search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    11 ஏரிகள் நிரம்பி வழிகிறது
    X

    தென்பெண்ணை ஆற்றில் அதிகபட்சமாக 8 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.

    11 ஏரிகள் நிரம்பி வழிகிறது

    • தமிழக பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி 13 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
    • இந்த நீர் புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க சென்று கொண்டிருக்கிறது.

    புதுச்சேரி:

    தமிழக பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி 13 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் தென் பண்ணையாற்றில் மேலும் அதிகபட்ச தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இருபுறமும் கரைபுரண்டு ஓடியதால் பல இடங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையிலேயே உள்ளது.

    இந்த நீர் புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க சென்று கொண்டிருக்கிறது. புதுவை மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவை எட்டியதால் சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மதகுகளை மூடி உள்ளனர். தற்பொழுது பாகூர் ஏரியில் நிரப்பப்பட்ட நீர் தொடர்ந்து ஜனவரி மாதம் வரை அதிகபட்ச கொள்ளளவில் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    தென்பெண்ணை ஆற்றில் வரும் வெள்ள நீரால் பாகூர் சித்தேரி, மணப்பட்டு ஏரிகளை நிரம்பி வழிகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் கிருமாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு, உச்சிமேடு, குருவிநத்தம், கடுவனூர் உள்ளிட்ட 11ஏரிகள் நிரம்பி உள்ளது.

    Next Story
    ×