என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் அதிகளவில் பணம் வைத்து சூதாடுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    காசு வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் அதிகளவில் பணம் வைத்து சூதாடுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வைத்திகுப்பம், குருசுக்குப்பம், சோலைநகர், அங்காளம்மன் நகர் மற்றும் நடுகுப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்ற பிரகாஷ் (வயது38),ராஜா(40), மகேஷ்(61), செல்லப்பன்(46), சதீஷ்(24), வல்லத்தான்(31), செழியன்(30), ஆனந்த்(35), சங்கர்(40) மற்றொரு வல்லத்தான்(32) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ.34 ஆயிரத்து 180 மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர்-3-ல் செயல்பட்டு வரும் பெரியபாளையத்தம்மன் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.
    • நகராட்சி ஒத்துழைப்புடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அனைத்து நடவடிக்கைகளையும் விடா முயற்சியுடன் மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர்-3-ல் செயல்பட்டு வரும் பெரியபாளையத்தம்மன் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

    அதையொட்டி, தற்காலிகமாக அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் பள்ளி செயல்படுவதற்காக கல்வித்துறை மற்றும் நகராட்சி ஒத்துழைப்புடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அனைத்து நடவடிக்கைகளையும் விடா முயற்சியுடன் மேற்கொண்டார்.

    சமுதாய கூடத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தற்காலிக பள்ளியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கல்வி துறை (பெண்கள்) துணை இயக்குனர் நடனசபாபதி, குமார் (வட்டம்-2), தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன் , மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மீனவர் அணி விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் செல்வம்பால் நன்றி கூறினார்.

    • கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியகோயில், மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36) லாரி டிரைவர்.
    • இவருக்கு இந்திரா என்ற மனைவியும் 2 மகள் ஒரு மகன் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியகோயில், மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36) லாரி டிரைவர். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் 2 மகள் ஒரு மகன் இருந்து வருகிறது.

    வினோத் குமார் குடும்பத்துடன் திருவண்ணாமலையில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியகோவில் பகுதியில் மாமியார் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இதற்கிடையே வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் வினோத் குமார் குடித்துவிட்டு வந்து இந்திராவிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் இந்திரா தனது மகள்களை அழைத்துக் கொண்டு தனது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த வினோத்குமார் மணமடைந்து வீட்டில் இருந்த மின் விசிறியில் மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகூர் தொகுதி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • சண்முகமுருகன் திறந்து வைத்து மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் பார்வை யிட்டு பாராட்டினார்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். கண்காட்சியை ஓய்வு பெற்ற துணை முதல்வர் சண்முகமுருகன் திறந்து வைத்து மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் பார்வை யிட்டு பாராட்டினார்.

    கண்காட்சியில் மாணவர்களின் 96 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தர், தென்னரசு, சசிக்குமார், சுமதிராகவன், பாவாடைசாமி, வினோத், சதீஷ், பாலிவிஜய், வினோத், வெங்கடேசன், சரிதா, செல்வபிருந்தா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சி வகுப்பு ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • பயிற்சியாளர்கள் ரஞ்சித் துணை மேலாளர், சுரேஷ், கவுஷல், எர்னஸ்ட் துரை, ரவீனா ஆகிய மென்திறன் பயிற்சியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சி வகுப்பு ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் டீன். டாக்டர் பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சென்னை கிங்ஸ் இன்ஸ்டி டியூட் பயிற்சியாளர்கள் ரஞ்சித் துணை மேலாளர், சுரேஷ், கவுஷல், எர்னஸ்ட் துரை, ரவீனா ஆகிய மென்திறன் பயிற்சியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் முன்னிலை வகித்து விருந்தினர்களை வரவேற்றார்.

    ஒரு வாரம் நடந்த இப்பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நபரின் ஆளுமையை பிரதிபலிக்கும் தலைமைப் பண்பு, பொறுப்பேற்கும் பண்பு, மொழி ஆளுமை, சமூக நல்லினக்கம், பேச்சுதிறன் போன்ற மனிதவள திறன்களை மேம்படுத்தும் வகையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, ஒருங்கிணைப்பாளர் வள ர்மதி, விரிவுரையாளர்கள் தமிழ்செல்வன், ஜெயசூர்யா மற்றும் குளோரி மெர்லின் மற்றும் மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் 24-வது பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது.
    • துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் 24-வது பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். டி.சி.எஸ்., நிறுவனபொது மேலாளர் டேனியல் ஆனந்த் கிறிஸ்டோபர், டேலன்ட் ஆக்யூசிஷன் குழு தலைவர் விக்னேஷன் பரமசிவம் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சிகளை பட்டியலிட்டார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மணக்குளவிநாயகர் இன்ஸ்ட்டி டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் மலர்க்கண், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளார் ஜெயக்குமார், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட் டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில், நன்ன டத்தையில் உள்ள 27 கைதிகளின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட் டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி தலைமை நீதிபதி செல் வநாதன், தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் டிஜி.பி., ஆனந்தமோகன், சிறைத்துறை ஐ.ஜி ரவி தீப் சிங் சாகர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார், சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், நன்ன டத்தையில் உள்ள 27 கைதிகளின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 14 ஆண் டிற்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 12. கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டத

    சிறை கைதிகள் பற் றிய விபரங்கள், அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு வழக்குகள், அவர்களை விடுதலை செய்வதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து 2 கைதிகள் மட்டும் விடுவிக்க முடிவு செய்து கோப்பு முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது கவர்னரின் ஒப்புதலை பெற்று, உள் துறை அமைச்சர் வாயிலாக கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரபாளையம் மீனவ மக்களுக்காக சில கோரிக்கைகளை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்வைத்தார்.
    • சுனாமி நினைவுச் சின்னத்திற்கான பூமி பூஜை 2 மாதத்துக்குள் உங்கள் தலைமையில் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரபாளையம் மீனவ மக்களுக்காக சில கோரிக்கைகளை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்வைத்தார்.

    அதில் சுனாமி நினைவுச் சின்னம் அமைத்து தர இருக்கும் நிலைப்பாடு சம்பந்தமாகவும், முதியோர் தொகை விரைவில் அளித்திட வேண்டியும், அளிக்க படமால் இருக்கும் சொசைட்டி பணம், மீனவர்களுக்கு வலை கொட்டா அமைப்பது ஆகியவை சம்பந்தமாக அதிகாரிகளை கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    இதற்கு மீன்வளத் துறை அதிகாரிகூறும்போது:- சுனாமி நினைவுச் சின்னத்திற்கான பூமி பூஜை 2 மாதத்துக்குள் உங்கள் தலைமையில் நடைபெறும். வலை கொட்டா அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எங்கள் துறைமூலமே மேற்கொள்ளப்படும், பய னாளிகளுக்கு விரைவில் முதியோர் தொகை அளிக்கப்படும்.

    சொசைட்டி பணம் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இதில் மீனவர் அணி மாநில அமைப்பாளர் தனசேகரன், கிளை செயலாளர் முரளி மற்றும் காலப்பன், தேசிங்கு, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கல்மண்டபம் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த நிலையில் நெட்டப்பாக்கம் அருகே கல் மண்டபத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    கல்மண்டபம் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை நகர பகுதியில் மட்டுமே கஞ்சா புழக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது கிராம பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது.

    குறிப்பாக நெட்டப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனை அவ்வப்போது போலீசார் கண்டறிந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நெட்டப்பாக்கம் அருகே கல் மண்டபத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் நைசாக நழுவ முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிபிடித்து அவரது சட்டை பையில் சோதனையிட்டனர். அப்போது அவர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    மொத்தம் 200 கிராம் கஞ்சாவை அந்த வாலிபர் பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி(வயது22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புகழேந்தியை கைது செய்தனர்.

    • வில்லியனூர் தொகுதியில் பருவ மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க , எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
    • வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் பருவ மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க , எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்தவகையில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டப் பிரிவு சார்பில் ஆத்துவாய்க்கால், கருப்பட்டி வாய்க்கால், மாதா கோவில் , பாலாஜி நகர், ஒதியம்பட்டு, பெரம்பை வாய்க்கால், பெரியபேட் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி மணிகண்டன், தொகுதி துணை செயலாளர் அங்காளன், பழனிசாமி, வேலு, ஜெகன்மோகன், தட்சணாமூர்த்தி, தேசிங்கு, ரமேஷ், ஹரி, கிருஷ்ணன், ராஜி, தர்மராஜ், ரமணன், சபரி, ரபிக், செல்வநாதன், கே.வி.ஆர்.பாலு, நாகப்பன், திலகர், சுப்பிரமணி, ஏழுமலை, ராமஜெயம், கிருஷ்ணசாமி, கோபி, வீரா, முத்து, ரகு, அருள், சுரேஷ், அய்யனார், வேதாச்சலம், செல்வம், நாகராஜ், மிலிட்டரி முருகன், நாதன், எம்.ஜி.ஆர். சிலை முருகன், வரதன், விக்னேஷ் அருண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • சேலம் விநாயக மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா ரிப்லக்ஸ் அடிரா என்ற பெயரில் நடைபெற்றது.
    • ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன். டாக்டர் கொட்டூர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    சேலம் விநாயக மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா ரிப்லக்ஸ் அடிரா என்ற பெயரில் நடைபெற்றது. முன்னதாக மருத்துவ மாணவர்களிடையே விளையாட்டு, கலை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு விழாவிற்கு மாணவர் சங்க செயலர் அமிர்தா பத்மகுமார் வரவேற்றார். விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர்.அனுராதா கணேசன் குத்துவிளக்கேற்றி விழாவை வைத்தார். பின்னர் விழாமலரை வெளியிட்டார்.

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன். டாக்டர் கொட்டூர் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அருணாச்சலம் வாசித்தார். விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகர்நிலை பல்கலைக்கழக உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் டீன். டாக்டர் சீதீஷ் கோஷ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக புதுவை சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    முடிவில் சேர்மன் விஷால் நன்றி கூறினார். இந்த விழாவில் மேற்படிப்பு கல்வி டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர்.விஷ்ணு பட், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஜெயா சிங், துணைப் பதிவாளர் பெருமாள் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை கல்வித்துறை, இணை இயக்குநர் சிவகாமி சிறப்புரையாற்றி புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

    புதுச்சேரி: 

    நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்கள் நலனுக்காக, குடிநீரை மேம்படுத்துவதற்காக, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் (1978-80) நிறுவிய புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் ஆஷாராணி வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை கல்வித்துறை, இணை இயக்குநர் சிவகாமி சிறப்புரையாற்றி புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

    இவ்விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் தெய்வநாயகம் மற்றும் சங்க உறுப்பினர் குமரகுரு உரையாற்றி தங்கள் பள்ளிக்கால அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

    விழாவின் முடிவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பட்டதாரி ஆசிரியை விஜயசாமுண்டீஸ்வரி தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து நிலை ஆசிரியை- ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    ×