என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பஸ்சில் பயணிகள் திக்திக் பயணம்
    X

    சென்னைக்கு பயணிகளை ஏற்றி சென்ற புதுவை அரசு பஸ்சில் வைப்பர் இல்லாதததை படத்தில் காணலாம்.

    அரசு பஸ்சில் பயணிகள் திக்திக் பயணம்

    • புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் இருந்து 5.40 மணிக்கு சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே பஸ் இயக்கப்பட்டது.

    அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது கண்ணாடியை துடைத்த வாறு பஸ் இயக்கினார்.

    இருந்தபோதிலும் மழை அதிக அளவில் பெய்ததால் சாலையில் முழுவதும் தெரியாத நிலை ஏற்பட்டது. பஸ்சை சிறிது நேரம் நிறுத்தி கண்ணாடியை துடைத்த பிறகு இயக்கினார். இதனை அறிந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

    இதன் வீடியோவை பஸ்சில் பயணித்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அரசு கவனம் செலுத்தி பஸ்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×