என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீன்வலை கொட்டகை அமைக்கப்படும்-கென்னடி எம்.எல்.ஏ.
    X

    மீன்வலை கொட்டகை விரைவில் அமைக்கப்படும் என்று கென்னடி எம்.எல்.ஏ.விடம் அதிகாரி உறுதியளித்த காட்சி.

    மீன்வலை கொட்டகை அமைக்கப்படும்-கென்னடி எம்.எல்.ஏ.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரபாளையம் மீனவ மக்களுக்காக சில கோரிக்கைகளை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்வைத்தார்.
    • சுனாமி நினைவுச் சின்னத்திற்கான பூமி பூஜை 2 மாதத்துக்குள் உங்கள் தலைமையில் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரபாளையம் மீனவ மக்களுக்காக சில கோரிக்கைகளை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்வைத்தார்.

    அதில் சுனாமி நினைவுச் சின்னம் அமைத்து தர இருக்கும் நிலைப்பாடு சம்பந்தமாகவும், முதியோர் தொகை விரைவில் அளித்திட வேண்டியும், அளிக்க படமால் இருக்கும் சொசைட்டி பணம், மீனவர்களுக்கு வலை கொட்டா அமைப்பது ஆகியவை சம்பந்தமாக அதிகாரிகளை கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    இதற்கு மீன்வளத் துறை அதிகாரிகூறும்போது:- சுனாமி நினைவுச் சின்னத்திற்கான பூமி பூஜை 2 மாதத்துக்குள் உங்கள் தலைமையில் நடைபெறும். வலை கொட்டா அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எங்கள் துறைமூலமே மேற்கொள்ளப்படும், பய னாளிகளுக்கு விரைவில் முதியோர் தொகை அளிக்கப்படும்.

    சொசைட்டி பணம் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இதில் மீனவர் அணி மாநில அமைப்பாளர் தனசேகரன், கிளை செயலாளர் முரளி மற்றும் காலப்பன், தேசிங்கு, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×