என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
    • இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கி அரசு சார்பு செயலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புதுவை கவர்னர் அனுமதியுடன், அரசு சார்பு செயலர் முத்து மீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் வியாபாரம் எளிதாக நடைபெறவும், சீர்த்திருத்த செயல் திட்டத்தை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை அடையவும், தொழிலாளர் சட்டங்கள் எளிதாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். இந்த அனுமதியானது புதுவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன் விதிகளை சமரசம் செய்யாமல் தரப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

    பெண் ஊழியர்கள் பாதுகாப்பு பணியாளர்கள் ஏதேனும் விடுமுறையில் அல்லது சாதாரண பணி நேரத்திற்கு பிறகு, கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் மீது புதுவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை. குறிப்பாக, பெண் ஊழியர்களிடம் எழுத்துப் பூர்வ ஒப்புதலை பெற்ற பிறகு, அவர்களை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம்.

    பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

    போக்குவரத்து வசதிகள் இருப்பதை குறிக்கும் வகையில், நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    பெண் ஊழியர்களை பணியமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
    • பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இந்த சாலையை விவசாய நிலத்திற்கு செல்லும் வழியாகவும் பல்வேறு செயல்பாட்டுக்கு இந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது சாலை நடுவே நீண்ட தூரம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்து குப்பையில் இருந்து பூழுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.

    பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருபுவணை அருகே டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அப்போது ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

    திருபுவனை அருகே கலிதீர்த்தாள் குப்பம்-திருக்கனூர் ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.

    இதைதொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் மதகடிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42) என்பதும் இவர் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு களை விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராஜவேலுவை போலீசார கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.820 ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    • பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலியானார்.
    • ராஜா சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக தனது தாய் அஞ்சலை தேவியிடம் கூறிச்சென்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலியானார்.

    பாகூர் அருகே தமிழகப் பகுதியான செம்மண்டலம் எஸ்.என்.சாவடி கெடிலம் ரோட்டுப்பகுதியை சேர்ந்தவர் அஞ்சமுத்து. இவரது மூத்த மகன் ராஜா (வயது 39) டிரைவர் வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் ராஜா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    ராஜா சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக தனது தாய் அஞ்சலை தேவியிடம் கூறிச்சென்றார்.

    ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.

    இந்த நிலையில் ராஜா பாகூர் அருகே சோரியாங்கு ப்பம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்.

    குடிபோதையில் ஆற்றில் இறங்கிய போதோ அல்லது ஆற்றில் கால் கழுவும் போது வலிப்பு ஏற்பட்டதால் அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து அவரது சகோதரர் ராஜவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    • இந்த நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் திரண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    முதல் கட்டமாக ௧௧௬ யூ.டி.சி. ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.அடுத்தக்கட்டமாக எல்.டி.சி., உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் உதவியாளர் பணியிடத்தை நேரடியாக தேர்வு செய்தால் தங்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அமைச்சக ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் திரண்டனர். அங்கு நிர்வாகத்துறை செயலர் கேசவன் அறை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், நேரடியாக உதவியாளர் தேர்வால் 600 அமைச்சக ஊழியர்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் எனவே, இதற்கு முடிவு தெரியும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். 

    • மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலையா சுவாமிகள் திருமடத்திற்கு சொந்தமான இடங்கள் பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் ஆரோவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலையா சுவாமிகள் திருமடத்திற்கு சொந்தமான இடங்கள் பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை விசாரணையின் அடிப்படை–யில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் அதிகாரிகள் குயிலாப்பாளையம் மெயின் ரோட்டில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்த பொம்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 21,800 சதுர அடி இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் ஆரோவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ஞானம், நில அளவை சார் ஆய்வாளர் சோமசுந்தரம், திருமடம் சார்பில் அதன் நிர்வாகி சிவகுமார், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 5௦௦-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது.

    மேலும், நடப்பாண்டி ற்கான மருந்து கொள்முத லுக்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய டாக்டர்களுக்கு 3 மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாதது.

    எனவே இனியும் பொதுமக்களின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயத்தில் விளையாடாமல். சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து குறைபாடு களையும் சரிசெய்து மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவ-மாணவிகளின் தனிதிறனை வெளிப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் ஆரா என்னும் தலைப்பில் நடத்தப்படுகின்றன.
    • புதுவை காவல்துறை ஐ.ஜி. சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆரா டீசர்ட் அறிமுகம் செய்து வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவ-மாணவிகளின் தனிதிறனை வெளிப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் ஆரா என்னும் தலைப்பில் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டு ஆரா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிம்ஸ் நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுவை காவல்துறை ஐ.ஜி. சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆரா டீசர்ட் அறிமுகம் செய்து வெளியிட்டார்.

    நாள்தோறும் பல்வேறு மருத்துவ கல்லூரி மாணவர்கள் பங்கேற்க்கும் இசை, நடனம், ஓவியம், பேஷன் ஷோ, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுதவிர மாணவர்களை உற்சாகப்படுத்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஜொனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி. டி.ஜே. நிகழ்ச்சி மெட்ராஸ் மெயில் குழுவின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது‌.

    போட்டிகளில் கலந்து கொள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வருகை புரிந்துள்ளதால் பிம்ஸ் மருத்துவ கல்லூரி விழா கோலம் பூண்டுள்ளது.

    திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜம் அம்மாள் (வயது 65). இவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்தார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜம் அம்மாள் (வயது 65). இவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கனூர் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பரந்தாமன் முயற்சியின் பேரில் நிர்வாகிகள் அவரது குடும்பத்தினரை சந்தித்து கண் தானம் குறித்து வலியுறுத்தினர். அவர்களது கு டு ம் ப த் தி ன ரு ம்  ரா ஜ ம் அம்மாளின் கண்களை தானம் அளிக்க சம்மதித்தனர்.

    இதையடுத்து திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ராஜம் அம்மாளின் கண்கள் தானம் பெறப்பட்டு, புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை வசம் ஒப்படை க்கப்பட்டது. திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகளின் முயற்சியால் இறந்து போன ராஜம் அம்மாளின் கண்கள் வாயிலாக வேறு ஒரு நபருக்கு கண் பார்வை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • வில்லியனூர் திருக்காஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் ஒரு சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையனுக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி சாலை கணுவாபேட் சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் ஒரு சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையனுக்கு தகவல் வந்தது.

    இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் ரகசியமாக கண்காணித்ததில் லோடு வேனில் மணலை அள்ளிக்கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். சங்கராபரணி ஆற்று படுகையை சேதப்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கணுவா பேட் சிவப்பிரியா நகரை சேர்ந்த முத்து மகன் மரமா சூர்யா என்கிற பாலாஜி (வயது 23), சாமியார் தோப்பு மல்லிகா தியேட்டர் சாலையைச் சேர்ந்த அன்பழகன் மகன் பென்னி என்கிற மோகன்ராஜ் (வயது 26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது 2019, 2020, ஆகிய ஆண்டுகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் சூர்யா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • சம்பூர்ணா சித்தா கிளினிக் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் பகுதியில் அமைந்துள்ள சம்பூர்ணா சித்த மருத்துவமனையில் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனர் சுசான்லி டாக்டர் ரவியின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர் புதுவை மண்டலத்தின் சார்பில் வலி நிவாரணத்திற்காக மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தலைமை தாங்கினார். சம்பூர்ணா சித்தா கிளினிக் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

    டாக்டர் சினேகா வரவேற்று பேசினார். கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ட் சென்டரின் புதுவை மண்டல தலைவர் டாக்டர் வெங்கடேசன், டாக்டர்கள் சாரதாஸ்ரீ, லீனா, பவானி, இலக்கியா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். புகழ் ஹெல்த் கேர் நிறுவனர் மங்கையர்கரசி நன்றி கூறினார்.

    முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் சம்பூர்ணா சித்தா மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்கு ண்டான 50 சதவீத சதவீத இடங்களை பெறுவதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முதலாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுவை மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதில் அரசுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் தகுதி பட்டியலை வெளியிடாமல் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் லாபத்தை அதிகரிக்கும் விதத்தில் புதுவை அரசு செயல்படுகிறது.

    கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்கு ண்டான 50 சதவீத சதவீத இடங்களை பெறுவதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முதலாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுவை மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

    இனியும் காலம்தாழ்த்தா மல் உடனடியாக கல்விக் கட்டணத்தை மாணவர்கள் நலன் சார்ந்து நிர்ணயித்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 சதவீதம் இடங்களை பெற்று புதுவை அரசு தகுதி பட்டியலை வெளியிட வேண்டும்

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×