search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Awareness"

    • பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.

    புதுச்சேரி:

    பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரி ஆரோக்கியம் கிளாண்டின் வரவேற்றார். வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.

    நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் 50 பேர் பாகூர் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள குளத்தைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.

    10 சாக்குகளில் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி முன்னிலையில் ஒப்படைத்தனர். முடிவில் மனையியல் விரிவுரையாளர் அகிலா நன்றி கூறினார்.

    • கலெக்டர் உத்தரவின்பேரில் குப்பம்மாள்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி கொடைக்கானல் கீழ்மலை கே.சி.பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம்மாள்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா இளையராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பொதுமக்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது. முடிவில் ஊராட்சி செயலர் ரெங்கராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • குப்பைகளை தரம் பிரித்து தர வலியுறுத்தல்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சென்னாவரம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவையற்ற பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது துணிப்பை மட்டும் உபயோகிக்க வேண்டும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரசார தூதர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்திருக்கிறார். #PlasticAwareness
    சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” இலச்சினை, மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

    பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.

    திரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

    இதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” பிரச்சாரத்தை வருகிற 25-ந்தேதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துவக்கி வைப்பார்கள்.



    மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் தட்டு, கோப்பை போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிகத்துறை மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான 21 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை 5 தொழில் முனைவோர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூறியதாவது:-

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையை நாம் அடைய முடியும். பிளாஸ்டிக் பொருட்களினால், பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்ற காரணத்தினாலே இதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

    பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

    சூர்யா, கார்த்திக், ஜோதிகா ஆகியோருக்கு படப்பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×