search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NR Literary Council"

    • தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
    • போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

    புதுச்சேரி:

    என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிகரெட் புகை மட்டும் தீங்கானது அல்ல போகிப் பண்டி கையின் பொழுது எரிக்கப்படும் அனைத்து பொருட்களில் இருந்து வருகின்ற புகையும் மனித உடலுக்கு பகைதான். இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர் கள் தங்கள் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதற்கு பதி லாக அந்த பொருட்களை துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இதனால் ஏற்படும் புகை மண்டலங்கள் வாகன விபத்துகளும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் வழி வகுக்கிறது. எனவே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காமல் சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சீர்திருத்த நடவடி க்கை தொடரவேண்டும் என்று என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கூறியுள்ளார்.
    • மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும், அலுவல ர்களும் இப்படி செயல்ப ட்டால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்? மாநில வளர்ச்சி என்பது எட்டாக் கனியா கத்தானே இருக்கும்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சீர்திருத்த நடவடி க்கை தொடரவேண்டும் என்று என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கூறியுள்ளார்.

    என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தின் மொத்த வருவாயில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவே அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு ஊழியரும் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பெறுகின்றார்கள். அவ்வாறு ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் காலத்தோடு அலுவலகத்துக்கு வருவதில்லை.

    மதியம் உணவு இடைவேளைக்கு செல்பவர்கள் கூடமாலை 3 அல்லது 3.30 மணிக்குத்தான் மீண்டும் அலுவலகம் வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் மாலை 4 மணிக்கு பள்ளியில் உள்ள தங்களின் பிள்ளைகளை அழைத்துவர சென்று விடுகிறார்கள். இப்படித்தான் அரசு ஊழியர்களின் அன்றாட செயல்பாடுகளாய் இருந்து வருகிறது.

    இதனால் கிராமப் புறங்களிலிருந்து அலுவலர்களை சந்திக்க வரும் பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும், அலுவல ர்களும் இப்படி செயல்ப ட்டால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்? மாநில வளர்ச்சி என்பது எட்டாக் கனியா கத்தானே இருக்கும்.

    அரசு ஊழியர்களு க்கான சங்கத்தில் இணைந்து கொண்டு ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் கேட்டு போரா டுவது அல்லது துறைசார்ந்த உயர் பதவிகளில் இருப்பவ ரோடும், அரசியல் தலைவர்க ளோடும் நெருக்கும் காடடிக் கொண்டு தங்கள் பதவிக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

    இப்படிப்பட்ட நிலைகள் தொடர்வதை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்னுடைய துணிச்சலான நடவடிக்கை யின் பயனாய் இன்று மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை தனிப்படை அமைத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவேடு மற்றும் இதர நடவடிக்கை களை கண்காணிப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலை தொடரவேண்டும். இப்படிப்பட்ட சீர்திருத்த அதிரடி நடவடிக்கையால் மட்டுமே நமது மாநில வளர்ச்சி என்ற சிகரத்தை தொடமுடியும். நமது முதல்-அமைச்சரின் இந்த சீரிய செயலுக்கு என்.ஆர்.இலக்கிய பேரவை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாக திறமையின்மையினால் அத்தனை கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.

    புதுச்சேரி:

    என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த முறை ஆட்சியின் போது பாப்ஸ்கோ, பாண்டெக்ஸ், காண்பெட், பாண்லே, பாசிக் போன்ற எண்ணற்ற அரசு சார்பு நிறுவனங்களை உருவாக்கி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியதோடு இல்லாமல் நலிவுற்ற நிலைகளில் இருந்துவந்த கூட்டுறவு மற்றும் அமுதசுரபி ஆகியவற்றை மீட்டெடுக்க அவைகளுக்கு மதுபான மற்றும் பெட்ரோல் பங்கு உரிமங்களை வழங்கி அவற்றிற்கே புத்துயிர் கொடுத்தவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி.

    அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாக திறமையின்மையினால் அத்தனை கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள். மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற ரங்கசாமி சிதைந்துபோன அரசு சார்பு நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியாய் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதும் அதில் பணியாற்றிய ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கி வருவதோடு அவர்களின் பணிபாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் கால அளவை நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்து வருகின்றார்.

    சமீப காலமாய் மாநிலத்தில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் என்ற வார்த்தையை தகர்த்தெரியும் விதத்தில் அவற்றை நடைமுறைபடுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளார். ஏற்கனவே காவல்துறையில் 400க்கும் அதிகமான பணியிடங்களும், சுகாதாரத் துறையில் 147 பணியிடங்களும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்கள், தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரம் போன்றவை நிரப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது யூ.டி.சி., எல்.டி.சி. மற்றும் உதவியாளர்கள் என 1540-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    வருகிற காலங்களில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்ப தேவையான நடவடிக்கை மற்றும் நிதி ஆதாரத்தை தன்னுடைய நிர்வாக ஆளுமையால் உருவாக்கி வருகின்றார் முதல்-அமைச்சர் ரங்கசாமி.

    கூட்டணி தர்மத்துக்கு மதிப்பளித்து ஒரு சில கொள்கைமுடிவுகளில் தாமதம் ஏற்படுமே தவிர மாநில நலன், மக்கள் நலப்பணிகளில் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாதவர். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாத எதிர்கட்சிகள் அரசு துறைகளை விற்பனை செய்வதாக கூறும் பொய் குற்றச்சாட்டை என் ஆர் இலக்கியப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×