என் மலர்
புதுச்சேரி

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி நடந்தது.
மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சி வகுப்பு ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- பயிற்சியாளர்கள் ரஞ்சித் துணை மேலாளர், சுரேஷ், கவுஷல், எர்னஸ்ட் துரை, ரவீனா ஆகிய மென்திறன் பயிற்சியா ளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சி வகுப்பு ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் டீன். டாக்டர் பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சென்னை கிங்ஸ் இன்ஸ்டி டியூட் பயிற்சியாளர்கள் ரஞ்சித் துணை மேலாளர், சுரேஷ், கவுஷல், எர்னஸ்ட் துரை, ரவீனா ஆகிய மென்திறன் பயிற்சியா ளர்கள் கலந்து கொண்டனர்.
புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் முன்னிலை வகித்து விருந்தினர்களை வரவேற்றார்.
ஒரு வாரம் நடந்த இப்பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நபரின் ஆளுமையை பிரதிபலிக்கும் தலைமைப் பண்பு, பொறுப்பேற்கும் பண்பு, மொழி ஆளுமை, சமூக நல்லினக்கம், பேச்சுதிறன் போன்ற மனிதவள திறன்களை மேம்படுத்தும் வகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, ஒருங்கிணைப்பாளர் வள ர்மதி, விரிவுரையாளர்கள் தமிழ்செல்வன், ஜெயசூர்யா மற்றும் குளோரி மெர்லின் மற்றும் மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.






