என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்.

    கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்

    • அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார். (வயது 30) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

    அதனை ஏற்று மணிகண்டனை அழைத்து வர அய்யனார் நோணாங்குப்பத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார்.

    அங்கு மணிகண்டனிடம் நோணாங்குப்பத்தை சேர்ந்த வர்மா என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அய்யனார் தகராறை சமாதானம் செய்து மணிகண்டனை அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் அய்யனாரும் மணிகண்டனும் சாராயம் குடிக்க நோணாங்குப்பம் சாராயக்கடைக்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் அய்யனாரை வழிமறித்து தடியால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனார் மயங்கி கீழே சாய்ந்தார்.

    அப்போது வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் பீர் பாட்டிலை எடுத்து வந்து எங்களிடம் பிரச்சினை செய்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என அய்யனாரை மிரட்டிவிட்டு சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த அய்யனாரை மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இது குறித்து அய்யனார் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×