என் மலர்
புதுச்சேரி
- மரங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.
- புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை வளத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களுடன் வனத்துறை அலுவ லகத்திற்கு சென்றார்.
அங்கு இணை இயக்குநர் குமாரவேலுவை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
உருளையன்பேட்டை தொகுதி மறைமலையடிகள் சாலையில் கிரீன்பார்க் ஹோட்டல் முதல் தென்னஞ்சாலை ரோடு இடையில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.
மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் முன் பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும். அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை வளத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவைப் பெற்ற இணை இயக்குநர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கிளைச் செயலாளர்கள் அந்தோணி, விஜயகுமார், முருகன், பிரகாஷ், இளைஞர் அணி அமைப்பாளர் தாமரை க்கண்ணன், கிரி, சாலமன், மூர்த்தி, காங்கிரஸ் சோமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வனதுறை அதிகாரியிடம் திமுக பொதுகுழு உறுப்பினர் கோபால் மனு அளித்தார்.
- புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணர பேட்டை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜாகிர் உசேன் மற்றும் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியார் நகரை சேர்ந்த சாலமன் கொளத்தூர் பேட் சேர்ந்த முனியப்பனின் மகன் ராஜா என்கிற பொக்கை ராஜா , எல்லையம்மன் தோப்பு பகுதியில் சேர்ந்த சந்திரனின் மகன் சுதாகர் , நகராட்சி குடியிருப்பில் சேர்ந்த கணேஷ் , எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணனின் மகன் ஸ்ரீதர் , எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜோசப்பின் மகன் சூசை என்கிற சூசைராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டுகள் ரூ.5 ஆயிரத்து 690 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
- ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- தனியார் பைனான்ஸ் நிறுவனம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வங்கி இயக்குனர் எனக் கூறி விவசாயிடம் ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
வில்லியனூர் காமராஜ் சாலை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அப்பாவு வயது 62 விவசாயியான இவரது மகன் பரணிதரன் குளிர்பானங்கள் மொத்த விலையில் புதுவை முழுவதும் விற்பனை செய்ய டீலர் எடுத்திருந்தார். டீலர் எடுப்பதற்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 58 லட்சம் கடனாக பெற்றிருந்தனர். கொரோனா காலகட்டத்தில் மாதத் தவணையை முறையாக இவர்களால் செலுத்த முடியாத நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் அப்பாவு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்றிருந்த கடனை திருபிசெலுத்த தான் உதவுவதாக அவரது நண்பர் தமிழக பகுதியான பெரியபாபு சமுத்திரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ராமசாமி மகன் மயிலாசலம் கூறியுள்ளார்.
மயிலாசலத்தின் நண்பர் வங்கி இயக்குனர் என கூறி கடலூர் அடுத்த கொள்ளிடம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை மயிலாசலம் அறிமுகப்படுத்தியுள்ளார். மயிலாசலம் மற்றும் ரமேஷ்குமார் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அப்பாவு அவர்களிடம் பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கியிருந்த கடனை திருபிசெலுத்த ரூபாய் 50 லட்சத்து 45 ஆயிரம் வங்கி மூலம் கொடுத்துள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் அப்பாவுக்கு வீடு ஜப்தி நோட்டீசை அனுப்பி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அப்பாவு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பாவு கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், மயிலாசலம் மற்றும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
- புதுவை திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- தொடர்ந்து மாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது
புதுச்சேரி:
புதுவை திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாள்தோறும் ஒவ்வொறு ராசிக்குரிய நட்சத்திரங்களுக்கு யாகம் நடந்து வருகிறது.தொடர்ந்து மாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.
நேற்றைய தினம் நடந்த கங்கா ஆரத்தியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். அவருடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் , ரமேஷ் எம்.எல்.ஏ, மற்றும் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறையால் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இன்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நாளையுடன் புஷ்கரணி விழா நிறைவு பெறுகிறது.
- மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறு வது வழக்கம்.
- இந்த மாட்டு சந்தையை யொட்டி சந்தை பகுதியில் பல்வேறு விதமான கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறு வது வழக்கம்.
இந்த மாட்டு சந்தையை யொட்டி சந்தை பகுதியில் பல்வேறு விதமான கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். இதனால் விலை குறைவாகவும் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும் பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை அதிகளவில் வாங்கி செல்வர்.
இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு சந்தை பகுதிக்கு யாரும் வரவில்லை. இதனால் வியாபாரிகள் விற்பனைக்கு எடுத்து வந்த காய்கறிகள் மற்றும் பொருட்களை தங்களது வாகனங்களிலேயே திருப்பி எடுத்துச் சென்றனர்.
- நாட்டுப்புற கலை சேவையை தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
- இதனை பாராட்டு விதமாக ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் அன்பழகன் என்பவர் நாட்டுப்புற கலைக்குழு 30 ஆண்டுகளாக புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகம், மும்பை ஆகிய பகுதிகளில் நாட்டுப்புற கலை சேவையை தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
அவருக்கு புதுவை அரசின் கலை பண்பாட்டு துறை மூலமாக கலை மாமணி விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் வழங்கினர்.இதனை பாராட்டு விதமாக ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் ஒருங்கி ணைந்த ஆதிதிராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமையில், பொதுச் செயலாளர் கலைமணி , கவுரவத் தலைவர் மணி மாறன், அமைப்பாளர் சுப்பிரமணி, துணைத்தலை வர் செல்வ பாண்டி, பொருளாளர் வேல்முருகன், செயல் தலைவர் முத்து கிருஷ்ணன், அமைப்பாளர் நாகமுத்து, அரசு கூட்ட மைப்பு தலைவர் ஆசிரியர் செல்வம் ஆகியோர் கலைமாமணி விருது பெற்ற அன்பழகனை பாராட்டி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
- நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. சார்பில் லெனின் வீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது.
- கார்த்திகேயன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. சார்பில் லெனின் வீதியில் நீர் மோர் பந்தல் தலைமை பொதுக்குழு உறுப்பினரும் நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளருமான கார்த்திகேயன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் மோர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், கரும்புச்சாறு வெள்ள ரிக்காய், எலுமிச்சைச்சாறு, கிர்ணிப்பழச்சாறு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், தங்கவேல், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேலவன், டாக்டர் நித்தீஷ், தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், வடிவேல் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைபா ளர்கள் காயத்ரி, சுப்பிரமணி யன், வக்கீல் ஞானராஜன், மாநில பிரதிநிதி முருகன், நெல்லித்தோப்பு தொகுதி துணை செயலாளர்கள் கிருபாஷங்கர், சங்கீதா, செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், ஜெகதீசன், கிளை செயலாளர்கள் மூர்த்தி, பரிதிமாள், ஏழு மலை, கமல், பாலா, சின்ராசு, கருணாகரன், மணி, உலகநாதன், கிருஷ்ண குமார், செல்வம், ஸ்டாலின், முத்து, பிரான்சிஸ், ஹரி ஹரன், அவைத் தலைவர்கள் சேனாதிபதி, சின்ன கண்ணு, பாபு, பாஸ்கர் ஏழுமலை, ரவி, ரமேஷ், நிர்வாகிகள் அர்ஜுனன், ராஜி வெங்க டேசன், ரமேஷ் சரவணன், நாகராஜ் ராஜேந்திரன், நாச்சியார், விக்ரம், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பா ளர்கள் பரத், ஞானவேல், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மோர் பந்தல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பொதுமக்க ளுக்கு இலவசமாக குளிர்ந்த பொருட்கள் வழங்கப்படும்.
- ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
- பாசிக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். மாத ந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பாசிக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். மாத ந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 13-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி,கோவிந்தாராசு, மகேந்திரன், மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா,பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
- புதுவை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் ஆவேசம்
- முதலியார்பேட்டை, ஒத்த வாடை வீதி அருகில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் முதலியார்பேட்டை, ஒத்த வாடை வீதி அருகில் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். பேரவை தலைவர் பரசுராமன், துணைத் தலைவர்கள் கண்ணன், கைலாசம், துணைச் செயலாளர்கள் கேசவன், ஜெய்சங்கர், கஜேந்திரன், வரதன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், மாநில பொருளாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான செஞ்சி ராமச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் முருகுமணி, புதுவை மாநில செயலாளர் அன்பழகன், தலைமை பேச்சாளர் நள்ளாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து 200 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவையில் கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முழுக்க முழுக்க தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன. அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரிந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆட்சி காலம் முழுவதும் சம்பளம் கூட வழங்கப்படவில்லை. பல அரசு சார்பு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. புதுவையில் இயங்கிய பல தனியார் நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தன. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. எங்கள் கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த கால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுக்கப்பட்ட சம்பள பாக்கி, பணி உயர்வு, பதவி உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட அனைத்தையும் செய்துள்ளார். கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழிலாளர்களும் இன்றைக்கு எங்கள் கூட்டணி கட்சியின் முதல்- அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறி பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா.
- அமைச்சர் அறையில் தனது இருக்கையில் அமர்ந்த படி உறையில் இருந்து வாளை எடுத்து கையில் வைத்து பார்ப்பது போன்ற வீடியோ.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா.
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வானவர் சந்திரபிரியங்கா. போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள சந்திரபிரியங்கா அம்மன் வேடம் தரித்த வீடியோ, சிறுவர்களோடு விளையாடுவதுபோன்ற வீடியோ, டான்ஸ் ஆடிய வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் உள்ள தனது அமைச்சர் அறையில் தனது இருக்கையில் அமர்ந்த படி உறையில் இருந்து வாளை எடுத்து கையில் வைத்து பார்ப்பது போன்ற வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த புகைப்படம் 1½ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. ஒரு நண்பர் வாளை என்னிடம் கொடுத்து பார்க்கும்படி கூறினார்.
அதை பார்த்தபோது வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியுள்ளது என்றார்.
- மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
- புதுவை காவல்துறைக்கு புதிய வாகனங்களை வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி:
புதுவை காவல்துறைக்கு புதிய வாகனங்களை வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
லாஸ்பேட், ரெட்டியார்பாளையம் காவல்நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் போலீஸ் துறை தலைமை அலுவலகம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையம் ஆகியவை கட்டவும், காரைக்காலில் சூப்பிரண்டு அலுவலகம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தேர்வில் உடல்தகுதித்தேர்வு நடந்துள்ளது. விரைவில் எழுத்துத்தேர்வு நடக்கும். ஊர்க்காவல்படையில் 500 பேரை தேர்வு செய்ய விரைவில் பணிகள் தொடங்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய முதலில் முயற்சி எடுத்தது புதுவை மாநிலம்தான்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். பா.ஜனதா ஒருபோதும் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது. பயிற்சி முடித்த காவலர்கள் ஜூன் மாதம் போலீஸ் நிலையங் களில் பொறுப்பேற்பார்கள்.
போலீசாரின் பிறந்தநாள், திருமணநாள் உட்பட அவர்கள் கேட்கும் நாளில் விடுமுறை தர சொல்லியுள்ளோம். வாரவிடுமுறை தருவது அரசு பரிசீலனையில் உள்ளது. போலீஸ் ரோந்து பணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்.
ரோந்து பணிக்கான வாகனங்கள் சீரமைத்து இயக்குவோம். பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. புதுவையில் வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, சீருடை, சைக்கிள், லேப்டாப் அளிக்கப்படும். கவர்னர் ஒப்புதலுடன் விளையாட்டுத் துறை தனி துறையாக அறிவிக்கப்படும். கந்து வட்டி புகார்ககள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெட்டப்பாக்கம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு மீனாட்சி சொக்கநாத பெருமான் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
- முன்னதாக காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
புதுச்சேரி:-
நெட்டப்பாக்கம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு மீனாட்சி சொக்கநாத பெருமான் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், பூணுல் போடும் வைபவம், கும்ப பூஜைகள், யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சொக்கநாதரும், மீனாட்சியும் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியம் முழுங்க திருக்கல்யாணம் சிறப்பான முறையில் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர், தேவார பாராயண குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






