என் மலர்
புதுச்சேரி

சர்வதேச மருத்துவ மாநாட்டில் விழா மலர் வெளியிட்ட போது எடுத்த படம்.
மருத்துவ முதல் சர்வதேச மாநாடு
- கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து, கம்பெக்டிங் அண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டண்ட் எனும் முதல் சர்வதேச மாநாடு புதுவை, ஆனந்தா இன் ஓட்டல் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
- புதுவை வி.சி. ஆர்.சி. தலைவர் டாக்டர். அஸ்வனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து, கம்பெக்டிங் அண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டண்ட் எனும் முதல் சர்வதேச மாநாடு புதுவை, ஆனந்தா இன் ஓட்டல் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
மாநாட்டுக்கு விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் தலைமை தாங்கினார்.
புதுவை வி.சி. ஆர்.சி. தலைவர் டாக்டர். அஸ்வனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதுவை பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் ஜோசப் செல்வின் கவுரவ விருந்தினரக கலந்து கொண்டார்.
ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் லதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர். கோட்டூர் தொடக்கவுரை ஆற்றினார். கல்லூரி ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் விஷ்ணு பட் மாநாட்டு செயல்பாட்டினை விளக்கும் நினைவுப் புத்தகத்தை வெளியிட்டார். கல்லூரி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் டாக்டர்.ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.
கல்லூரி நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் டாக்டர். கவிதா விழா ஏற்பாட்டினை செய்திருந்தார். மாநாட்டில் லண்டன் இம்பிரியல் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்தியாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் பேராசிரியர்களும், மாணவர்களும், மேற்ப–டிப்பு மாணவர்களும் மற்றும் ஆராய்ச்சி துறை மாணவர்களும் கலந்துகொண்டு வாய்வழி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி வழங்கினர்.
இதில் சிறப்பான விளக்கக்காட்சிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் சென்னை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் டாக்டர். ஹிமாணி டெம்பர்மாவுக்கு "இளம் ஆராய்ச்சியாளர் விருதும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும்" வழங்கப்பட்டது. இறுதியில் மருத்துவ மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.






