என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.
    • புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலை–மையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். சிந்தன் ஷிவிர் என்ற பெயரில் ஹரியானாவின் சூரஜ்குந்த் என்ற இடத்தில் மாநாடு தொடங்கியது.

    மாநாட்டில் மாநில உள்துறை செயலர்கள், டி.ஜி.பி.க்கள், ஆயுதப்படை இயக்குனர்கள், மத்திய போலீஸ் அமைப்புகளும் பங்கேற்றனர். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் ராஜீவ்வர்மா,டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஆகியோர் பங்கேற்ற–னர். தொடங்கிய மாநாட்டில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தி–யதாவது:-

    புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்க மத்திய உள்துறை அனுமதி வழங்க வேண்டும். புதுவையின் 4 பிராந்தி–யங்க–ளும் கடலோர பகுதியை உள்ளடக்கியவை.

    எனவே புதுவை மாநில கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதுவை மாநில கடலோர காவல்படையை விரிவுபடுத்த வேண்டும். கடலோர காவல்படையில் ஊர்க்காவல்படையினரை நியமிக்க வேண்டும்.

    போதை கடத்தல் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது. புதுவையில் போதை தடுப்பு தனி பிரிவை பலப்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன கருவிகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

    2-ம் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி, வீடியோ கான்ப–ரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.

    • வெளிநாட்டைச் சேர்ந்த குபாட்டா என்ற பெயருடைய நெல் நடுவை மற்றும் அறுவடை எந்திரத்தின் உதிரி பாகங்கள் போலியான பெயரில் பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியில் விற்கப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் சென்றுள்ளதாக தெரிகிறது.
    • இதையடுத்து சதீஷ்குமார் கரையாம்புத்தூர் புற காவல் நிலையத்தில் போலியான பொருள் விற்பனை செய்த அறுவடை எந்திரங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    வெளிநாட்டைச் சேர்ந்த குபாட்டா என்ற பெயருடைய நெல் நடுவை மற்றும் அறுவடை எந்திரத்தின் உதிரி பாகங்கள் போலியான பெயரில் பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியில் விற்கப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் சென்றுள்ளதாக தெரிகிறது.

    இதையடுத்து நிறுவனத்தின் சென்னை தெற்கு மண்டல இயக்குனர் சதீஷ்குமார், கடந்த 10-ந் தேதி சம்பவ இடத்திற்கு வந்து உதிரி பாகங்களை வாங்கி பார்த்துள்ளார். அதில் வண்ணம் மற்றும் வடிவமைப்பு அனைத்தும் இவர்கள் நிறுவனத்தில் உதிரிபாகங்களாக இருந்ததாக அவருக்கு தெரியவந்தது. தங்கள் நிறுவனத்தின் உரிமையை மீறி இதே பொருளை வேறு பெயரில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சதீஷ்குமார் கரையாம்புத்தூர் புற காவல் நிலையத்தில் போலியான பொருள் விற்பனை செய்த அறுவடை எந்திரங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தார்.

    அதன் பேரில் கரையான்புத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    • சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

    சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது. இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.எஸ் வெங்கடாசலபதி, மைலம் பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் தக்ஷஷிலா பல்கலைக்கழகம் பதிவாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் செந்தில் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர்.

    இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ஆதிதிராவிட, பழங்குடி யின இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் அனைத்து வகுப்பு மாணவர்களும், இந்த முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

    புதுச்சேரி:

    ஆதிதிராவிட, பழங்குடி யின இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஆதிதிராவிட, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் என்.சி.எஸ். மூலம் இணையதள வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் பிரபல மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம், டெல்லியை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் அனைத்து வகுப்பு மாணவர்களும், இந்த முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு ரெட்டியார்பாளையம், கனரா வங்கி,2-ம் தளத்தில் உள்ள அலுவலகத்தை 0413- 2200115 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் சார்பில் மீண்டும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக வேண்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது.
    • பின்னர் ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் புதுவை மாநில தலைவர் பதவியேற்பு விழா வில்லியனூர் திருக்காமீசுவரர் சிவன் கோவில் தென் கோபுர வீதியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மீண்டும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டி கோபூஜை நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார்.

    ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் சார்பில் மீண்டும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக வேண்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

    பின்னர் ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் புதுவை மாநில தலைவர் பதவியேற்பு விழா வில்லியனூர் திருக்காமீசுவரர் சிவன் கோவில் தென் கோபுர வீதியில் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் கலந்து கொண்டு மாநில தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கராத்தே முருகனுக்கு சால்வை அணிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் தலைவர் முருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், தேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோ பூஜை நடைபெற்றது. மாற்று கட்சியினராக இருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த கோ பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பா.ஜனதா மட்டுமல்லாமல் இந்து மக்கள் அனைவரும், மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் அதன்படி இந்த பூஜை நடைபெற்றதாக தெரிவித்தார்.

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்குஅதிக வாகன போக்குவரத்தும் உள்ளது.
    • இதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இங்குஅதிக வாகன போக்குவரத்தும் உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மொரட்டாண்டி, சேதராப்பட்டு சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்து கிடப்பதாலும் ஆங்காங்கே சுற்றித் திரிவதாலும் தொடர் வாகன விபத்து ஏற்படுகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    சாலையில் மாடுகளை விடக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆட்டோ மூலமும் சமூக வலைதள மூலமும் மாட்டின் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட மாநில இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த போது மாட்டின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது தனியார் பஸ் ஏறியதில் தலையில் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த தொடர் விபத்து காரணமாக  இரவு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சாலையில் திரியும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து அங்குள்ள பட்டியில் அடைத்தனர். மாடுகள் பட்டியில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்து மாட்டின் உரிமையாளர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக வானூர் தாசில்தார், கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    • புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புத்துருவாக்கும் பெறும் நலிவுற்ற குடியிருப்பு பகுதியில் செயல்பட இருக்கும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தலைமை செயலகத்தில் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி அருண் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • புதிய நவீன ஒருங்கிணைந்த சுகாதாரமான கழிப்பிடம் அமைத்தல், ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் உள்ளிட்டவை சம்பந்தமாக அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் புதுமையுடன் கூடிய ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான நகர்ப்புற முதலீட்டு திட்டம் மற்றும் புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புத்துருவாக்கும் பெறும் நலிவுற்ற குடியிருப்பு பகுதியில் செயல்பட இருக்கும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தலைமை செயலகத்தில் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி அருண் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, திப்புராயபேட்டையில் நலிவுற்ற குடிைச வாழ் மக்களுக்காக 80 வீடுகளுடன் கூடிய புதிய 2 தொகுப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டமைத்தல், துறைமுக இடத்தில் நவீன சுகாதார மீன் விற்பனை அங்காடி அமைத்தல், ராசு உடையார் மற்றும் பிரான்சுவா தோட்டத்தில் பழுதடைந்த பயன்பாடற்ற கழிப்பிட கட்டிடத்தை அகற்றி புதிய நவீன ஒருங்கிணைந்த சுகாதாரமான கழிப்பிடம் அமைத்தல், ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் உள்ளிட்டவை சம்பந்தமாக அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

    மேலும் முதல்வரிடம் கலந்தாய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடித்திட எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள் உறுதியளித்தனர். அப்போது தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் ராகேஷ் கவுதமன், மோரிஸ், ரகுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏஜென்சிகளை மீன்வளத்துறை அனுமதித்ததாக தெரிகிறது.
    • தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏஜென்சிகளை மீன்வளத்துறை அனுமதித்ததாக தெரிகிறது.

    புதுவையில் 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் புதுவை பெரிய மார்க்கெட், சின்னகடை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் போன்ற சிறிய மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம்.

    சமீபகாலமாக புதுவையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 9 ஏஜென்சி மூலம் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி விட்டு வெளிமாநில மீன்கள் வரத்தை நிறுத்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.மேலும் 9 ஏஜென்சிகள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு மீன்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மீன்வளத்துறைக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநிலத்தில் இருந்து மீன் வருவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    • அளவுக்கு அதிகமாக மது குடித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் இறந்து போனார்.
    • புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    அளவுக்கு அதிகமாக மது குடித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் இறந்து போனார்.

    மரக்காணம் அருகே சுனாம்பேடு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது62). இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வெங்கடேசன் அடிக்கடி புதுவைக்கு வந்து மது குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    அதுபோல் சம்பவத்தன்று இவர் மது குடிக்க புதுவை வந்தார். புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி போன வெங்கடேசன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிந்த சாலையில் பொது இடத்தில் தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கோவிந்த சாலையில் பொது இடத்தில் தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவில் இரு தரப்பினர் தகராறு செய்து ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இரு தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்த பழனிவேல் மனைவி தனலட்சுமி(வயது42), அவரது மகன் வசந்த்(24) மற்றும் கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சுப்பிரமணியன் மனைவி காயத்ரி(20) மற்றொரு தரப்பை சேர்ந்த கோவிந்தசாலை காமராஜர் வீதியை சேர்ந்த மணிகண்டன்(30) மற்றும் கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார்(38) மற்றும் அவரது சகோதரர் சுப்பிரமணியன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்கள் உட்பட பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.
    • புதுவையில் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் இதுவரை பறிபோயுள்ளன.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்கள் உட்பட பலர் பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து தற்கொலைகளும் நடைபெற்று வருகின்றது.

    புதுவையில் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் இதுவரை பறிபோயுள்ளன. சூதாட்டத்தின் விபரீதத்தை உணர்ந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மக்க ளின் நலன் சார்ந்த தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றி உள்ளது.

    நடந்து முடிந்த புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவையில் ஆன்லைன் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2022 என்ற சட்ட முன் வரைவை தனிநபர் மசோதாவாக கொண்டுவர நான் முயற்சி செய்தேன். சட்டமன்றத்தின் அனைத்து நடைமுறைகளின் படி எனது சட்ட முன்வரைவை முறையாக சட்டசபை செயலரிடம் சமர்ப்பித்தேன். சட்டசபை செயலர் அதை புதுவை அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி கருத்து கேட்டார்.சட்டசபை செயலாளர் மற்றும் புதுவை சட்டத்துறை செயலாளர் ஆகியோர் என்னை அழைத்து இது பற்றி சட்ட விபரங்களை கேட்டனர்.

    அதற்குண்டான அனைத்து விளக்கத்தையும் அவர்களுக்கு வழங்கினேன். ஆன்லைன் தடை சட்டம் மட்டும் 14 சட்டப்பிரிவுகளை கொண்ட சட்டமாக இயற்றப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பிரிவை பற்றியும் வழக்கறிஞர் என்ற முறையில் முறையாக விளக்கம் கொடுத்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் சட்டம் நிறைவேற்ற தேவையான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி கூறினர்.

    ஆனால் தி.மு.க. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க.விற்கு பெரிய அளவிலான அரசியல் புகழ் கிடைக்கும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜனதா தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்து சட்டசபையில் எனது தனிநபர் மசோதா வரவிடாமல் செய்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தடை விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வம்பாகீரப்பாளையத்தி ல் சண்டையை சமாதானம் செய்த மீனவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அப்போது செல்லுபூச்சி நீ என்ன எங்களை சமாதானம் செய்வது என கூறி மதியழகனை கையால் தாக்கினார்.

    புதுச்சேரி:

    வம்பாகீரப்பாளையத்தில் சண்டையை சமாதானம் செய்த மீனவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதி என்ற மதியழகன் (வயது26). மீனவர். இரவு இவர் கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்லுபூச்சி என்ற செல்வமுருகனும், அருள் என்பவரும் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டி ருந்தனர். இதனை பார்த்த மதியழகன் சண்டையை சமாதானம் செய்ய முன்றார்.

    அப்போது செல்லுபூச்சி நீ என்ன எங்களை சமாதானம் செய்வது என கூறி மதியழகனை கையால் தாக்கினார். இதனை மதியழகன் தட்டிக்கேட்ட போது செல்லுபூச்சி அங்கு கிடந்த கல்லை எடுத்து மதியழகன் தலையில் தாக்கினார்.

    மேலும் அங்கு வந்த செல்லுபூச்சியின் மகன்களான காளியப்பன், அஜித் மற்றும் செல்லுபூச்சியின் மனைவி அஞ்சாலாட்சி ஆகியோரும் சேர்ந்து மதியழகனை தாக்கினர். இதனால் வலி தாங்காமல் மதியழகன் அலறவே செல்லுபூச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மதியழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் இதுகுறித்து மதியழகன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×