என் மலர்
புதுச்சேரி

அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
பொம்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
- மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலையா சுவாமிகள் திருமடத்திற்கு சொந்தமான இடங்கள் பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
- அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் ஆரோவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலையா சுவாமிகள் திருமடத்திற்கு சொந்தமான இடங்கள் பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை விசாரணையின் அடிப்படை–யில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் அதிகாரிகள் குயிலாப்பாளையம் மெயின் ரோட்டில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்த பொம்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 21,800 சதுர அடி இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் ஆரோவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ஞானம், நில அளவை சார் ஆய்வாளர் சோமசுந்தரம், திருமடம் சார்பில் அதன் நிர்வாகி சிவகுமார், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






