என் மலர்
நீங்கள் தேடியது "denture fitting"
- புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பத்தில் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.
- இச்சேவைக்கான கருவி மற்றும் பொருள்களை ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் துணை தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ், பல் கட்டும் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பத்தில் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்குள்ள செயற்கை பல் கட்டும் பிரிவில் முதல் கணினி தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்து தயாரிக்கும் அதிநவீன செயற்கை முழுவாய் பல் செட் பொருத்தும் சேவை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சேவைக்கான கருவி மற்றும் பொருள்களை ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் துணை தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ், பல் கட்டும் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.
அதையொட்டி பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர். மனோகர் மற்றும் டாக்டர். பழனி பிரசாந்த் சிகிச்சைக்கான செய்முறை பயிற்சியை டாக்டர் மெர்லின் ஜார்ஜ் தலைமையில் நிகழ்த்தி உள்ளனர். இந்த ஆய்வகம் ஆசியாவின் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக 5 முதல் 6 பார்வை நேரத்தில் பொருத்தப்படும் செயற்கை முழுவாய் பல் செட்டை இரு நாட்களில் பொருத்த இயலும் என்பது இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். இத்தகவலை ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.






