என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ப்படுவதில்லை.
    • இதனால் அரசு பொது மருத்துவமனைக்கு இதய வலியுடன் வரும் நோயாளிகள் ஜிப்மர் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ப்படுவதில்லை. ஆஞ்சியோ எந்திரம் பழுதடைந்ததால் புதியதாக ஆஞ்சியோ எந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆஞ்சியோ எந்திரத்தை தொடர்ச்சியாக இயங்க செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது அரசின் அலட்சிய போக்கை காட்டுகிறது.

    இதனால் அரசு பொது மருத்துவமனைக்கு இதய வலியுடன் வரும் நோயாளிகள் ஜிப்மர் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். ஜிப்மருக்கு ஏற்கனவே ஏராளமான நோயாளிகள் செல்கின்றனர். மேலும் புதுவை நோயாளிகளுக்கு ஜிப்மரில் முறையாக சிகிச்சை அளிக்கவும் முன்வருவதில்லை.

    இதனால் இதய வலி ஏற்பட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு செல்பவர்கள் மேலும் பாதிப்பிற்கு உள்ளா கின்றனர். மேலும் ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் ஆஞ்சியோ சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் சிறிய அளவில் இருதய நோய் பாதிப்பில் உள்ளான வர்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு செல்லும் அபாய நிலையும் உள்ளது.

    எனவே புதுவை அரசு பொது மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை எந்திரத்தை நிறுவி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ எந்திரம் பொருத்தும் வரை இதய நோய் சிகிச்சை தேவைப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு வரும் இதய நோயாளிகளுக்கு உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளி மற்றும் வீரவள்ளி பகுதிகளில் மின் வெட்டு மற்றும் மின் நிறுத்தம் போன்ற பிரச்சினை இருந்து வந்தது.
    • இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளி மற்றும் வீரவள்ளி பகுதிகளில் மின் வெட்டு மற்றும் மின் நிறுத்தம் போன்ற பிரச்சினை இருந்து வந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரி விடுத்தனர்.

    இதை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி மூலம் 35 லட்சம் மதிப்பீட்டில் சின்ன மணிகூண்டு மார்க்கெட் அருகில் நவீன தானியங்கி மின்மாற்றி அமைக்கப்பட்டது.

    இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர்கள் சுரேஷ், துரை சண்முகம், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, துணை செயலாளர் நாசர், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, ஆட்டோ சங்க தலைவர் மிஷெல், கிளை செயலாளர் செல்வம், காலப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
    • அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ெஜயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ெஜயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் முன்னிலையில் எம்.ஐ.டி.கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் முதன்மை செயல் அதிகாரி பாலாஜி மற்றும் சி.ஓ.ஓ. பாலாஜி வரதன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுவையில் மக்கள் பட்டாசு வெடித்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடினர். புதுவை அரசு விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி தீபாவளிக்கு பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி வந்தது. சிலர் அஜாக்கிரதையாக பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் சிலரது வீடுகள், இருசக்கர வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பெருமாள் கார்டன் பகுதியில் சிலர் சாலையில் பட்டாசு வெடித்துள்ளனர், அப்போது, பட்டாசின் தீப்பொறி பட்டு அருகில் இருந்த தண்டபாணி என்பவரது கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயைஅணைக்க மயன்றனர்.

    ஆயினும், தீ அருகில் இருந்த சிவலோகம் என்பவரது வீட்டின் கூரை மீது பரவி அந்த வீடும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 2 வீடுகளிலும் இருந்த டி,வி கம்ப்யூட்டர், இருசக்கர வானம் உள்பட ரூ1.½ லட்சம் மதிப்பலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    • பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்.
    • இவர் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினியரிங் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    புதுச்சேரி:

    பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இவர் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினியரிங் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் 2 வயதில் குழந்தையும் உள்ளனர்.

    ரஞ்சித்தின் மனைவி பாக்கியலட்சுமி பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஒரே பகுதியில் வேலைக்கு செல்வதால் கிருமாம்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி ரஞ்சித் தனது மனைவியை தீபாவளியை தனது சொந்த ஊரில் கொண்டாடலாம் என்று அழைத்துள்ளார். ஆனால் பாக்கியலட்சுமி வரமறுத்து மருத்துவமனையில் தொடர்ந்து பணி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்ற எக்கத்தில் ரஞ்சித் அப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) வாங்கி மதுவுடன் கலந்து குடித்தாக கூறப்படுகிறது.

    பின்னர் இதுபற்றி ரஞ்சித் தனது மனைவியிடம் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனே அவரது மனைவி தான் வேலை செய்த மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார்.

    இந்த நிலையில் ரஞ்சித் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இருந்தார். இதுசம்பந்தமாக கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு அம்பேத்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    பிம்ஸ் நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி பேசினார். பிம்ஸ் மருத்துவமனை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்து பல்வேறு பரிசுகள் வழங்கும் நிகழ்வு முதல் முறையாக நடக்கிறது.

    முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம் 2-ம் பரிசாக மொபைல் போன் 3-ம் பரிசு மைக்ரோ ஓவன் நான்காம் பரிசாக டிராவல் பேக் 5-ம் பரிசாக 50-பேருக்கு ஹாட் பாக்ஸ். உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசு நான்கு கிராம் தங்க நாணயத்தினை அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஷர்மிளாவுக்கு கிடைத்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது.
    • மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    சூரிய கிரகணம் இன்று பிற்பகல் 2.28-க்கு தொடங்கி மாலை 6.30-க்கு முடிவடைகிறது. இதனால் நாடு முழுவதும் கோவில்கள் நடை மூடப்பட்டது.

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது. கோவிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மற்ற பக்தர்களை மாலையில் வருமாறு அறிவுறுத்தி கோவில் பாதுகாவலர்கள் அனுப்பினர்.

    மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுவையில் உள்ள கோவில்களின் நடை மதியம் 12 மணிக்குள் மூடப்பட்டது.

    • சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருபவர் புபேஷ் குப்தா.
    • வன ஆர்வலரான இவர் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில்

    சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருபவர் புபேஷ் குப்தா. வன ஆர்வலரான இவர் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். காடுகள் வளர்ப்பிற்காகவும் தமிழ் பாரம்பரிய மரக்கன்றுகளை வளர்கிறார்.

    கொய்யா, பலா, சீத்தா, தேக்கு, சந்தனம், புளியம், மகிழம், வாகை என இங்கு உருவாக்கும் மரக்கன்றுகள் நீர்நிலைகளை சுற்றி நடப்படுகிறது.இந்த மரக்கன்றுகளை சுற்றியுள்ள கிராமத்து பெண்களே உருவாக்கி வருகின்றனர்.

    அப்போது அவர்கள் வேலை பளு தெரியாமல் இருக்க பாட்டு பாடுவது வழக்கம்.அந்த வகையில் அழகம்மா என்பவர் ஏழ்மை, விவசாயம், கிராமத்து சூழல் ஆகியவற்றை 25 வார்த்தைக்குள் அடக்கி பாடியுள்ளார்.

    "நாலடி சதுரத்தில் நடுவு செய்யும் குட்ட பொண்ணு. நானும் கொஞ்ச ஏழையம்மா நடவை போடு கிட்ட கொஞ்சம். குட்ட பொண்ணு நட்ட நாத்து சுழலுதம்மா நெல் கதிரு. ரோட்டோரம் ஊட்டு காரி ரோஜாப்பூ கொண்டகாரி."

    இந்த தெம்மாங்கு பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

    • தீபாவளி கேதார கவுரி விரதம் இருந்துபக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
    • இன்று பெண்களும் ஆண்களும் அமாவாசை நோன்பு விரதம் இருந்து வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று தீபாவளி கேதார கவுரி விரதம் இருந்துபக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

    இன்று பெண்களும் ஆண்களும் அமாவாசை நோன்பு விரதம் இருந்து வழிபட்டனர். அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.

    மகாகவி பாரதி வழிபட்ட முத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனை தரிசித்து அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து அமாவாசை நோன்பு எடுத்தார்கள்.

    மாலையில் சூரியகிரகணம் என்பதால் பிற்பகல் 1.30-க்கு பிறகு கோவில் நடை சாத்தப்படும். இரவு 7 மணிக்கு பிறகே மீண்டும் நடை திறக்கப்படும். இதனால், அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 நிறுவனங்களான, அசாம் திப்ரூகார் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், உத்திரபிரதேசம் கோரக்பூர் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், மத்திய பிரதேசம் ஜபல்பூர் -தேசிய பழங்குடியினர் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனம், பீகார் பட்னா -ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர்கள் அஷ்வனி குமார், கன்வர் நரேன், ரஜினிகாந்த் ஸ்ரீவஸ்தவா, அபரூப் தாஸ், டாக்டர் கிருஷ்ணா பாண்டே, சர்வதேச சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் முகேஷ் குமார், டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 5 இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ஒரு புதிய முதுகலை படிப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும் முனைவர் பட்டத்திற்கான இரட்டை வழிகாட்டி முறை, மாநாடுகள், பட்டறைகள் நடத்துதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது.

    • புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.
    • இதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தவாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் முயற்சியால் 1000 பாப்ஸ்கோ தொழிலாளர்களின் வங்கி கணக்கில் 3 மாதம் சம்பளம் செலுத்தப்பட்டது.இதனையடுத்து உறுதி அளித்தவாறு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்த அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரை ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் சேது செல்வம், மற்றும் ஊழியர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

    அப்போது, பாப்ஸ்கோவில் உள்ள 33 மதுபான கடை உரிமங்களை டெண்டர் முறையில் ஏலம் விட்டு 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வ தென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது, அனைத்து கடன்களையும் தீர்ப்பது என அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் உறுதி அளித்தார்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வெண்கர்ஸ் இணைந்து நடத்திய ஐ.ஓ.டி., மாணவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
    • எம்.ஐ.டி., கல்லூரியில் நடந்த பயிலரங்கை நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வெண்கர்ஸ் இணைந்து நடத்திய ஐ.ஓ.டி., மாணவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. எம்.ஐ.டி., கல்லூரியில் நடந்த பயிலரங்கை நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். இதில், வெள்ளி வெண்சுர்ஸ் நிறுவன பேராசிரியர்கள் நேரு எட்வின் ராஜ், கவிதா செந்தில்நாதன், ஷர்மிளா நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    வேலைவாய்ப்பு திறன்களை உருவாக்கவும், செயல் திறன்களை ஊக்குவித்தல், தொழில்துறைக்கான மதிப்பு கூட்டப்பட்ட திறன்களுக்காக இந்த பயிலரங்கம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார், ஐ.ஓ.டி., துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×