என் மலர்
புதுச்சேரி

தொடக்க விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.சி.எஸ். பொது மேலாளர் டேனியல் ஆனந்த் கிறிஸ்டோபர், டேலன்ட் ஆக்யூசிஷன் குழு தலைவர் விக்னேஷன் பரமசிவம், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் பரிசு வழங்கினர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
- மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் 24-வது பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது.
- துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் 24-வது பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். டி.சி.எஸ்., நிறுவனபொது மேலாளர் டேனியல் ஆனந்த் கிறிஸ்டோபர், டேலன்ட் ஆக்யூசிஷன் குழு தலைவர் விக்னேஷன் பரமசிவம் சிறப்புரையாற்றினர்.
விழாவில் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சிகளை பட்டியலிட்டார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மணக்குளவிநாயகர் இன்ஸ்ட்டி டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் மலர்க்கண், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளார் ஜெயக்குமார், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






