என் மலர்
புதுச்சேரி
- புதுவை மறைமலை அடிகள் சாலையில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மறைமலை அடிகள் சாலையில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியார் எலக்ட்ரிகல்ஸ் கடை அருகே ஒரு வாலிபர் அவ்வழியே செல்லும் பொதுமக்களை வீச்சரிவாளை காட்டி மிரட்டுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் இருந்து வீச்சரிவாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்த தண்டபாணி (வயது 34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.
- திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரீம் கம்பெனி அருகே தொடர் மழை பெய்ததன் காரணமாக தார் சாலை திடீரென பள்ளமானது.
- இதனை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரீம் கம்பெனி அருகே தொடர் மழை பெய்ததன் காரணமாக தார் சாலை திடீரென பள்ளமானது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே அவ்வழியாக சென்று வந்தனர். இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் எம்.எல்.ஏ. அங்காளனிடம் உடனடியாக சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு அங்காளன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சாலையை உடனடியாக சரி செய்ய பொதுப்பணி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குஉத்தரவு பிறப்பித்தார்.
பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் பொதுப்பணித்துறை ஊழியர்களைக் கொண்டு சாலையை சரி செய்யும் விதமாக பள்ளத்தில் கருங்கல், சக்கைகளை கொட்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இப்ப பணியின் போது அங்காளன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
- புதுவை அக்கார்டு ஒட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்படும்.
- 45 நாட்கள் ஊறவைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அக்கார்டு ஒட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
100 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.
45 நாட்கள் ஊறவைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது.
- வில்லியனூர் மாட வீதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தியாகி ஏ. முத்து குமாரசாமி பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- எதிர்கட்சி தலைவர் சிவாவை தியாகி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தார் மோகன் குமார், ஆகியோர் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் மாட வீதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தியாகி ஏ. முத்து குமாரசாமி பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு தியாகியின் பெயரைச்சூட்ட, சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பி வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர் சிவாவை தியாகி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தார் மோகன் குமார், ராஜகுமார், விஜயகுமார், முத்துக்குமார், சந்திரகுமார், சிவக்குமார், நீலகண்டன், பரசுராமன், ரஜினி முருகன், செல்வநாதன், ஹரி, குமரேசன், கலிய முருகன் ஆகியோர் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வ நாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ராஜி, ரமணன், சபரி, முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார். (வயது 30) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
அதனை ஏற்று மணிகண்டனை அழைத்து வர அய்யனார் நோணாங்குப்பத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார்.
அங்கு மணிகண்டனிடம் நோணாங்குப்பத்தை சேர்ந்த வர்மா என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அய்யனார் தகராறை சமாதானம் செய்து மணிகண்டனை அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் அய்யனாரும் மணிகண்டனும் சாராயம் குடிக்க நோணாங்குப்பம் சாராயக்கடைக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் அய்யனாரை வழிமறித்து தடியால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனார் மயங்கி கீழே சாய்ந்தார்.
அப்போது வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் பீர் பாட்டிலை எடுத்து வந்து எங்களிடம் பிரச்சினை செய்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என அய்யனாரை மிரட்டிவிட்டு சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த அய்யனாரை மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இது குறித்து அய்யனார் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் எதிரில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் அப்பகுதி மக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் எதிரில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம் மற்றும் நோயால், தேசீர், முரளி, செல்வம், காலப்பன், மணிமாறன், அய்யனார், ராகேஷ் கவுதமன், சக்திவேல், வேல்முருகன், மதி, ரகுமான், லாரன்ஸ், மோரீஸ், மதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் அப்பகுதி மக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.
- மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் துணை மருத்துவ பாடப்பிரிவு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
- பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் துணை மருத்துவ பாடப்பிரிவு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணைதலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால் வரவேற்றார்.
மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, கல்லூரியில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகள், உலகத்தர கட்டமைப்போடு கூடிய ஆய்வக வசதிகள், சர்வதேச சான்றிதழ் படிப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கினார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மற்றும் டீன் கலைசெல்வன், மயக்கவியல் துறை தலைவர் சுனித் லாசர், பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு துறை அதிகாரி ஜெயகுமார், அகடாமிக் டீன் அன்புமலர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம், விவசாய துறை டீன் முகமதுயாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் அனைத்து துறை டீன்கள், துறை தலைவர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
- புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.
- அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் புதுவையில் இருந்து 5.40 மணிக்கு சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே பஸ் இயக்கப்பட்டது.
அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது கண்ணாடியை துடைத்த வாறு பஸ் இயக்கினார்.
இருந்தபோதிலும் மழை அதிக அளவில் பெய்ததால் சாலையில் முழுவதும் தெரியாத நிலை ஏற்பட்டது. பஸ்சை சிறிது நேரம் நிறுத்தி கண்ணாடியை துடைத்த பிறகு இயக்கினார். இதனை அறிந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இதன் வீடியோவை பஸ்சில் பயணித்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அரசு கவனம் செலுத்தி பஸ்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.
- மேலும் அதில் பங்குபெற்றவர்கள் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து 'சிறகுகள்' எனும் குழு உருவாக்கப்பட்டது.
புதுச்சேரி:
பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்சார்பு வாழ்வியல் நிபுணர் பிரியதர்ஷினி மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தற்சார்பு வாழ்வியல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் நம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களான பல்பொடி, குளியல் பொடி, மூலிகை பானங்கள், மசாலா பொடிகள் போன்றவற்றை இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அதில் பங்குபெற்றவர்கள் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து 'சிறகுகள்' எனும் குழு உருவாக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வருகின்றனர்.
இதனிடையே சிறகுகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை யுவர் பேக்கர்ஸ் பை பேக் மூலமும் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவர் பேக்கர்ஸின் சிறகுகள் குழு மற்றும் யு கேன் பிளையுடன் இணைந்து கலாட்டா நிறுவனம் "கடந்த வந்த பாதை" எனும் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சிறகுகள் குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் யு கேன் பிளை ஊழியர்கள் கலந்து கொண்டு இதுவரை அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்தும், யுவர் பேக்கர்ஸ் உடன் இணைந்த பிறகு அவர்கள் வாழ்வில் நடந்த மாற்றம் மற்றும் அடைந்த உயர்ந்த நிலை குறித்தும் மனம் திறந்து உரையாடினர்.
இந்த நிகழ்ச்சியை சமூக வலைதள பிரபலம் லயா தொகுத்து வழங்கினார். இதில் யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜ், சிறகுகள் முதன்மை பயிற்சியாளர் பிரியதர்ஷினி, மேலாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் மற்றும் கலாட்டா நிறுவனம் செய்திருந்தது.
- தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- 5 மணிக்கு மழை நின்றாலும் 7 மணி வரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருந்தது.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை முதல் தொடங்கியது.
மழை வருகிற 4-ந் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
அதன் காரணமாக புதுவையில் 3 மணியிலிருந்து நகர பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 2 மணிநேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நகரப் பகுதியில் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர்,வெங்கட்டா நகர், செல்லான் நகர், இளங்கோ நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாததால் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்றது. 5 மணிக்கு மழை நின்றாலும் 7 மணி வரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருந்தது.
8 மணிக்கு முழுமையாக வடிந்தது.ரெயின்போ நகரில் சிறிய மழைக்கு கூட நீர் தேங்குவதை தடுக்க ரூ.10 கோடி மதிப்பில் பொது பணித்துறை சார்பில் சில நாட்களுக்கு முன் தான் பணி தொடங்க பூமி பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.
- என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாக திறமையின்மையினால் அத்தனை கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.
புதுச்சேரி:
என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த முறை ஆட்சியின் போது பாப்ஸ்கோ, பாண்டெக்ஸ், காண்பெட், பாண்லே, பாசிக் போன்ற எண்ணற்ற அரசு சார்பு நிறுவனங்களை உருவாக்கி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியதோடு இல்லாமல் நலிவுற்ற நிலைகளில் இருந்துவந்த கூட்டுறவு மற்றும் அமுதசுரபி ஆகியவற்றை மீட்டெடுக்க அவைகளுக்கு மதுபான மற்றும் பெட்ரோல் பங்கு உரிமங்களை வழங்கி அவற்றிற்கே புத்துயிர் கொடுத்தவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி.
அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாக திறமையின்மையினால் அத்தனை கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள். மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற ரங்கசாமி சிதைந்துபோன அரசு சார்பு நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியாய் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதும் அதில் பணியாற்றிய ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கி வருவதோடு அவர்களின் பணிபாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் கால அளவை நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்து வருகின்றார்.
சமீப காலமாய் மாநிலத்தில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் என்ற வார்த்தையை தகர்த்தெரியும் விதத்தில் அவற்றை நடைமுறைபடுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளார். ஏற்கனவே காவல்துறையில் 400க்கும் அதிகமான பணியிடங்களும், சுகாதாரத் துறையில் 147 பணியிடங்களும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்கள், தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரம் போன்றவை நிரப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது யூ.டி.சி., எல்.டி.சி. மற்றும் உதவியாளர்கள் என 1540-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற காலங்களில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்ப தேவையான நடவடிக்கை மற்றும் நிதி ஆதாரத்தை தன்னுடைய நிர்வாக ஆளுமையால் உருவாக்கி வருகின்றார் முதல்-அமைச்சர் ரங்கசாமி.
கூட்டணி தர்மத்துக்கு மதிப்பளித்து ஒரு சில கொள்கைமுடிவுகளில் தாமதம் ஏற்படுமே தவிர மாநில நலன், மக்கள் நலப்பணிகளில் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாதவர். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாத எதிர்கட்சிகள் அரசு துறைகளை விற்பனை செய்வதாக கூறும் பொய் குற்றச்சாட்டை என் ஆர் இலக்கியப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதுவை தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இதுவரை 67 ஆயிரம் இடங்களில் தூய்மை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுவையில் உள்ள தேசிய புள்ளியியல் துணை மண்டல அலுவலக கள செயல் பாட்டு பிரிவு சார்பில் புதுவை இந்திரா காந்தி குழந்தைகள் பூங்காவில் உதவி இயக்குனர் அமெலியா பெட்ஸி தலைமையில் கள மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர். இதன் மூலம் நமது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மையாக வைத்து தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.






