என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மாநிலத்தில் கோடைகால நவரை பருவ நெல் சாகுபடி பெருமளவு நடைபெற்று வருகிறது.
    • சுமார் 1300 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிற் நடவு செய்யப்பட்டுள்ளது.

    பதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கோடைகால நவரை பருவ நெல் சாகுபடி பெருமளவு நடைபெற்று வருகிறது. இதில் பாகூர் சேலிய மேடு, குருவிநத்தம், பரிக்கல் பட்டு, கிருமாம்பாக்கம்,உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1300 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிற் நடவு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலம் முழுக்க சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் அதாவது 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிருக்கு ஊட்டச்சத்தான ராசயன பொட்டாஷ் உரம் குறைந்த அளவு பயன்படுத்தி வருகின்றனர். அரசு ரசாயன உரத்திற்கு பதிலாக மாற்று ஏற்பாட்டில் ஆர்கானிக் உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

    ஆனால் போதுமான உற்பத்தி கிடைக்காதால் ரசாயன உரத்தை நாட வேண்டி பல விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நவரைப் பருவத்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ பொட்டாசியம் உரத்தை கலந்து நெல்களை எடுத்து முடிந்த பிறகு தெளித்து வருவார்கள்.

    தற்போது விலை அதிகமாக இருந்து வருவதால் வாங்க முடியாமலும், உரக்கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதுவையில் உள்ள உரக்கடை பல இடங்களில் பொட்டாசியம் உரம் இல்லாததால் விவசாயிகள் பலர் தமிழக பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் கையேந்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    பாசிக் அரசு நிறுவனமும் மூடப்பட்டுள்ளதால் பல விவசாயிகள் அருகிலுள்ள தமிழக பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கையேந்தி தனது நிலத்திற்கு பொட்டாசியம் உரத்தை தெளிக்கின்றதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    ஆனாலும் தமிழகப் பகுதியில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    • புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • நடந்த போட்டித் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் 35 சுருக்கெழுத்தர் பணிக்கு நடந்த போட்டித் தேர்வில் பல்வேறு முறை கேடுகள் அரங்கேறியுள்ளது. தேர்வுக்காக சுமார் 5 ஆண்டுகள் வரை கடுமையாக உழைத்த இளைஞர்கள் அரசுப்பணி கனவை சிதைத்துள்ளனர்.

    முறைகேடாக நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வு எழுதிய இளைஞர்களின் குறைகளை முழுமையாக கேட்டறியாத முதல்- அமைச்சர் ஒன்றும் செய்ய முடியாது என பேசியுள்ளார்.

    முதல்-அமைச்சரின் இந்த பேச்சு, 3 தொகுதிகளை சேர்ந்தவர்களை மட்டுமே சுருக்கெழுத்தர் பணிக்கு தேர்வு செய்வதற்கான திட்டமிட்ட சதியாக இருக்க லாமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்தில் நேர்மையாக தேர்வு நடத்து வதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட வில்லை. தேர்வு தொடங்கும் நேரத்தை கணக்கிட அனைவரும் பார்க்கும்படி யாக கடிகாரம் அமைக்கப்படவில்லை.ஆங்கில இலக்கணமும் பிழையாக வாசிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே அரை குறையாக, முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை கவர்னர் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகழ்நிலை பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.
    • பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளையார் குப்பம் மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகழ்நிலை பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.

    பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். பெங்களூரு, ராமையா பண்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பு துணை வேந்தர் ஓம் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2017, 2018, 2019, 2021 ஆண்டு படித்த சிறந்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு களில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து கல்லூரி ஆண்டு விழா மகாத்மாகாந்தி மருத்து வகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்க ளின் கலை விழா நடை பெற்றது. ஆடல், பாடல், பேஷன் ஷோ மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    கல்லூரியின் முதல்வர் சீதேஸ் நன்றி கூறினார்.

    • திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் மே தின விழாவை ஆலையின் வாயிற் படியின் அருகில் நடைபெற்றது.
    • விழாவில் ஐ.என்.டி யு.சி பி.எம்.சி தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் மே தின விழாவை ஆலையின் வாயிற்படியின் அருகில் நடைபெற்றது. விழாவில் ஐ.என்.டி யு.சி பி.எம்.சி தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    விடுதலை முன்னணி தொழிற்சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். கடந்த ஒரு ஆண்டு கூட்டுறவு நூற்பாலை இயங்காத நிலை யில், வேலையில்லாமல் வீட்டில் இருந்து கொண்டு பல்வேறு பணிகளை செய்து தமது குடும்பத்தை காப்பாற்றி வரும் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் தினம் கொண்டாட முடியாமல் இருந்த நிலையில், மே தினத்தில் அதே தொழிற்சாலையில் பணி புரிந்த ஐ.என்.டி.யு.சி, பி.எம்.சி. செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பணி ஓய்வு பெற்று செல்லும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஆலை தொழிலாளர்கள் கலந்து கொண்டு மே தின விழாவில் தங்களுடைய வாழ்த்துக்களையும், வேதனைகளையும் கூறி பேசினார்கள். கூட்டுறவு நூற்பாலை கடந்தண்டாக இயங்கவில்லை, கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியும் தரவில்லை, ஆலை நிர்வாகம் தொழிலாளருக்கு தர வேண்டிய செட்டில்மெண்ட் பணம் தரவில்லை, நிரந்தர வேலையும் இல்லை, வாழ்நாள் முழுவதும் பல வருடம் கடின உழைப்பில் பணிபுரிந்தும், ஓய்வு பெறும் நேரத்தில் சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தாரை காக்க முடியாமல் தலையை குனிந்து நிற்கிறோம். அரசு இந்த ஆலையினை இயக்காமல் இன்று வரை எங்களை ஏமாற்றி வருகின்றது. எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புதுவையில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வேலையை இழந்து மே தினத்தை கொண்டாட முடியாமல் உள்ளனர். இருந்த போதிலும் மே தினம் கொண்டாடும் அனை த்து தொழிலாளர்களுக்கும் எங்க ளுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வேதனையோடு கூறி கண்ணீர் மல்க அழுது தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மே தினத்தில் கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் கண்கலங்கி சென்றது பார்ப்போரை நெகிழ வைத்தது.

    • புதுவை அரசுக்கு பாரதிதாசன் அறக்கட்டளை பாராட்டு
    • கம்பன் கலையரங்கத்தில் கலை பண்பாட்டுத் துறை சிறப்பான முறையில் நடத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை கடந்த 29-ந்தேதி கம்பன் கலையரங்கத்தில் கலை பண்பாட்டுத் துறை சிறப்பான முறையில் நடத்தியது. அந்த விழாவிலேயே பலகாலமாக வழங்கப்படாமல் இருந்த புதுவை கலைமாமணி விருதுகளை 6 துறைகளைச் சேர்ந்த 216 கலைஞர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் புதுமை பொங்கக் கோலாகலமான விழா எடுத்து வழங்கிச்சிறப்பித்ததற்காகப் புதுவை அரசையும், கவர்னர், முதல்-அமைச்சர், சபாநாயகர், கலை பண்பாட்டுத் துறை அமைச்சர், அமைச்சர்கள், துறைச்செயலர், இயக்குநர், ஊழியர்கள் அத்தனை பேருக்கும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், விருதாளர்கள் சார்பிலும் பாவேந்தர் குடும்பத்தார் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில்  பாராட்டுகிறேன்.

    மேலும் 2021,2022 ஆண்டுகளுக்கான விருதுக ளையும் விரைந்து வழங்கவும் வேண்டுகிறேன். மேலும் அரசுக்கு நன்றி தெரிவிக்கவும் விருது பெற்ற 216 கலைமா மணிகளைப் பாராட்டவும் மன்னர் மன்னன் அறக்கட்டளை சார்பில் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) புதுவையில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • செயற்பொறியாளர் வேண்டுகோள்

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டம், நகர்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், துப்புராயப்பேட், நெல்லித்தோப்பு, எல்லைப்பிள்ளைச் சாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்து மின்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர்.

    புதுச்சேரி:

    18-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நில பிரபுக்கள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நசுக்கி பிழிந்து வந்தனர்.

    1986-ம் ஆண்டு மே 4-ந்தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் ரொட்டி தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் அதிக பணி நேர வேலை, குறைந்த கூலி ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அன்று தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த தகவல் 6 மாதத்திற்கு பிறகு ஜெர்மனில் இருந்த காரல்மார்க்சை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

    இதையடுத்து பல நாடுகள் மே 1-ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க தொடங்கியது. 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் தொழிலாளர்கள் பல நாடுகளில் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி போராட தொடங்கினர். 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.

    இதன் தாக்கம் புதுவையிலும் எதிரொலித்தது. அப்போது புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர். ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ், சவானா, கெப்ளே என 3 பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். 1936-ம் ஆண்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் வ.சுப்பையா தலைமையில் 8 மணி நேர வேலை உரிமைக்காக பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் வலுத்தது.

    போராட்டத்தை அடக்க 1936-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பிரெஞ்சு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் 1937 ஏப்ரல் 6-ந்தேதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நகல் புதுவைக்கு கிடைத்தது. அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மொழி பெயர்ப்பு செய்து, தமிழிலில் பாரதிதாசன் வெளியிட்டார். தொழிலாளர்கள் உயிரை இழந்து 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த போராட்டத்தின் நினைவாக மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இன்று 138-வது மே தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுவையிலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு, சீருடை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

    • கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இனிப்பு , உணவு பொட்டலங்கள் , சீருடைகள் வழங்கப்பட்டது.

     புதுச்சேரி:

    நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் தினத்தையொட்டி கதிர்காமம் என்.ஆர்.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. என்.ஆர்.டி.யூ.சி. மாநில கவுரவ தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    புதுவை மாநில தொ.மு.ச. சார்பில் சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், கதிர்காமம், புவன்கரே வீதி ஆட்டோ ஸ்டேண்ட், எம்.பி.டி.எல். தொழிற்சாலை, திருவள்ளுவர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய ஆட்டோ தொழிற்சங்கங்கள், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பி.ஆர்.டி.சி. பணிமனை, வில்லியனூர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட 30 இடங்களில் தொ.மு.ச. கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொ.மு.ச. பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கி னார். தொ.மு.ச. நிர்வாகிகள் சிவக்குமார், மிஷேல், இமாணு வேல், விமல், ராஜேஷ், நாகமுத்து, கண்ணன், ஐய்யனார், கிருஷ்ணமூர்த்தி, ரவி, அண்ணாதுரை, சீனுவாசன், காந்தி, அமாவாசை, இக்பால் பாஷா, ராஜேந்திரன், திருக்குமரன், முருகன், சண்முகம், தங்கவேல், பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், தொ.மு.ச. கவுரவ தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தொ.மு.ச. கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை, மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ. தைரியநாதன், பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்.குமரவேல், ஜே.வி.எஸ். சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    புதுவை மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

    ரெயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு, பஸ் நிலையம், முதலியார் பேட்டை, உப்பளம், வாணரப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் சாலை ஆட்டோ ஸ்டாண்டு மற்றும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் தொழிலாளர் தினம் இன்று கொண்டா டப்பட்டது.

    லெனின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தொழிற் சங்க கொடியை ஓம்சக்தி சேகர் ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பி னர்களுக்கு சீருடைகளை வழங்கினார். புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மே தின விழா இன்று கொண்டாடப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பஸ் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், மீனவர் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள், லோடு கேரியர் ஓட்டுநர்கள், அரசு சார்பு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள், பெரிய மார்க்கெட் அடி காசு வியாபாரிகள், சண்டே மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் கொடியேற்றி இனிப்பு , உணவு பொட்டலங்கள் , சீருடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், பொதுச் செயலாளர் சேது செல்வம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவை மாநில கம்யூனிஸ்டு எம்எல் கட்சி சார்பில் மே தின விழா கொண்டா டப்பட்டது. ஏ.ஐ.சி.சி.டி.யு. இணைப்பு சங்கம் சார்பில் கிளைகள், தொழிற்சாலை வளாகங்களில் கொடி ஏற்றப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநில தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியினை கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தொழிற்சங்கத்தின் கொடியை ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் ஏற்றினர்.

    இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

    • அரியாங்குப்பத்தில் சிவா எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா நடந்தது.
    • நிர்வாகிகள் சேகர் சுரேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி ரபேல் ராஜேந்திரன் வீரா அஞ்சாபுலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. சார்பாக அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் நடந்தது.

    தொகுதி தி.மு.க. செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கோபால கிருஷ்ணன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொறியாளர் அணி அருண்குமார், மாநில அணி நிர்வாகி சிவசங்கர், மாநில பிரதிநிதி தினராசு, மாநில துணை அமைப்பாளர்கள் பொறியாளர் அணி முகுந்தன், இலக்கிய அணி கலிவரதன், மாணவரணி வினோத் குமார், மீனவரணி மதிவாணன், தொகுதி அவைத் தலைவர் சிலம்புச்செல்வன் ராஜேந்திரன் ஜீவானந்தம் லியாகத் அலி முன்னாள் அவைத் தலைவர் தியாகராஜன் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் அரசு கழக முன்னோடிகள் டெம்போ பெருமாள் லோகநாதன், நாகூர் மீரான், குமார், சின்னையன் ,உதய சங்கர், பன்னீர்செல்வம், ஜபருல்லா கிளை செயலா ளர்கள் அஜிஸ் பாஷா, வைத்தியநாதன் ,கந்தசாமி, பாபு தில்லைப்பன், சேரலா தன், சேதுபதி , பரூக் என்ற ஆறுமுகம் அருணா சக்தி வேல், ஞானவேல் ,சோமு ,சின்னதுரை, சரவணன் முன்னாள் தொகுதி மற்றும் நிர்வாகிகள் சேகர் சுரேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி ரபேல் ராஜேந்திரன் வீரா அஞ்சாபுலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காசிம் சாலையை சேர்ந்தவர் முகம்மது ஷரீப். இவரது மகன் முகமது ஷமீர் (வயது 27) சென்னையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வந்தார்.

    சில நாட்களாக வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இவர் மோட்டார் சைக்கிளில் இரவு டிபன் சாப்பிடுவ தற்காக புதுவை பஸ் நிலையம் அருகே சென்றார், அவருக்கு பின்னால் வேறோரு வாகனத்தில் அவரது நண்பர் முகமது பைசல் சென்றுள்ளார்.

    மறைமலையடிகள் சாலையில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சென்றபோது நெல்லித்தோப்பு சிக்னலில் முகமது ஷமீர் அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி முகமது ஷமீர் கீழே விழுந்துள்ளார்.

    இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அவரது நண்பர் முகமது பைசல் உடனே அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பச்சையப்பன் வீட்டிற்கே சென்று, அவரை இரும்பு ராடால் தாக்கினார்.
    • புகாரின் பேரில் மடுகரை போலீசார் அசோக் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் பச்சையப்பன் (வயது38). இவர் வீட்டிலே பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இவர் குடும்பத்துடன், வெளியே சென்று இரவு வீட்டிற்கு திரும்பிய போது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்ப நாயுடு மகன் அசோக்குமார் அவர்களை வழிமறித்து தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

    பச்சை யப்பன் வீட்டிற்கே சென்று, அவரை இரும்பு ராடால் தாக்கினார்.இதில் அவருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அசோக்குமார் அங்கிருந்நு தப்பி சென்று விட்டார். பின்னர் அருகில் இருந்த வர்கள் பச்சையப்பனை மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் மடுகரை போலீசார் அசோக் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் மிக சிறப்பான முறையில் உருளை யன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 500 பேர் வெங்கடேசன் எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி என்கிற நாகம்மாள் முன்னிலை வகித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொதுச் செயலாளர் மதன், துணைத் தலைவர் பாபு, பொருளாளர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் பிரியா, மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளர் சாய் சுதாகர், மாநில பிரசார பிரிவு இணை அமைப்பாளர் கிரிஜா, நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலாளர் கீதா,

    பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வெங்கடாசலம், முருகன், பிரவீன், ஆகாஷ், பாலா, பாரதி, நாராயணன், பிரிட்டோ, அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×