என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றி திரியும் மாடுகளால் ஆபத்து"
- திண்டுக்கல் ரெயில்வே நிலையம் அருகே அனுமந்தநகர், மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- மேலும் கால்நடைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சுற்றித் திரியும் போதும் தண்டவாளத்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ரெயில்வே நிலையம் அருகே அனுமந்தநகர், மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். அந்த மாடுகள் சாலையோரம் மற்றும் ரெயில்வே தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் சிதறி கிடக்கும் உணவுகளை கால்நடைகள் உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உண்பதால் கால்நடைகளுக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சுற்றித் திரியும் போதும் தண்டவாளத்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்களில் சுற்றி திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விட வேண்டும்.மீறும்பட்சத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






