என் மலர்
புதுச்சேரி
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த சிவராந்தகம் பேட் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் வில்லியனூர் கொம்யூன் டேங்க் ஆப்ரேட்டராக அரியூர் வள்ளலார் தண்ணீர் டேங்கில் பணியாற்றி வந்தார்.
அவருக்கு காத்தாயி என்ற மனைவியும், நதியா என்ற மகளும், தேவநாதன் என்ற மகனும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி யினருக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பின்னர் அரியூரில் உள்ள தண்ணீர் டேங்குக்கு சென்றவர் டேங்கில் தண்ணீர் ஏற்றவில்லை.
சக ஊழியர் பாபு அதிகாலை செல்வத்திற்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. உடனே பாபு செல்வத்தின் மகன் தேவநாதனுடன் தண்ணீர் டேங்க் அறையில் சென்று பார்த்த போது செல்வம் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த தேவநாதன் இது குறித்து அவரது தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். வில்லியனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செல்வத்தின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேன், சந்தனம், இளநீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.
- துளி, துளியாக விழும் படியானா தாரா பிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த பாகூரில் மூலநாதர் சாமி கோவிலில் அக்னி நட்சத்திர சிறப்பு அபிஷேகம் தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.
10.30 மணிக்கு பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பி கையம்மன், முருகன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பகல் 11 மணிக்கு 108 லிட்டர் பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. அக்னி நட்சத்திர நாட்கள் முழுவதும் சாமியை குளிர்விக்கும் வகையில் தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் வாசனை திரவியங்கள், சிவலிங்கம் மீது துளி, துளியாக விழும் படியானா தாராபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாராபிஷேகத்துக்கு வாசனை திரவியங்களை பக்தர்கள் வழங்கலாம் என அர்ச்சகர்கள் தெரி வித்துள்ளனர். ஏற்பா டுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் பங்கேற்பு
- ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தாலி கட்டிக் கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில் கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும் பக்தர்களுக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தாலி கட்டிக் கொண்டனர்.
இதனிடையே திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடந்தது. போட்டியில் புதுவை, தமிழ்நாடு, ஆந்திரா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதனை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்தான் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை ஆலய அறங்காவல் குழு தலைவர் தரணிதரன், துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராஜ், உறுப்பினர் நாகப்பன் உள்பட பிள்ளையார்குப்பம் கிராமவாசிகள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
- மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் நடைபெற்றது.
- விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை இணைந்து நடத்திய சிவில் சர்வீஸ் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திண்டிவனம் சப் -கலெக்டர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலம் என்ஜீனியரிங் கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் தலைசிறந்த கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு பாட ங்களுடன் தனித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சி கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலை வர் சுகுமாரன், செயலாளர் மருத்துவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயங்குனர் முனைவர் செந்தில் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இராஜப்பன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா கலந்துகொண்டு மாணவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்நிகழ்சியில் மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் பயிலும் அனைத்து துறையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள் சார்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் இயல்பான பாணியில் விளக்கிக்கூறி னார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவர் கலைவாணி ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
- பல்வேறு நல திட்டங்களை தடை இல்லாமல் நிறைவேற்றி வருகிறது.
- மருத்துவ திருவிழா கண்டிப்பாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் மக்கள் நல திட்டங்களை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. மகளிருக்கு உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உயர்வு போன்று பல்வேறு நல திட்டங்களை தடை இல்லாமல் நிறைவேற்றி வருகிறது.
அரசு குறிப்பாக மருத்துவ துறையில் கொரோனா தொற்றுக்கு பிறகு புதுவை மாநிலம் சிறந்து விளங்கு கிறது. நடைபெற்ற சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவ துறைக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதில் சிறப்பு அம்சமாக இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத மருத்துவ திருவிழா என்ற சிறப்பான திட்டத்தை புதுவை அரசு கொண்டு வந்துள்ளது. நேற்றைய தினம் கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் ஆரம்பித்து வைத்து வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
கிராமபுறங்களில் ஏழை எளிய மக்கள் சிறந்த மருத்துவத்தை ஒரே இடத்தில் பெற்றிட இந்த மருத்துவ திருவிழா கண்டிப்பாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மருத்துவ முகாம் மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வை ஏற்படுத்திய சுகாதார துறைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இதே போன்று மருத்துவ திருவிழாக்களை கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்களிலும் நடத்த அரசு முன் வர வேண்டும். கிராம புறங்களிலும் இது போன்று மருத்துவ திருவிழாக்கள் நடத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறந்த மருத்துவம் என்ற முதல்- அமைச்சரின் கனவை எட்ட முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதால் லட்சுமி நாராயணனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
புதுச்சேரி:
துபாயில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் புதுவை அரங்கம் இடம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை புதுவைக்கு ஈர்க்க அமைச்சர் லட்சுமிநாராயணன், என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் துபாய் சென்றுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதால் லட்சுமி நாராயணனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
சபாநாயகர் மற்ற அமைச்சர்கள் துபாய் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அமைச்சர் நமச்சிவாயம் தனிப்பட்ட பயணமாக துபாய் செல்ல மத்திய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றார். இதையடுத்து துபாய் கிளம்பிச் சென்றார்.
அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் குழுவோடு இணைந்து துபாய் சுற்றுலா கண்காட்சி, கலந்துரையாடல், ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார். எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் புதுவை திரும்பு கின்றனர்.
- மழை நீர் தாழ்வான பகுதியில் சாலை அருகில் உள்ள வீடுகளில் பெருகியது.
- வீடுகளில் உறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதில் திருபுவனை பகுதியில் 3 மணி நேரம் இடைவிடாத மழை பெய்தது தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது . இதனால் சாலை உயரமாக போடுவதால் மழை நீர் தாழ்வான பகுதியில் சாலை அருகில் உள்ள வீடுகளில் பெருகியது.
இதனால் முழுவதும் தங்கள் வீடுகளில் உறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில் ராஜன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மழை நீர் தேங்கியிருந்த வீடுகளில் ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
- புதுவை அரசின் சுகாதாரம், செய்தி, கல்வித்துறை இணைந்து 3 நாள் சுகாதார திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.
- ஜிப்மர் மருத்துவமனை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவச சிகிச்சை அளித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரம், செய்தி, கல்வித்துறை இணைந்து 3 நாள் சுகாதார திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.
முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு பின் பல நோய்கள் அதிகரித்துள்ளது. எனவே நம் உடல் நன்றாக உள்ளதா? என பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவத்துறையில் நவீன சிகிச்சைகள் வந்து விட்டது. புற்றுநோய் ஆரம்பத்திலேயே வந்தால் சரி செய்து விடலாம்.
ஜிப்மர் மருத்துவமனை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவச சிகிச்சை அளித்து வருகிறது.
வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களிடம் குறைந்த கட்டணம் பெறப்படுகிறது. ஜிப்மர் கட்டண சலுகை அரசியலாக்கப்படுகிறது.
ஜிப்மருக்கு இணையாக புதுவை அரசு ஆஸ்பத்திரிகள் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மரில் 60 சதவீத தமிழக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
- வங்கிகள் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தை வைத்து கடன் தர தயாராக உள்ளன.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருபுவனையில் இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலைக்கு மூடுவிழா நடத்த முதல்-அமைச்சர் காய்நகர்த்தி வருவதாக தெரிகிறது. ஸ்பின்கோ நிறுவனம் அடிப்படையில் கூட்டுறவு நிறுவனம். அதை கூட்டுறவு தத்துவத்தின்படி தேர்தல் நடத்தி நிர்வாக குழு அமைக்காமல், நிர்வாக திறமையற்றவர்களை நிர்வாகிகளாக நியமித்ததே மில்லின் வீழ்ச்சிக்கு காரணம்.
இந்த ஆலையின் கடனுக்காக கூட்டுறவு தலைமை வங்கியில் நிலம் அடமானம் வைக்கப்பட்டது. அந்த வங்கி நிலத்தை அதிக விலைக்கு விற்று கணிசமான லாபம் பார்த்துள்ளது. அந்த லாபத்தை ஆலைக்கு வாங்கித்தர முதல்-அமைச்சர் மறுத்துவிட்டார். பஞ்சு விலை உயர்ந்திருந்தபோது லேஆப் கொடுத்த அரசு விலை குறைந்தபோது ஆலையை திறந்திருக்கலாமே?
பலமாதமாக பஞ்சு விலை குறைந்து வருகிறது. தொழிலாளர்கள் கூடுதல் வேலை செய்ய சம்மதம் தெரிவிக்கின்றனர். எந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளன. வங்கிகள் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தை வைத்து கடன் தர தயாராக உள்ளன. எனவே அரசு ஆலையை உடனடியாக திறந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் மதவாத சிந்தனைகளை கைவிட்டு, பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
- மக்களை திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
புதுச்சேரி:
புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அம்பேத்கர் இருபாலரும் சமஅதிகாரம் கொண்ட வர்கள் என போராடினார். கவர்னர் தமிழிசை அரசியலமைப்பு சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிராக பெண்களை அடிமைத் தனத்திலிருந்து மீளாத வகையில் பூஜை பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அலுவலக நேரத்தில் 2 மணி நேர சலுகைக்கு பின் வரலாம் என கூறியுள்ளார்.
இது மனுஸ்மிருதி கோட்பாடுகளை மீண்டும் நிலைநாட்டும் செயலாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் உள்ளது. கவர்னர் மதவாத சிந்தனைகளை கைவிட்டு, பெண்களின் வளர்ச் சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் நலனில் அக்கறை காட்டுவது போன்ற கவர்னரின் ஏமாற்று வேலை புதுவையில் எடுபடாது. பெண்களுக்கு 2 மணி நேர சலுகையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பயிற்சி காவலர் விஜய் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையுடன் தான் காவலர் பணிக்கு சேர்ந்து உள்ளார். கடந்த ஓராண்டு கால பயிற்சி அவரது உடல் நிலையை மேம்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு மாறாக அவரது திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
பயிற்சி காவலர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் அடிமை போல் நடத்தி இழிவாகப் பேசுவதாகவும் சிறிய தவறு செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்ப தாகவும் தொடர் புகார்கள் உள்ளது. இளைஞர்களை மிருகமாக மாற்றி ஏழை மக்களுக்கு எதிரான மனநிலையோடு அதிகார வர்க்கத்தின் நலன்களை காப்பவர்களாக அவர்களைத் தயார் செய்து வெளியில் அனுப்பு கின்றனர்.
எனவே பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவலர் பயிற்சியில் பணிக்கு ஏற்ற பயிற்சிகள் மட்டும் அளிக்க வேண்டும். அங்கு தேவையான உள்கட்டமை ப்பு, தரமான உணவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
- கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தபால் ஊழியர்களின் அகில இந்திய அமைப்பான தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதை கண்டித்து புதுவை தலைமை தபால்நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அழைப்பின்படி நடந்த போராட்டத்தில் புதுவை சங்க நிர்வாகிகள் சேகர், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகி ருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






