என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உள்ளூர் மக்களை விட வெளியூர் பக்தர்களே அதிக அளவில் வந்து நீராடி சென்றனர்.
    • சாமிக்கு தீர்த்தவாரியும், 6 மணிக்கு கங்காஆரத்தி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்முறை யாக வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது.

    மே 3-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் நாள்தோறும் 8 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாகம், மதியம் 12 முதல் ஒரு மணி வரை தீர்த்தவாரி, 6 முதல் 7 மணி வரை கங்கா ஆரத்தி, இரவு 7 முதல் 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது. உள்ளூர் மக்களை விட வெளியூர் பக்தர்களே அதிக அளவில் வந்து நீராடி சென்றனர்.

    முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் திருக்காஞ்சி திணறியது. அரசு விடுமுறை நாளான இன்றும் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து புனித நீராடினர்.

    ஆயிரக்க ணக்கான பக்தர்கள் ஒரே நாளில் நீராடினர். ராசி, நட்சத்திரம் தெரியாத அனைவரும் நீராடலாம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் தலைமை குருக்கள் சரவணன் சிவாச்சாரியார் தலை மையில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷே கமும், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு கங்காஆரத்தி நடந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • சித்தலம்பட்டு பகுதியில் கடந்த 6மாத ங்களுக்கு முன்பு 2 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே உள்ள சித்தலம்பட்டு கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42) . புதுவையில் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இவர் சித்தலம்பட்டு பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை குடும்பத்துடன் கே ரளாவிற்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 5 மணியளவில் சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர் .

    அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டினுள் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து 6 பவுன் நகை 30 ஆயிரம் ரொக்க பணம் 1/2 கிலோ மதிப்புமிக்க வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து சித்தலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் சித்தலம்பட்டு புதுவை பகுதியான திருக்கனூர் பகுதிக்கு அருகாமையில் இருப்பதால் திருக்கனூர் போலீசாரும் இந்த திருட்டு சம்பந்தமாக அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் . மேலும் இந்த சித்தலம்பட்டு பகுதியில் கடந்த 6மாதங்களுக்கு முன்பு 2 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை இதனால் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் . இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஹர்ஷவர்தன் 4-ம் பரிசையும் வழங்கினர்.
    • ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் ஆகியோர் வழங்கினர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திருபு வனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் தலைமையில் கிரிக்கெட் போட்டி மதகடிப்பட்டு அரசு கலைஞர் கருணாநிதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் திருபு வனை தொகுதிக்கு உட்பட்ட 14 அணிகள் போட்டியில் பங்கு பெற்றன. அதில் முதல் பரிசை ஆண்டியார் பாளையம் ராஜா கிரிக்கெட் கிளப்பும், 2-ம் பரிசை திருபுவனை பாளையம் பகுதியை சேர்ந்தகிரிக்கெட் கிளப்பும் , 3-ம் பரிசை கலிதீர்த்தாள் குப்பம் மின்னல் கிரிக்கெட் கிளப் அணியினரும் , 4-ம் பரிசை ஆண்டியார் பாளையம் ஸ்பார்டன் கிரிக்கெட் கிளப் அணியினர் பெற்றனர்.

    இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுவை காங்கிரஸ் கட்சியின்மாநில பொதுச் செயலாளர் சங்கர் முதல் பரிசையும் ,காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் கோனேரி லோகையன் 2-ம் பரிசையும், புதுவை மாநிலஇளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் 3-ம் பரிசையும் , புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஹர்ஷவர்தன் 4-ம் பரிசையும் வழங்கினர்.

    இப்போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்க ளுக்கு புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் ராஜாராம் சீருடைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளை மாநில இளைஞர் காங்கிரஸ்பொதுச் செயலாளர் தேவகுமார் , இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் செல்வப்பிரியன் , ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் ஆகியோர் வழங்கினர்.

    • என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு.
    • ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.

    புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.

    பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.

    ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.

    ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும்போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை ரோஜா ஆந்திராவில் நடிகர் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும்.
    • உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள்.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். பொரு ளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவர்கள். அவர்களுடைய வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும்.

    உழைக்கும் மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    • போக்குவரத்து தடைபடும் அபாயம் ஏற்படும்.
    • 100 புதிய பஸ்களை வாங்கி வழித்தடத்தில் இயக்கிய பிறகு பழைய பஸ்களை ஒழிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் மாசை குறைக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அரசு பயன்படுத்தும் பழைய வாகனங்களை ஒழிக்க வழிகாட்டி நெறிமுறையை வகுத்துள்ளது.

    அதன்படி, 15 ஆண்டுக்கு மேலான பழைய அரசு வாகனங்களுக்கு தகுதி சான்று பெற முடியாது என அறிவித்துள்ளது. புதுவை யில் அரசு போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.யில் மொத்த முள்ள 130 பஸ்களில் 40 மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

    மத்திய அரசின் உத்தரவினால் பி.ஆர்.டி.சி.யில் இயக்கப் படும் 40 பஸ்களில் பழைய மாடல் உள்ள 15 பஸ்களில் சேவையை நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் தள்ளப்படும் பி.ஆர்.டி.சி. நிறுவனம் தற்போது மேலும் பஸ்களை இயக்க முடியாததால் அந்த துறை மேலும் சரிவை சந்திக்கும் அபாயமும், பொது போக்குவரத்து சேவை முற்றிலும் தடைபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆகவே, மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்தும் முன் சட்டமன்றத்தில் அறிவித்த 100 புதிய பஸ்களை வாங்கி வழித்தடத்தில் இயக்கிய பிறகு பழைய பஸ்களை ஒழிக்க வேண்டும்.

    புதிய பஸ்கள் வாங்க தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற்று உடனடியாக பஸ்கள் வாங்க வேண்டும். அதுவரை அரசு பஸ்கள் தங்கு தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான்.
    • கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது.

    இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.

    ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம்.

    பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
    • மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    இன்று அதிகாலை முதலே புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.

    சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர். கடற்கரை சாலையில் கடலில் குளிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையையும் மீறி குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.

    புதுவை நோணாங்குப்பம் படகு குழாமில் படகில் சவாரி செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி சென்றனர்.

    இதேபோல் புதுவையின் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    மதிய வேளையில் பிரபல உணவகங்களில் மேஜையை பிடிக்க வரிசையில் நின்றனர்.

    • கவர்னர் தமிழிசை ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கட்டணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கும்.

    புதுச்சேரி:

    புதுவை கேரிங் ஆர்ம்ஸ் தொண்டு நிறுவனம் அறக்கட்டளை கர்ப்பிணி பெண்களுக்கான கட்டண மில்லா ஆட்டோ சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    கவர்னர் தொடங்கி வைத்தார் இதன் தொடக்க விழா கவர்னர் மாளிகை எதிரே நடந்தது. கவர்னர் தமிழிசை ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொண்டு நிறுவன மேலாண் இயக்குனர் எரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் உள்ள கர்ப்பிணி பெண்கள் 83448 68788 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டால் ஆட்டோ வீடு தேடி வரும். கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம். கட்டணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கும்.

    • உலக இயக்கத்தின் உந்துசக்தியாக விளங்குபவர்கள் உழைப்பாளர்கள்.
    • மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள மேதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்கள் அனைவருக்கும் குறிப்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலக இயக்கத்தின் உந்துசக்தியாக விளங்கு பவர்கள் உழைப்பா ளர்கள்.

    அவர்களின் உழைப்பாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த உழைப்பாளர்களின் மேன்மையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உழைப்பால் வீட்டையும் நாட்டையும்உயர்த்தும் அனைத்துத் தொழிலா ளர்களின் நலனில் எங்கள் அரசுஎப்போதும் தனிக் கவனம் கொண்டுள்ளது. அவர்களது வளமான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் அரசாக எங்கள் அரசு என்றும் தொடரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்ப ட்டுள்ளேன்.

    இந்த மே தினமானது மனிதகுலத்தின் மேன்மை க்காகவும், நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், வலிமை க்காகவும் அயராது பாடுபடும் தொழிலாளர்களிடையே ஒற்று மையையும்,அவர்களது வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று கூறி, அனைவருக்கும் எனது உளம்கனிந்த மேதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • காலாபட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 3 ஷிப்டாக நடந்தது.
    • திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்டெனோகிராபர் கிரேடு2 பதிவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு நடத்தப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஸ்டெனோகிராபர் பதவிக்கான தேர்வு காலாபட்டு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 3 ஷிப்டாக நடந்தது. ஸ்டெனோகிராபர் தேர்வில் இன்ஸ்டக்டர் தவறான வழிகாட்டுதல் கூறியதாக கூறி தேர்வு எழுதியவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தேர்வு மையத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
    • புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணி களை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை, வணிக விழா சங்கம் சார்பில் வணிக திருவிழா நடந்தது.

    இதில் 10 லட்சத்து 87 ஆயிரம் இலவச கூப்பன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பரிசு குலுக்கல் கடந்த மார்ச் 21-ந் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு பரிசளிப்பு விழா காந்தி திடலில் நடந்தது.

    சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது: -

    புதுவையில் புகழ்பெற்ற ஆன்மிக திருத்தலங்கள் உள்ளது. திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடக்கிறது. காரைக்கால் கோவில் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்கி ஆன்மிக சுற்றுலாவுக்காக ஆன்மிக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

    வில்லியனூர் கோவில் நகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் பல விடுதிகள் கட்டப்படுகிறது. எந்த அச்சமும் இன்றி சுற்றுலா பயணிகள் தங்கி செல்கின்றனர். புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களிலும் சுற்றுலா இடங்களை மேம்படுத்தவும், சிறப்பு மிக்க கீழூரையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல் பரிசாக 11 பேருக்கு கார், 2-ம் பரிசாக 22 பேருக்கு ஸ்கூட்டர், 3-ம் பரிசாக 110 பேருக்கு மொபைல் போன், 4-ம் பரிசாக ஆயிரத்து 170 பேருக்கு சமையலறை பொருட்கள், 10 ஆயிரத்து 961 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, வணிக விழா சங்க தலைவர் குணசேகரன், துணை தலைவர்கள் சிவகணேஷ், தணிகாசலம், சங்க செயலாளர் ரவி, இணை செயலாளர்கள் பாலாஜி, ரவி, வேல்முருகன், பொருளாளர் பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×