என் மலர்
புதுச்சேரி
- புதுவை பிற்படுத்தப்பட்டோ ர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு துறை சார்பில் 19 சலவை தொழிலாளர்களுக்கு இலவசமாக ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
- 2 நாதஸ்வர இசைக்கலை ஞர்களுக்கு ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள நாதஸ்வர பொருட்களை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. இலவச மாக வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பிற்படுத்தப்பட்டோ ர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு துறை சார்பில் 19 சலவை தொழிலாளர்களுக்கு இலவசமாக ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. மேலும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தவில் கலை ஞருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள தவில்,அதன் இணை பொருட்கள் மற்றும் 2 நாதஸ்வர இசைக்கலை ஞர்களுக்கு ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள நாதஸ்வர பொருட்களை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. இலவச மாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை உதவி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பெண்கள் மகளிர் குழு தலைவி தமிழரசி தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டனர்.
- அவர்களுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்தி சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பெண்கள் மகளிர் குழு தலைவி தமிழரசி தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்தி சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார். ர ா ஜ் பவ ன் தொகுதி பா.ஜனதா தலைவர் நாகராஜன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கதிரவன், சதீஷ்குமார், அனந்தபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வி.பி.ராம லிங்கம் எம்.எல்.ஏ.விடம் பல்வேறு குறைகளை தெ ரிவித்தனர். இதுபற்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
- 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தலித் சமுகத்தை சேர்ந்த மல்லிகார்ஜீன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டது பெருமையாகும்.
- தெலுங்கான கவர்னராக உள்ள தமிழிசை அங்கு மக்கள் குறைகளை கேட்டதாக கூறுகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தலித் சமுகத்தை சேர்ந்த மல்லிகார்ஜீன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டது பெருமையாகும்.
காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைப்பது, பா.ஜனதா சவால்களை சந்திப்பது போன்ற 2 சவால்கள் அவர் முன்னே உள்ளது. அவருடைய திறமை, கட்சி பற்று ஆகியவை மூலம் சிறந்த காங்கிரஸ் தலைவராக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தெலுங்கான கவர்னராக உள்ள தமிழிசை அங்கு மக்கள் குறைகளை கேட்டதாக கூறுகிறார். இது சம்மந்தமாக ஐதராபாத் அரசியல் கட்சியினர் மற்றும் அங்குள்ள பத்திரிக்கையாளர்களை கேட்டபோது அவர் தெலுங்கானா கவர்னராக வந்த பிறகு அப்படிப்பட்ட எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என தெளிவாக கூறியுள்ளனர்.
நான் அவருக்கு ஒரு சாவல் விடுகிறேன். இப்போது தெலுங்கானாவில் பொதுமக்கள் குறைகளை கேட்கப் போகிறேன் என கூறுவாரா? பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்ததில் எந்த பிரச்சினையாவது தீர்த்து வைத்துள்ளாரா? அங்கு அவர் இப்படி செயல்பட முடியாது. தெலுங்கானா சமீதி பொறுப்பாளர்கள் எதிர்த்து போராடுவார்கள்.
அவரவர் அவர்களது அதிகார எல்லைக்குள் செயல்பட வேண்டும். தெலுங்கானாவின் முழுநேர கவர்னரான தமிழிசை ஏன் புதுவையிலேயே தங்கி உள்ளார்? அங்கு ஏன் செல்வதில்லை? தெலுங்கானாவில் மாநில அரசு விழாக்களில் அவருக்கு அழைப்பு வருவதில்லை. மத்திய அரசு விழாக்களில் மட்டுமே பங்கேற்கிறார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் பாப்ஸ்கோ அங்காடி செயல்படுகிறது. புதுவையில் மானிய தொகுப்பு பைகளை வாங்க 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? பால் பவுடரில் தண்ணீர் கலந்து பால் விற்பனை நடைபெறுகிறது.
தமிழகத்தை போல புதுவையிலும் கவர்னரிடம் ஒப்புதல் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். புதுவையில் புது கலாச்சாரமாக பப் ஆரம்பித்துள்ளது. இதில் போதை பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுவை கலாச்சாரம் ரங்கசாமி ஆட்சியில் சீரழிந்து வருகிறது. பப் அருகில் வசிப்பவர்கள், அதிக சத்தம், மது போதையில் வருபவர்களால் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
மத்திய அரசு புதுவை அரசுக்கு நிதி கொடுத்திருந்தால் அதனை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டியதுதானே? ஏன் மூடு மந்திரமாக வைத்துள்ளார்கள். சபாநாயகர் தற்போது 3-வது சூப்பர் சி.எம். ஆக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
- புதுவையில் அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் தீபாவளி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
- இந்த நிலையில் கட்டிட தொழிலாளர்களுக்கு தற்பொழுது ரூ.3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் தீபாவளி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளாக அந்த தொகை சரிவர வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு இவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தீபாவளி உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் அரசை வலியுறுத்தி பல கட்ட போராடட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கட்டிட தொழிலாளர்களுக்கு தற்பொழுது ரூ.3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
தீபாவளிக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அரசு இனியும் காலம் கடத்தாமல் கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் 3 ஆயிரத்து 500 ரூபாய், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உடனடியாக தீபாவளி உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த பணத்தை தீபாவளிக்கு முன்னதாக வங்கியில் செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடதப்பட்டது.
அதன்படி ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் தலைமையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஜென்மராகினி மாதா ஆலயம் முன்பு ஒன்று கூடினர்ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்கள் தயாளன், முத்துராமன், மாநில துணைத்தலைவர் சேகர், ஏ.ஐ.டி.யூ.சி. அந்தோணி மற்றும் பலர் சட்டசபை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை தடுப்பு கட்டைகளை போட்டு போலீசார் தடுத்தனர்.
ஆனால் தடுப்பு கட்டைகளை கீழே தள்ளிவிட்டு அவர்கள் முன்னேறி சென்றனர். பின்னர் அவர்கள் ஆம்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் தீபாவளி உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி, பெரியக்கடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் துறை செயலர் வந்து இன்று மாலைக்குள் தீபாவளி உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறினர். இதனயைடுத்து முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
- பஸ்சுக்காக காத்திருந்த போது பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அஞ்சலை அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
புதுச்சேரி:
பஸ்சுக்காக காத்திருந்த போது பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுவை தேங்காய்திட்டு புது நகர் மருதம் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது தாய் அஞ்சலை. இவர் பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்திவருகிறார்.
சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கடலூர் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அஞ்சலை அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
இந்த நகை பறிப்பில் சென்னை சோளி ங்கநல்லூரை சேர்ந்த அபி என்ற அபி மன்யூ (வயது 27). என்பவர் தலைமறைவாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சென்னை சோளிங்கநல்லூர் சென்று அபியை கைது செய்தனர்.
அவரை புதுவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.
- புதுவையில் இன்றுள்ள மருத்துவக் கல்விச் சூழலில் தமிழ் வழி மருத்துவக் கல்வியோ அல்லது தமிழ் வழி மருத்துவக் கல்லூரியோ தேவையற்றது.
- மொழியை வைத்து புதுவையில் அரசியல் செய்ய முடியாது. வாக்கு வங்கியையும் உயர்த்த முடியாது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் இன்றுள்ள மருத்துவக் கல்விச் சூழலில் தமிழ் வழி மருத்துவக் கல்வியோ அல்லது தமிழ் வழி மருத்துவக் கல்லூரியோ தேவையற்றது. இது பற்றிய கொள்கை முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டு அறிவிக்கப் படவில்லை. நலவழித்துறை அமைச்சராக இருக்கும் முதல்-அமைச்சர் இந்த ஆண்டு பட்ஜெட்டிலோ அல்லது பொது வழியிலோ இதுபற்றிக் கூறவில்லை.
பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் தொழிற்கல்வியைக் கூட தாய்மொழியில் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களை திருப்திப் படுத்துவதற்காக கவர்னர் தாய்மொழி தமிழில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று கூறுகிறார். மொழியை வைத்து புதுவையில் அரசியல் செய்ய முடியாது. வாக்கு வங்கியையும் உயர்த்த முடியாது.
புதுவையில் பொதுமக்களோ அல்லது மாணவர்களோ தமிழ் மொழியில் மருத்துவம் பயில வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை . நீட் முறை வந்ததிலிருந்து தனியார் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் படித்தவர்கள் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்கின்றனர். அவர்கள் மருத்துவம் சார்ந்த விஞ்ஞான பாடங்கள் அனைத்தையும் சிறுவயதிலிருந்தே ஆங்கிலத்தில் கற்று வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஆங்கில பயிற்று மொழி மருத்துவக் கல்லூரியை தான் விரும்புகிறார்கள் சென்டாக் மூலமாக மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர் மாணவர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் குற்றம் சாட்டுகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளின் உண்மை தன்மையை அறிவதற்கு ஒரு குழு அமைத்துகுறைகளைப் போக்க கவர்னர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசாங்கம் எவ்வளவு இடங்களை பெற வேண்டும் என்பதில் இந்த ஆண்டும் அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவில்லை . இது சம்பந்தமாககவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்ட–ணங்களைப் பற்றியும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் ப்பட்டுள்ளனவா? இவற்றை தீர்த்து வைப்பது கவர்னரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
இப் பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதுதான் இன்றைய அவசியமே தவிர தமிழ் வழி மருத்துவக் கல்வி அல்ல. தேவைப்படின் எதிர்காலத்தில் இதைப்பற்றி முறைப்படி திட்டமிட்டு செயல்படுத்தலாம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.
புதுச்சேரி:
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரி ஆரோக்கியம் கிளாண்டின் வரவேற்றார். வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் 50 பேர் பாகூர் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள குளத்தைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.
10 சாக்குகளில் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி முன்னிலையில் ஒப்படைத்தனர். முடிவில் மனையியல் விரிவுரையாளர் அகிலா நன்றி கூறினார்.
- புதுவை ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வந்தனர்.
- இதையடுத்து, பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு ரெட்டியார்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவை ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வந்தனர்.
ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் குடியிருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தையும் ரெயில்வே துறையினர் இடித்து அகற்றினர். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு ரெட்டியார்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. இந்நிலையில் வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்னிலையில் பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உப்பளம் தொகுதி தி.மு.க செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், தி.மு.க. இளைஞரணி ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர்கள் நோயல், அஷ்ரப், கிளை செயலாளர்கள் செல்வம், ரவிக்குமார், காலப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை, மருத்துவ சேவையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து உரையாற்றினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை, மருத்துவ சேவையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு பேச்சு குறைபாடுகள் மற்றும் செவித்திறன் பிரிவின் இயக்குனர் ராஜன் தலைமை தாங்கினார். மும்பை, காது கேளாத மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும், தேசிய மற்றும் பண்பாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் ஆலோசகருமான ரங்கசாமி கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பத்துடன் செய்ய வேண்டிய அவசியம் பற்றி பேசினார்.
புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து உரையாற்றினார். மேலும் மருத்துவமனை, மருந்தகம், ஆய்வுக்கூடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.
- ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- விழாவிற்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்கத் தலைவராக ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக பக்தவச்சலம், அன்பரசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இதற்கான பதவியேற்பு விழா கிருமாம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு, முத்தாலம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர் அன்புராஜ், ராமலிங்கம், தணிகைவேல், வைத்தியநாதன், முருகன், ஆசிரியர்கள் மணிபாலன், விவேகானந்தன் பிள்ளையார்குப்பம் பெருமாள், கிருஷ்ணதாஸ், மணிபாலன், ஜெயபாலன், பிரணாவ்மூர்த்தி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியை மேம்படுத்தும் பணி மற்றும் வாய்க்கால் கல்வெட்டுகள் புதுப்பிக்கும் பணி, புதிய வாய்க்கால் கல்வெட்டுகள் அமைக்கும் பணி, பாதாள கழிவுநீர் தொட்டிகள் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடியே 81 லட்சம் நிதி உதவியுடன் நடைபெறுகிறது.
- புதுவை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட பிரிவு மூலம் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அண்ணாசாலை சின்ன வாய்க்கால் வீதி இணைப்பு பகுதியில் நடந்தது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியை மேம்படுத்தும் பணி மற்றும் வாய்க்கால் கல்வெட்டுகள் புதுப்பிக்கும் பணி, புதிய வாய்க்கால் கல்வெட்டுகள் அமைக்கும் பணி, பாதாள கழிவுநீர் தொட்டிகள் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடியே 81 லட்சம் நிதி உதவியுடன் நடைபெறுகிறது.
புதுவை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட பிரிவு மூலம் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அண்ணாசாலை சின்ன வாய்க்கால் வீதி இணைப்பு பகுதியில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அரசு செயலரர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார செயற்பொறியாளர முருகானந்தம், உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- புதுவையில் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி கடந்த 16-ந் தேதி முதல் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலும், 17-ந் தேதி முதல் திருக்கனூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கி வருகிறது.
- கடந்த 3 நாட்களாக அங்காடி திறந்த சில மணி நேரங்களிலேயே தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விடுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி கடந்த 16-ந் தேதி முதல் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலும், 17-ந் தேதி முதல் திருக்கனூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கி வருகிறது.
பாப்ஸ்கோ அங்காடியில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட தொகுப்பு பை ரூ.800-க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது புதுவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த தொகுப்பு பையை வாங்க புதுவை நகரம் மற்றும் கிராமங்களை சேர்ந்த மக்கள் தீபாவளி அங்காடிக்கு வந்து குவிகிறார்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அங்காடி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த 3 நாட்களாக அங்காடி திறந்த சில மணி நேரங்களிலேயே தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விடுகிறது.
இதனால் மக்கள் ஏமாந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 11 மணி ஆகியும் தீபாவளி அங்காடி திறக்கப்படவில்லை. ஆனால் பொருட்களை வாங்க மக்கள் 9 மணிக்கு முன்பாகவே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தொகுப்பு பைகளை வாங்கி கொடுத்து விட்டு வேலைக்கு செல்லலாம் என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் எரிச்சல் அடைந்தனர்.ஒரு சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முன்தினம் தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விட்டதால் புதிய தொகுப்பு பைகள் வந்த பின்பே அங்காடி திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால், பொருட்களை வாங்க தயாராக இருந்தாலும், அதிகாரிகள் அவற்றை சரியாக அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






