் 9 மணிக்கு முன்பாகவே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    தொகுப்பு பைகளை வாங்கி கொடுத்து விட்டு வேலைக்கு செல்லலாம் என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் எரிச்சல் அடைந்தனர்.ஒரு சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    முன்தினம் தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விட்டதால் புதிய தொகுப்பு பைகள் வந்த பின்பே அங்காடி திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால், பொருட்களை வாங்க தயாராக இருந்தாலும், அதிகாரிகள் அவற்றை சரியாக அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் செல்லங்கால் வடிகால் வாய்க்காலில் செடி கொடிகள் முட்புதர்கள் அடைத்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் ஒரே பகுதியில் தேங்கி நின்றது.
    • இதில் அங்காளன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் செல்லங்கால் வடிகால் வாய்க்காலில் செடி கொடிகள் முட்புதர்கள் அடைத்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் ஒரே பகுதியில் தேங்கி நின்றது.

    இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து புதுவை பொதுப்பணி த்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் 15 லட்சத்து 7ஆயிரம்நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான தொடக்க பணி நடைபெற்றது.

    இதில் அங்காளன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த வடிகால் வாய்க்காலுக்கு மறுபுறத்தில் கலித் தீர்த்தாள் குப்பம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட அய்யனாரப்பன் கோவிலுக்கு பாதை இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் உள்ள பகுதியை கடந்து மறுக்கரை பகுதிக்கு சென்று சாமியை வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கோயிலுக்கு செல்வதற்கு ஓடை பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு நேரில் சென்று பாலம் கட்டுவதற்கான ஆய்வு மேற்கொண்டார் நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர் , இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும்.
    • தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.10 ஆயிரம் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும்.

    7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் உயர்த்தப்பட்ட நோயாளி பராமரிப்பு படி, செவிலியர் படி உள்ளிட்ட இதர படிகளை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அமலாக்க வேண்டும். அரசாணைப்படி பணிக்கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

    தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.10 ஆயிரம் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில அனைத்துப் பணியாளர் பிரிவு ஊழியர்களும் 7.30 மணி முதல் 9 மணி வரை பணிகளை புறக்கணித்து அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வாயில் கூட்டம் நடத்தினர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன், பொதுசெயலாளர் லட்சுமணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஜானகி, பாக்கியவதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    சுகாதார ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் சாஹீராபானு, ராதாமுத்து உள்ளிடட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். போராட்டத்தில் செவிலியர், மருந்தாளுனர், கிராமப்புற செவிலியர், வார்டு அட்டண்டர், நர்சிங் ஆர்டர்லி, அறுவை கூட ஊழியர்கள், உள்பட அனைத்து பிரிவு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.
    • முத்தியால்பேட்டை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஜந்தா சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.

    இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் முத்தியால்பேட்டை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஜந்தா சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு துணை செயலாளர் பாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் மதிவாணன், பிரதேச கமிட்டி சரவணன். நகர குழு உறுப்பினர் மணவாளன் வனஜா, முத்துகிருஷ்ணன், மனோகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் கடந்த 17-ந் தேதி முற்றுகையிட்டனர்.

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதில் புதுவையின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் சம்பா நெல் பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர் பல பகுதிகளில் விவசாயிகள் நடவு நட்டுள்ளனர்.

    மழைக்காலத்திற்கு முன்பாக வடிகால் வாய்க்கால்கள் பாகூர் பகுதியில் தூர்வாரப்படாததால் சிறிய மழைக்கு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் கடந்த 17-ந் தேதி முற்றுகையிட்டனர்.

    இந்நிலை நேற்று இரவு பாகூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி மழை நீர் வெளியேற முடியாமல் இருந்தது.

    சாலை மறியல் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  ஒன்று கூடினர் குருவி நத்தம் தூக்கு பாலத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் கூறும்போது, போர்க்கால அடிப்படையில் முன்கூட்டியே தூர்வாரக் கோரி நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் பொதுப்பணித்துறை அலட்சியம் காட்டியதால் நடவு செய்யப்பட்ட விவசாய நிலங்கள் தற்பொழுது நீரில் மூழ்கி உள்ளன.

    இது வெளியேற்ற படாவிட்டால் நடப்பட்ட நடவுகள் அனைத்தும் அழுகிவிடும். வாய்க்கால்கள் தூர் வாரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார்.

    • புதுவை அரசு சார்பு நிறுவனமாக பாண்லே காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு பல ஆண்டுகளாக பால் வழங்கி வருகிறது.
    • பற்றாக்கு–றையை போக்க அவசர கதியில் பாண்லே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சார்பு நிறுவனமாக பாண்லே காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு பல ஆண்டுகளாக பால் வழங்கி வருகிறது. பாண்லே அதிகாரிகளின் கமிஷன் பேராசையினால் தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்த செயற்கையான பால் தட்டுப்பாட்டினால் புதுவை மாநில மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.பால் பற்றாக் குறையினால் பாலுக்கு பதிலாக பவுடரை கலந்து வினியோகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

    இந்த செயல் அதிர்ச்சியையும் வேத–னையும் அளிக்கக்கூடியது, இந்த கொடுஞ்செயலை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. பற்றாக்கு–றையை போக்க அவசர கதியில் பாண்லே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    பாண்லே பால் குழந்தைகள், மாணவர்களுக்கு அதிக அளவில் பெற்றோர் கொடுக்கின்றனர். பவுடர் பாலால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு எற்படும். மாணவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே, குழந்தைகள், மாணவர்கள் ஆரோக்கியத்துடன் அரசு விளையாடாமல் கொள்முதல் செய்து பாலை வழங்க வேண்டும்.

    புதுவை மக்களுக்கு இலவசங்களை வழங்குவது மட்டுமே முதல்-அமைச்சரின் வேலை இல்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு காண்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமையாகும்.

    ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் மவுனம் காப்பதும், அதற்கு பதிலாக கவர்னர் மக்கள் பிரச்சினைகளுக்கு அறிவிப்பு வெளியிடுவது ஜனநாயக கேலிக்கூத்து.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் உறங்கிக் கொண்டிருந்தால் விரைவில் சட்டமன்றம் இல்லா யூனியன் பிரதேசமாக புதுவை மாறிவிடும் என்று அ.தி.மு.க. சார்பில் எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் 61-வது தின வார விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் சவுந்தரராஜன், பார்மசி கல்லூரி டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் 61-வது தின வார விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் விழாவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மேலாண் இயக்குனர் ராஜுவ் கிருஷ்ணா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர்.வித்யா தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் சவுந்தரராஜன், பார்மசி கல்லூரி டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக புதுவை பார்மசி கவுன்சிலின் தலைவர் ஜெகநாதன், துணைத் தலைவர் வினோத்குமார், பதிவாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

    வில்லியனூர் சிவன்கோவில் கோபுர வாசலில் இருந்து புறப்பட்ட பேரணி, நான்கு கோபுர தெருக்களின் வழியாக சென்று வில்லியனூர் புறவழிச்சாலையில் முடிவடைந்துஇந்த நிகழ்ச்சியில் வில்லியனூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கொண்டல பாலாஜிராவ், பார்மசி கல்லூரி மருத்துவ துணை பேராசிரியர்கள் ஜனார்த்தனன், நிர்மலா, ரகுராமன், ஞானஅனிதா, ஜீவிதா, சென்னியப்பன், காயத்ரி, கஸ்தூரி மற்றும் துறை பேராசிரியர்கள் மருந்தாளுனர்கள், மாணவர்கள் ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மருத்துவ முகாம் விளையாட்டுப் போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளன.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பிரான்சுவா தோப்பு பகுதிகளில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரடியாக மக்களை வீடு வீடாக சந்தித்து குறைகேட்பு நடத்தினார்.
    • அதற்கு 3 மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டார், தண்ணீர் இணைப்பு கொடுத்த பின் தண்ணீர் பிரச்சினை வராது என்று எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பிரான்சுவா தோப்பு பகுதிகளில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரடியாக மக்களை வீடு வீடாக சந்தித்து குறைகேட்பு நடத்தினார்.

    அப்போது அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் குடிநீர் பிரச்சினை, வாய்க்கால் பிரச்சினை, மின் வெட்டு பிரச்சினை, துப்புரவு பணி பிரச்சினை ஆகியவற்றினை தெரிவித்தனர்.

    உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. தண்ணீர் பிரச்சினை குறித்து செல்போனில் உதவிப் பொறியாளர் வாசனிடம் பேசினார். அம்பேத்கர் சாலையிலிருந்து புதிய தண்ணீர் இணைப்பு பொருத்திக் கொடுப்பதாக அதிகாரி கூறினார்.

    அதற்கு 3 மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டார், தண்ணீர் இணைப்பு கொடுத்த பின் தண்ணீர் பிரச்சினை வராது என்று எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. மின்வெட்டு குறித்து பேசினார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் அங்குள்ள பழைய மின்கம்பிகளை அகற்றி புதிய கம்பிகளை விரைந்து மாற்றி கொடுத்தனர்.

    பின்பு மின்வெட்டு திருத்த வேலைகளை சம்பவ இடத்திலே மின்துறை ஊழியர்கள் சரி செய்து கொடுத்தனர். இனிமேல் அங்கு மின்வெட்டு பிரச்சினை வராது என்று உறுதி அளித்தனர்.

    வாய்க்கால் நீர் சரியாக செல்லவில்லை, குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை என்று எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் தெரிவித்ததால் நகராட்சி டாக்டர் துளசிராமனிடம் இது குறித்து தெரிவித்து விரைந்து துரித நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    இதில் தி.மு.க. பிரமுகர்கள் நோயல், அஷ்ரப், கிளை செயலாளர் ஜெயசங்கர் மற்றும் காலப்பன், காந்தி,அசோக், அறிவழகன், பஸ்கல், அரவிந்த், சிரஞ்சீவி, ரகுமான்,மோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை பிம்ஸ் மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் தேசிய 4-வது பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • பூஞ்சை தொற்று குறித்தும், அதனை மருத்துவ ரீதியாக நிபுணர்கள் கையாளுதலின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை பிம்ஸ் மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் தேசிய 4-வது பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    கல்லூரி அரங்கில் நடைபெற்ற பயிற்சி பட்டறைக்கு, பிம்ஸ் மருத்துவ நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி, கருத்தரங்க கையேட்டை வெளியிட்டு, பூஞ்சை தொற்று குறித்தும், அதனை மருத்துவ ரீதியாக நிபுணர்கள் கையாளுதலின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

    பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சசிகலா வரவேற்றார்.

    தேசிய பயிற்சி பட்டறையில் புதிய தொழில் நுட்பத்தோடு பூஞ்சை தொற்று நோய் பி.சி.ஆர் மற்றும் ரேபிட் முறையில் கண்டறிதல், புதிய வகை தொற்று கண்டறிதல், அது குறித்த சோதனை முறை பற்றி பங்கேற்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

    இதில், பிம்ஸ் மருத்துவமனை முன்னாள் நுண்ணுயிரியல் துறை தலைவர் ரெபா, சண்டிகர் முதுநிலை கல்வி நிலையை டாக்டர் சிவபிரகாஷ், டாக்டர் அனுபமா உள்பட பல மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் டாக்டர் ஷீலாதேவி நன்றி கூறினார்.

    • ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.
    • தமிழ் வழியில் மருத்துவ கல்விக்கான புத்தகம் தயாரிக்க குழு அமைக்கப்படும்.

    புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்ற துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்து குழு அமைக்கப்படும்.

    மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழுமையாக தமிழ் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும்.

    சுமார் 6 மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்களை தமிழில் தயாரிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும். ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தாய் மொழியான நம் தமிழ் மொழி மருத்துவக் கல்வியை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும், ஒரு மருத்துவர் என்ற முறையில் செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி பாக்கமுடையான்பேட் மெயின் ரோடு ஜீவா காலணி செல்வவிநாயகர் கோவில் அருகில் நடந்தது.
    • புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி பாக்கமுடையான்பேட் மெயின் ரோடு ஜீவா காலணி செல்வவிநாயகர் கோவில் அருகில் நடந்தது.

    புதுவை கிழக்கு மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார்.மேற்கு மாநில இணைச்செயலாளர் திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்திக்கேணி பாஸ்கரன், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் கமல்தாஸ், உழவர்கரை கிழக்கு நகர செயலாளர் சித்தானந்தம், கதிர்காமம் தொகுதி செயலாளர் வேலவன், லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் கிருஷ்ணன்,நகர தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் நூர்ஜஹான், எழுத்தாளர் தில்லை செல்வம், புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் ஏழை எளிய 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை வழங்கினார்கள்.

    கூட்டத்தில் முன்னாள் என்.எல்.ஏ .ராஜா ராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காந்தி, குமுதன்,சேரன், கிழக்கு மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மேற்கு மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் இளங்கோ, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவரணி செயலாளர் பிரதீப், மாநில இலக்கியணி செயலாளர் ராமசாமி, மாநில மகளிர் அணி தலைவி மகேஷ்வரி, மகளிர் அணி துணை செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, வர்த்தக அணி துணைச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், பொன்னுசாமி,, துரை, கருணாநிதி, பாஸ்கரன், ராஜா, சம்பத், குணசேகரன், கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கமலா, பாலன், வெங்கடேசன், செந்தில்முருகன், அன்பு முருகன், குணசேகரன், சூர்யா, மற்றும் சவரிநாதன், செல்வம், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தட்டாஞ்சாவடி தொகுதி துணைச் செயலாளர் சதீஷ் என்ற பாலாஜி நன்றி கூறினார்.

    • புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண்டும்.
    • ஊர்வலத்தை துணைத் தலைவர் முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண்டும்.

    அமைப்புசாரா நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள் சட்டமன்றம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பிரதேச தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக காமராஜர் சிலை அருகே ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை துணைத் தலைவர் .முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் சட்டமன்றம் அருகில் நிறைவடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை ஆட்டோ சங்க கௌரவ தலைவர் முருகன் முடித்து வைத்து பேசினார். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ஜீவானந்தம், மணவாளன் ,விஜயகுமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர் போராட்டத்தின் இறுதியில் முதல் -மைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    ×