என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பட்டியில் அடைப்பு
    X

    பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகள்.

    சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பட்டியில் அடைப்பு

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்குஅதிக வாகன போக்குவரத்தும் உள்ளது.
    • இதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இங்குஅதிக வாகன போக்குவரத்தும் உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மொரட்டாண்டி, சேதராப்பட்டு சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்து கிடப்பதாலும் ஆங்காங்கே சுற்றித் திரிவதாலும் தொடர் வாகன விபத்து ஏற்படுகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    சாலையில் மாடுகளை விடக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆட்டோ மூலமும் சமூக வலைதள மூலமும் மாட்டின் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட மாநில இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த போது மாட்டின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது தனியார் பஸ் ஏறியதில் தலையில் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த தொடர் விபத்து காரணமாக இரவு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சாலையில் திரியும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து அங்குள்ள பட்டியில் அடைத்தனர். மாடுகள் பட்டியில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்து மாட்டின் உரிமையாளர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக வானூர் தாசில்தார், கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×