என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் மருத்துவகல்லூரியில் உலக மனநல வாரநிறைவு விழா கொண்டாடிய போது எடுத்த படம்.
உலக மனநல வாரநிறைவு விழா
- உலக மனநல வார விழா வை முன்னிட்டு புதுவை மணகுள விநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையும், மனநல செவிலியர் துறையும், செவிலியர் கல்லூரியும், மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல வாரவிழா கொண்டாடியது.
- மனநலத்துறை உதவி பேராசிரியர் சுகன்யா தேவி வரவேற்றார். மனநலத்துறை தலைவர் அருண் இந்த வருட மைய கருத்தை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
உலக மனநல வார விழா வை முன்னிட்டு புதுவை மணகுள விநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையும், மனநல செவிலியர் துறையும், செவிலியர் கல்லூரியும், மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல வாரவிழா கொண்டாடியது.
இதன் நிறைவு விழா நடைபெற்றது. மணகுள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைதலைவர் சுகுமாறன், செயலாளார் டாக்டர் நாராயணசாமி கேசவன், மருத்துவகல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடமிக்) கார்த்திகேயன் டீன் (ஆராய்ச்சி) கலைச்செல்வன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ், மனநலத்துறை தலைவர் அருண் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மனநலத்துறை உதவி பேராசிரியர் சுகன்யா தேவி வரவேற்றார். மனநலத்துறை தலைவர் அருண் இந்த வருட மைய கருத்தை எடுத்துரைத்தார்.
சுவரொட்டி போட்டி, பேச்சு போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாராயணசாமி கேசவன் பரிசு வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் சபரி ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். செவிலியர் மனநலத்துறை உதவி பேராசிரியர் நதியா நன்றி கூறினார்.






