என் மலர்
நீங்கள் தேடியது "Anibal Kennedy"
- புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புத்துருவாக்கும் பெறும் நலிவுற்ற குடியிருப்பு பகுதியில் செயல்பட இருக்கும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தலைமை செயலகத்தில் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி அருண் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- புதிய நவீன ஒருங்கிணைந்த சுகாதாரமான கழிப்பிடம் அமைத்தல், ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் உள்ளிட்டவை சம்பந்தமாக அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் புதுமையுடன் கூடிய ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான நகர்ப்புற முதலீட்டு திட்டம் மற்றும் புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புத்துருவாக்கும் பெறும் நலிவுற்ற குடியிருப்பு பகுதியில் செயல்பட இருக்கும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தலைமை செயலகத்தில் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி அருண் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, திப்புராயபேட்டையில் நலிவுற்ற குடிைச வாழ் மக்களுக்காக 80 வீடுகளுடன் கூடிய புதிய 2 தொகுப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டமைத்தல், துறைமுக இடத்தில் நவீன சுகாதார மீன் விற்பனை அங்காடி அமைத்தல், ராசு உடையார் மற்றும் பிரான்சுவா தோட்டத்தில் பழுதடைந்த பயன்பாடற்ற கழிப்பிட கட்டிடத்தை அகற்றி புதிய நவீன ஒருங்கிணைந்த சுகாதாரமான கழிப்பிடம் அமைத்தல், ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் உள்ளிட்டவை சம்பந்தமாக அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
மேலும் முதல்வரிடம் கலந்தாய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடித்திட எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள் உறுதியளித்தனர். அப்போது தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் ராகேஷ் கவுதமன், மோரிஸ், ரகுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.க்கு பொது மக்கள் பாராட்டு
- கிளை செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் பாலாஜி மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2 பகுதியை சார்ந்த அழகர்சாமி வீதி மற்றும் ரங்கநாதன் வீதிகளில் 7 வருட காலமாக பொதுப்பணித்துறை மூலம் விநியோகிக்கப்படும் குடித்தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
அனிபால்கென்னடி எம்.எம்.ஏவிடம் மனு அளித்தனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை துணைப் பொறியாளர் வாசன், செயற்பொறியாளர் முருகானந்தம், இளநிலை ப்பொறியாளர் வெங்கடேசன், ஆகியோரிடம் அனிபால்கென்னடி எம்.எம்.ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு வைத்தார்.
அவரின் தொடர் முயற்சியால் 7ஆண்டு காலமாக நிலவி வந்த குடி நீர் பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது.
தற்போது அனைத்து பொது மக்கள் வீட்டிலும் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ.வை பாராட்டினர்.
தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜு, கிளை செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் பாலாஜி மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்






