என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா
    X

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்ற காட்சி.

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

    • நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை கல்வித்துறை, இணை இயக்குநர் சிவகாமி சிறப்புரையாற்றி புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்கள் நலனுக்காக, குடிநீரை மேம்படுத்துவதற்காக, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் (1978-80) நிறுவிய புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் ஆஷாராணி வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை கல்வித்துறை, இணை இயக்குநர் சிவகாமி சிறப்புரையாற்றி புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

    இவ்விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் தெய்வநாயகம் மற்றும் சங்க உறுப்பினர் குமரகுரு உரையாற்றி தங்கள் பள்ளிக்கால அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

    விழாவின் முடிவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பட்டதாரி ஆசிரியை விஜயசாமுண்டீஸ்வரி தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து நிலை ஆசிரியை- ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×