search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்ய வேண்டும்-சிவா எம்.எல்.ஏ. ஆவேசம்
    X

    கோப்பு படம்.

    கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்ய வேண்டும்-சிவா எம்.எல்.ஏ. ஆவேசம்

    • ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்த ப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.
    • போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடா விட்டால், போராட்டம் தொடரும்.

    புதுச்சேரி:

    புதுவை சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

    ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்த ப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா முழுவதும் நமது போராட்டம் பரவியுள்ளது.தி.மு.க.விற்கு ஆட்சி முக்கியமில்லை, பல முறை ஆட்சியை இழந்துள்ளோம். பூச்சாண்டிக்கு பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது. தலைமை தபால் நிலையத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது சூட்டிங் ஆர்டர் போடுவோம் என்றனர்.

    ஜனநாயகத்தில் கடமை, கண்ணியத்துடன் போராட்டம் நடத்த நினைக்கின்றோம், தி.மு.க. எத்தனையோ சூட்டிங் ஆர்டர்களை பார்த்துள்ளது. தி.மு.க. திருட்டுத்தனமாக ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல. கொள்கை இல்லாமல் விலைபேசி ஆட்களைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் கிடையாது. தி.மு.க. 27 ஆண்டாக ஆட்சியில் இல்லை, ஆனாலும் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

    போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடா விட்டால், போராட்டம் தொடரும்.

    மத்திய அரசின் முகமூடி மக்களுக்கு தெரிந்துவிட்டது. புதுவையில் மின்துறை, சுற்றுலாத்துறை என அனைத்தும் குட்டிச்சுவர் ஆக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். தேர்தலில் அறிவித்தபடி துறைமுகத்தை இயக்கத்திற்கு கொண்டுவந்தீர்களா? மூடப்பட்ட சுசேதி மில், ரோடியர் மில், கூட்டுறவு சர்க்கரை ஆலை எதை திறந்தீர்கள்? கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    கவர்னர் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும். புதுவை வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று ஜனநா யகத்தின் அடிப்படையில் மரியாதை கொடுத்து பேசி வருகின்றோம். ஆனால் கவர்னர் என்பதை மறந்து 2024 ஆட்சிக்கு பா.ஜனதா வருவதற்கான ஆலோசனை குழுவில் பங்கேற்று கருத்துக்களை கூறி வருகிறார்.

    இவர் புதுவையின் கவர்னராக பொறுப்பேற்றவுடன் செய்த காரியம், ஆட்சியை கலைத்ததுதான்.

    புதுவை சபாநாயகரும் ஜனநாயக மரபுகளை மீறுகின்றார். நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.தான், இந்துத்துவாதான் என்று கூறி நமச்சிவாயம் உள்ளிட்டோர் தைரியமாக வெளியில் கூறி வரவேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தம் தமிழகம், புதுவையில் ஒரு காலமும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×