என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில்  பா.ஜனதா இரட்டை வேடம்-சம்பத் எம்.எல்.ஏ.
    X

    கோப்பு படம்.

    ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம்-சம்பத் எம்.எல்.ஏ.

    • ஆன்லைன் சூதாட்டத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்கள் உட்பட பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.
    • புதுவையில் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் இதுவரை பறிபோயுள்ளன.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்கள் உட்பட பலர் பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து தற்கொலைகளும் நடைபெற்று வருகின்றது.

    புதுவையில் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் இதுவரை பறிபோயுள்ளன. சூதாட்டத்தின் விபரீதத்தை உணர்ந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மக்க ளின் நலன் சார்ந்த தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றி உள்ளது.

    நடந்து முடிந்த புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவையில் ஆன்லைன் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2022 என்ற சட்ட முன் வரைவை தனிநபர் மசோதாவாக கொண்டுவர நான் முயற்சி செய்தேன். சட்டமன்றத்தின் அனைத்து நடைமுறைகளின் படி எனது சட்ட முன்வரைவை முறையாக சட்டசபை செயலரிடம் சமர்ப்பித்தேன். சட்டசபை செயலர் அதை புதுவை அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி கருத்து கேட்டார்.சட்டசபை செயலாளர் மற்றும் புதுவை சட்டத்துறை செயலாளர் ஆகியோர் என்னை அழைத்து இது பற்றி சட்ட விபரங்களை கேட்டனர்.

    அதற்குண்டான அனைத்து விளக்கத்தையும் அவர்களுக்கு வழங்கினேன். ஆன்லைன் தடை சட்டம் மட்டும் 14 சட்டப்பிரிவுகளை கொண்ட சட்டமாக இயற்றப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பிரிவை பற்றியும் வழக்கறிஞர் என்ற முறையில் முறையாக விளக்கம் கொடுத்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் சட்டம் நிறைவேற்ற தேவையான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி கூறினர்.

    ஆனால் தி.மு.க. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க.விற்கு பெரிய அளவிலான அரசியல் புகழ் கிடைக்கும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜனதா தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்து சட்டசபையில் எனது தனிநபர் மசோதா வரவிடாமல் செய்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தடை விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×