என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cows roaming"

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்குஅதிக வாகன போக்குவரத்தும் உள்ளது.
    • இதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இங்குஅதிக வாகன போக்குவரத்தும் உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மொரட்டாண்டி, சேதராப்பட்டு சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்து கிடப்பதாலும் ஆங்காங்கே சுற்றித் திரிவதாலும் தொடர் வாகன விபத்து ஏற்படுகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    சாலையில் மாடுகளை விடக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆட்டோ மூலமும் சமூக வலைதள மூலமும் மாட்டின் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட மாநில இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த போது மாட்டின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது தனியார் பஸ் ஏறியதில் தலையில் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த தொடர் விபத்து காரணமாக  இரவு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சாலையில் திரியும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து அங்குள்ள பட்டியில் அடைத்தனர். மாடுகள் பட்டியில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்து மாட்டின் உரிமையாளர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக வானூர் தாசில்தார், கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    • மாடு வளர்ப்பவர்கள் காலையில் பால் கறந்துவிட்டு அதன்பிறகு அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்புவது போல தெருவில் விட்டுவிடுகின்றனர்.
    • மாநகராட்சி நிர்வாகம் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களை தெருநாய்கள் விரட்டி துரத்தி கடிப்பது நடந்து வருகிறது.

    ஒரு சில தெருக்களில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி வருவதால் அவ்வழியாக செல்வதற்கும் அச்சம் அடைந்து வேறு வழியில் பொதுமக்கள் சென்றுவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுஒருபுறம் இருக்க மாடுகள் எண்ணிக்கையும், அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாலைகளில் சர்வசாதாரணமாக சுற்றி வருகின்றன.

    இதனை வளர்ப்பவர்கள் காலையில் பால் கறந்துவிட்டு அதன்பிறகு அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்புவது போல தெருவில் விட்டுவிடுகின்றனர். மீண்டும் மாலையில் பால் கறக்க அதனை அழைத்துவந்து தெருவில் அவிழ்த்து விடுகின்றனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடிவிபத்துகளில் சிக்கி விடுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. கால்நடை வளர்ப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து தெருவில் சுற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் ரெயில்வே நிலையம் அருகே அனுமந்தநகர், மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • மேலும் கால்நடைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சுற்றித் திரியும் போதும் தண்டவாளத்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில்வே நிலையம் அருகே அனுமந்தநகர், மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். அந்த மாடுகள் சாலையோரம் மற்றும் ரெயில்வே தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன.

    இந்த நிலையில் சிதறி கிடக்கும் உணவுகளை கால்நடைகள் உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உண்பதால் கால்நடைகளுக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சுற்றித் திரியும் போதும் தண்டவாளத்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆகவே சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்களில் சுற்றி திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விட வேண்டும்.மீறும்பட்சத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×