என் மலர்
புதுச்சேரி
- தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம்.
- நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.
புதுச்சேரி:
புதுவை கிருஷ்ணா நகரில் ஜாலி ஹோம்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.
ஜாலி ஹோம் காப்பகத்தில் நரிக்குறவர்களின் குழந்தைகளும் ஆதரவற்றோரின் குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தங்க இடம், உடுக்க உடை, உணவு என நின்று விடாமல் கல்வியுடன் பாட்டு, நடனம், விளையாட்டு ஆகியவையும் கற்று கொடுக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள குழந்தைகள் தீபாவளிக்கு என தனி பாடலை உருவாக்கி உள்ளனர்.
இவர்களுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தீபாவளி கொண்டாடினார். சிறுவர்கள், குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-
தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.
இதுபோன்று வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ள மக்களும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.
பிரதமரின் வழிகாட்டுதலோடு புதுவை அரசும் இந்த சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் வறுமை நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்வின் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தீபாவளி திருநாளை ஜாலி ஹோம் இல்ல குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் தீபாவளி திருநாளை தொகுதி மக்களோடு இணைந்து கொண்டாடுவேன். இந்த முறை இந்த குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
- புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பசுமை பாதுகாப்பு தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் தீபாவளி விழாவினை கண்டுகளித்தார்.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பசுமை பாதுகாப்பு தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைமை விருந்தினராக புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் தீபாவளி விழாவினை கண்டுகளித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழைலையர்கள் அனைவரும் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலை பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
- தமிழக பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி 13 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
- இந்த நீர் புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க சென்று கொண்டிருக்கிறது.
புதுச்சேரி:
தமிழக பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி 13 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தென் பண்ணையாற்றில் மேலும் அதிகபட்ச தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இருபுறமும் கரைபுரண்டு ஓடியதால் பல இடங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையிலேயே உள்ளது.
இந்த நீர் புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க சென்று கொண்டிருக்கிறது. புதுவை மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவை எட்டியதால் சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மதகுகளை மூடி உள்ளனர். தற்பொழுது பாகூர் ஏரியில் நிரப்பப்பட்ட நீர் தொடர்ந்து ஜனவரி மாதம் வரை அதிகபட்ச கொள்ளளவில் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் வரும் வெள்ள நீரால் பாகூர் சித்தேரி, மணப்பட்டு ஏரிகளை நிரம்பி வழிகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் கிருமாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு, உச்சிமேடு, குருவிநத்தம், கடுவனூர் உள்ளிட்ட 11ஏரிகள் நிரம்பி உள்ளது.
- மத்திய அரசின் ஆப்த மித்ரா என்ற பேரிடர் கால நண்பன் திட்டத்தின் கீழ் சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.
- பயிற்சியின் நிறைவு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஆப்த மித்ரா என்ற பேரிடர் கால நண்பன் திட்டத்தின் கீழ் சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டது. இதில் 150 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியின் நிறைவு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் தமிழ்ச் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பத்தில் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.
- இச்சேவைக்கான கருவி மற்றும் பொருள்களை ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் துணை தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ், பல் கட்டும் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பத்தில் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்குள்ள செயற்கை பல் கட்டும் பிரிவில் முதல் கணினி தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்து தயாரிக்கும் அதிநவீன செயற்கை முழுவாய் பல் செட் பொருத்தும் சேவை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சேவைக்கான கருவி மற்றும் பொருள்களை ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் துணை தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ், பல் கட்டும் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.
அதையொட்டி பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர். மனோகர் மற்றும் டாக்டர். பழனி பிரசாந்த் சிகிச்சைக்கான செய்முறை பயிற்சியை டாக்டர் மெர்லின் ஜார்ஜ் தலைமையில் நிகழ்த்தி உள்ளனர். இந்த ஆய்வகம் ஆசியாவின் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக 5 முதல் 6 பார்வை நேரத்தில் பொருத்தப்படும் செயற்கை முழுவாய் பல் செட்டை இரு நாட்களில் பொருத்த இயலும் என்பது இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். இத்தகவலை ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புதுவை அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மழை அங்கி மற்றும் கையுறை வழங்கும் விழா நடந்தது.
- இதனை இயக்க தலைவர் செல்வபாண்டியன் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மழை அங்கி மற்றும் கையுறை வழங்கும் விழா நடந்தது.
இதனை இயக்க தலைவர் செல்வபாண்டியன் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். மத்திய விலங்குகள் நல அதிகாரி டாக்டர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வேல்முருகன், அனிதா மற்றும் இயக்க நிர்வாகிகள் கம்சலை, பைரவி, செல்வராணி, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவை காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கறுவடிக்குப்பம் வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி இன நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் நரிகுறவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கறுவடிக்குப்பம் வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி இன நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் நரிகுறவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து நோயிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது
- வில்லியனூர் கொம்யூன் மூலம் வசந்த நகருக்கு ரூ.17 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
- செய்தார். அப்போது சாலைகளை மழையின்போது சேதமாகாத வகையில் தரமாகவும், நிர்ணயித்த காலத்திலும் முடிக்கச் செய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் மூலம் வசந்த நகருக்கு ரூ.17 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த பணி தரமானதாகவும், குறித்த நேரத்தில் நடைபெறுகிறதா? என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலைகளை மழையின்போது சேதமாகாத வகையில் தரமாகவும், நிர்ணயித்த காலத்திலும் முடிக்கச் செய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்யநாராயணா மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், ராஜி, கே.வி.ஆர். ஏழுமலை, திலகர், லட்சுமணன், ரங்கராஜ், ராஜேந்திரன், ஸ்ரீதர், கணபதி, கார்த்திகேயன், அசோக், வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதுவை, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், (இந்தியா), எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- எந்திரவியல் துறை தலைவர் மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுவை மாநில மைய தலைவர் ராஜாராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், (இந்தியா), எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமிகேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
எந்திரவியல் துறை தலைவர் மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுவை மாநில மைய தலைவர் ராஜாராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். எந்திரவியல் துறை உதவி பேராசிரியர் மதியரசு சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்று பேசினார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு, பாஸ்கரன், மாணவர்களிடையே சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட லஞ்ச ஒழிப்பு தொடர்பாக அரசு இயற்றிய சட்டங்கள் பற்றியும், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் பற்றி கூறினார். உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
- பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
- தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும்.
2 ஆண்டுகளுக்குப்பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும்.
சுய சார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- வேலை வாய்ப்பு விழா வாயிலாக 10 லட்சம் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு இயக்கத்தை இன்று காலை காணொளி கூட்டம் மூலம் டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வேலை வாய்ப்பு விழா வாயிலாக 10 லட்சம் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு இயக்கத்தை இன்று காலை காணொளி கூட்டம் மூலம் டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி புதிதாக நியமனம் கடிதம் பெற்றவர்களுடன் காணொளி மூலம் பேசினார்.
இதன் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதப்படை, உதவி ஆய்வாளர், கான்ஸ்டபிள், ஸ்டெனோ கிராபர், அஞ்சலக எழுத்தர், வருமான வரி ஆய்வாளர்கள், பண்முகத் திறன் ஊழியர்கள் உள்ளிட்ட 38 அமைச்சகங்கள், துறைகளில் உள்ள குரூப் -ஏ. குரூப்-பி மற்றும் குரூப்- சி பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஊழியர்கள், பணியமர்த்த ப்பட உள்ளனர்.
புதுவை கம்பன்கலை யரங்கத்தில் பிரதமர் மோடியின் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. விழாவிற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர், பகவத் கிஷன்ராவ் கரட் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை புதுவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மறௌறும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த 57 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணகுமார், செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடந்தது.
புதுச்சேரி:
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் அசோடிகா அமிர்த் மகோத்சவம் (சுதந்திர தேன் விழா) சார்பில் பள்ளி மாண வர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினரா க செல்வகணபதி எம். பி., சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிர்வாக அதிகாரிகள் அரவிந்த்குமார், அரவிந்த் நாத்ஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 25 மாணவ-மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொது மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.






