என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி., கல்லூரியில் மாணவர்கள் பயிலரங்கம்
    X

    கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஐ.ஒ.டி., துறை மாணவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.

    எம்.ஐ.டி., கல்லூரியில் மாணவர்கள் பயிலரங்கம்

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வெண்கர்ஸ் இணைந்து நடத்திய ஐ.ஓ.டி., மாணவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
    • எம்.ஐ.டி., கல்லூரியில் நடந்த பயிலரங்கை நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வெண்கர்ஸ் இணைந்து நடத்திய ஐ.ஓ.டி., மாணவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. எம்.ஐ.டி., கல்லூரியில் நடந்த பயிலரங்கை நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். இதில், வெள்ளி வெண்சுர்ஸ் நிறுவன பேராசிரியர்கள் நேரு எட்வின் ராஜ், கவிதா செந்தில்நாதன், ஷர்மிளா நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    வேலைவாய்ப்பு திறன்களை உருவாக்கவும், செயல் திறன்களை ஊக்குவித்தல், தொழில்துறைக்கான மதிப்பு கூட்டப்பட்ட திறன்களுக்காக இந்த பயிலரங்கம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார், ஐ.ஓ.டி., துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×