என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா
    X

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் பரிசு வழங்கியபோது எடுத்த படம். 

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா

    • சேலம் விநாயக மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா ரிப்லக்ஸ் அடிரா என்ற பெயரில் நடைபெற்றது.
    • ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன். டாக்டர் கொட்டூர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    சேலம் விநாயக மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா ரிப்லக்ஸ் அடிரா என்ற பெயரில் நடைபெற்றது. முன்னதாக மருத்துவ மாணவர்களிடையே விளையாட்டு, கலை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு விழாவிற்கு மாணவர் சங்க செயலர் அமிர்தா பத்மகுமார் வரவேற்றார். விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர்.அனுராதா கணேசன் குத்துவிளக்கேற்றி விழாவை வைத்தார். பின்னர் விழாமலரை வெளியிட்டார்.

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன். டாக்டர் கொட்டூர் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அருணாச்சலம் வாசித்தார். விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகர்நிலை பல்கலைக்கழக உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் டீன். டாக்டர் சீதீஷ் கோஷ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக புதுவை சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    முடிவில் சேர்மன் விஷால் நன்றி கூறினார். இந்த விழாவில் மேற்படிப்பு கல்வி டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர்.விஷ்ணு பட், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஜெயா சிங், துணைப் பதிவாளர் பெருமாள் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×