search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தி.மு.க. எம்.எல்.ஏ.  சிவா குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா குற்றச்சாட்டு

    • புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 5௦௦-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது.

    மேலும், நடப்பாண்டி ற்கான மருந்து கொள்முத லுக்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய டாக்டர்களுக்கு 3 மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாதது.

    எனவே இனியும் பொதுமக்களின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயத்தில் விளையாடாமல். சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து குறைபாடு களையும் சரிசெய்து மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×