என் மலர்
புதுச்சேரி
- பக்தர்கள் திரண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- தேனீ.ஜெயக்குமார் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக் காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கி ஆதி புஷ்கரணி விழா நடந்தது.
புஷ்கரணி விழாவின் நிறைவு விழா நடந்தது. இதில் ராசி, நட்சத்திரம் தெரியாத பக்தகர்கள், மற்ற நாட்களில் நீராட முடியாத பக்தர்கள் திரண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். கங்கா ஆரத்தியுடன் புஷ்கரணி விழா நிறைவு பெற்றது.
இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விழா சிறப்பாக நடத்த உதவிய விழாக்குழுவினர், விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அனை வருக்கும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
- சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
- பொது சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கிடையாது.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி–யும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அரசாணையில் வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமை–களில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
மாதத்தின் 3 வெள்ளிக்–கிழமைகள் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி சுழற்சி அடிப்படை–யில் அவர்களுக்கு பணிநேர சலுகை கிடைக்க அனுமதிக்க வேண்டும் என தெரி–விக்கப்பட்டு–ள்ளது. இந்த சலுகை சுகாதாரத்துறை காவல்துறை மற்றும் கல்வித்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் நேரடி பொது சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கிடையாது.
இந்த நேர சலுகை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே நேர சலுகை பெண் அடிமைதனத்தை ஊக்குவிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். சிந்தாத்தை திணிப்பதாகவும் உள்ளது என தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
- தற்போது இந்த திட்டத்தை புதுவையில் அமல்படுத்த அரசு முயற்சி எடுத்துள்ளது.
- மாநிலம் முழுவதும் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கும்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கி விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.
நாட்டின் சில நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு–களில் கியாஸ் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. பயன்பாடை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படு–கிறது. சமீபத்தில் தமிழ–கத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு பரீட்சார்த்த முறையில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கிராம மக்கள் குழாய் மூலம் கியாஸ் வழங்கியதால் 15 முதல் 20 சதவீத பயன்பாடு குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ள னர்.
புதுவையில் 4 பிராந்தி யங்களிலும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை செயல்படுத்தும் 4 தனியார் நிறுவனங்களை கண்டறிந்து உள்ளனர்.
கடந்த காலங்களில் இதற்கான முயற்சி எடுக்கவில்லை. தற்போது இந்த திட்டத்தை புதுவையில் அமல்படுத்த அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்காக தொழில்துறை மூலம் விதிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளனர்.
குழாய்களை எந்த வழியாக கொண்டுசெல்வது, கொண்டுசெல்லும் குழாய்களை எத்தனை அடி ஆழத்தில் புதைப்பது, சாலை மார்க்கமாக கொண்டு ல்லும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு என பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது.
இதற்கான பூர்வாங்க பணி தொடங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதன்பிறகு பரீட்சார்த்த முறையில் ஏதேனும் ஒரு பகுதியில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும். அதன்பிறகு மாநிலம் முழுவதும் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கும்.
- திருக்காமீஸ்வரர் கோவில் நடைபெற்றது.
- கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
வரும் 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. 24-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. விழாவில் வரும் ஜூன் 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி தேரின் உறுதி தன்மை குறித்து பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சீனுவாசன், பொறியாளர் குழுவினர் 3 தேர்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தினர்.
- அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய அழைத்து சென்றனர்.
- வையாபுரி மணிகண்டன் சாடல்
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் தவறு களை தட்டிக்கேட்பவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். பட்ஜெட் அறிவிப்பு களை செயல் வடிவம் பெற முதல்கட்ட பணிகளை கூட தொடங்கவில்லை. அரசின் செயல்பாடுகளை தட்டிக்கேட்க வேண்டிய எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் மவுனம் காத்து முதல்-அமைச்சருக்கு வெண்சாமரம் வீசுகின்றனர்.
தன் கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் காரணமாகவும், எதிர்கட்சி களுக்கு கைமாறு செய்யவும் மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையில் கட்சி வித்தியாசமின்றி எம்.எல்.ஏ.க்கள் துபாய் நாட்டிற்கு இன்பச்சுற்றுலா அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். மதுபான ஆலை தொழிலதிபர்கள், கவர்ச்சி நடன மதுபார் உரிமையா ளர்கள், எம்.எல்.ஏ.க்களின் துபாய் இன்ப சுற்றுலா பயண செலவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களால் புதுவை மக்களின் வேதனையை எப்படி புரிந்து கொள்ள முடியும்? உல்லாச பயணத்துக்கு ஏற்பாடு செய்த முதல்-அமைச்சரால், ஏன் டெல்லிக்கு எம்.எல்.ஏ.க் களை அழைத்து சென்று மத்திய அமைச்சர்கள், பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த இயலவில்லை?
புதுவை மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்ய ஏன் கட்சி வித்தியாச மின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கி ணைக்க முடியவில்லை? புதுவை மாநிலத்தில் நடை பெறும் அனைத்து நிகழ்வு களையும் பொதுமக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர். வாக்களித்த மக்களை மறந்து, மக்களால் வழங்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தையும் மறந்து, பதவி சுகம் கண்ணை மறைக்க, உலகை சுற்றி வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புதுவை மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நரசிம்ம ஜெயந்தி என்பதால் கூடுதலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- 10-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பங்கேற்று ஹோமம் செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். நரசிம்ம ஜெயந்தி என்பதால் கூடுதலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 7-ந் தேதி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்கள், சிங்கிரிகுடி கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்த னர்.
நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு பூவரங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்தது. பகல் 12 மணிக்கு தீபாராதனை, 4 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமி கோவில் புறப்பாடு நடக்கிறது.
சுவாதி நட்சத்தி ரத்தையொட்டி திரு மஞ்சனம், சுதர்சன ஹோமம் நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் 10-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பங்கேற்று ஹோமம் செய்கின்றனர்.
ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி மதனா, அர்ச்சகர் பார்த்த சாரதி செய்துள்ளனர். முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா இன்று நடந்தது. காலை 10 மணிக்கு நவ நரசிம்மர்கள், பானக நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சேவை சாற்றுமுறை நடந்தது.
இன்று இரவு 7 மணிக்கு மேல் 11 நரசிம்மர்களும் மங்களகிரி விமானத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடக்கிறது.
இதேபோல புதுவையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருமஞ்சனம், சேவை சாற்று முறை நடத்தப்பட்டது.
- சத்திய நாராயணனுக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்கப்படவில்லை.
- சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
புதுச்சேரி:
புதுவை பூர்ணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சத்ய நாராயணன் (வயது 49).
இவர் புதுவை லாஸ் பேட்டையில் இயங்கும் சமுதாய கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது ஒப்பந்த பணி காலம் முடிந்த நிலையில் மீண்டும் தனக்கு பணி வழங்க வேண்டும் என புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ரஜினீஸ்புதாணி யிடம் கேட்டார். சத்திய நாராயணனுக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணன் பதிவாளரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டு அங்கிருந்த பூச்செடிகளை உடைத்துள்ளார்.
மேலும் பதிவாளருக்கு பேராசிரியர் சத்திய நாராயணன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ரஜினீஸ்புதாணி கொடுத்த புகாரின் பேரில் காலா ப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
- மக்கள் பகல்நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர்.
- அக்னி நட்சத்திரம் தொடங்கியிருப்பது அவர்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பம் நிலவும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்தது.
கடந்த மாதம் சில நாட்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவா னது. பகல்நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாத நிலை உருவானது. புதுவை மக்கள் பகல்நேரங்க ளில் வீடுகளுக்குள் முடங்கி யிருந்தனர்.
கடந்த வாரத்தில் அதிகாலையில் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. அதேநேரத்தில் பகல் பொழு தில் வெயில் அடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. விடிய, விடிய கனமழை பெய்ததால் பூமி குளிர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
அதன்பிறகு பெரியளவில் மழை இல்லை. அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் அதிக கோடை வெப்பத்தால் புதுவை மக்கள் பீதியடைந்திருந்தனர்.
தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியி ருப்பது அவர்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது.
இருப்பினும் குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புதுவை மக்களுக்கு ஆறு தலை ஏற்படுத்தியுள்ளது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
- கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலை அரங்கத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுந்தர நாட்டிய கேந்திர மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பரதநாட்டியம் அரங்கேற்றம் நடனம் ஆடிய மாணவிகளுக்கு சான்றிதழ் கொடுத்து நினைவு பரிசினை வழங்கி வாழ்த்தி பாராட்டினார்.
விழாவிற்கு மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டு சிறப்பாக பரத நாட்டியமாடிய மாணவிகளை வாழ்த்தி பேசினார்.சுந்தர நாட்டிய கேந்திர குரு சுந்தரமூர்த்தி மற்றும் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை நிகழ்ச்சி சுமார் 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டுகளித்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் ஜீவா பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
- விளைநிலங்கள் வீடுகள் தெருக்கள் சாலைகள் என பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
- நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு 8:30 மணி முதல் தொடர் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்கள் வீடுகள் தெருக்கள் சாலைகள் என பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
சித்தேரி அணைக்கட்டுப் பகுதிகளில் உள்ள விலை நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது.இதனால் பயிர்கள்அழுகும் நிலைக்கு சென்றது.இதையடுத்து தண்ணீரை வாய்க்கால் வழியாக கொண்டு வந்து சித்தேரிஅணைக்கட்டை திறந்து வெளியேற்றி வருகின்றனர்.
ஒரே நாளில் 16.5 செ.மீ மழை கொட்டியுள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தண்ணீர் வரத்து அதிக ரிப்பால் தென்ெபண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி, கொமந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது.
- விழாவில் சங்க தலைவர் கண்ணன், தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.
- சங்க ஆலோசகர் களஞ்சியம் என்கிற வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை 4 சக்கர கனரக வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.
கோரிமேடு அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் பட்டானூரில் நடந்த மே தின விழாவில் சங்க தலைவர் கண்ணன், தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் கே.ஜி சங்கர், பொருளாளர் வெங்கடேஸ்வரன், முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வானூர் ஒன்றிய சேர்மன் உஷா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, வக்கீல் ராம்.முன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சங்க பெயர்பலகை திறந்து வைத்து சங்க கொடியேற்றினர். நிகழ்ச் சியில் சங்க உறுப்பினர்கள் 300 பேருக்கு இன்சூரன்ஸ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது. மே தினத்தையொட்டி கனரக வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிகள் துணைத் தலைவர்கள் பலராமன், முருகன், ஏழுமலை, துணை செயலாளர்கள் முனுசாமி, அழகப்பன், பாலமுருகன், துணை பொருளாளர் மகாராஜா, சங்க ஆலோசகர் களஞ்சியம் என்கிற வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- தவளக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் உபகரணங்கள் நாதஸ்வரம் தவில் மற்றும் அயன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் தவளக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முடி திருத்தும் உபகரணங்கள் 6 பேருக்கும் சலவை பெட்டிகள் 9 ேபருக்கும் தவில் ஒருவருக்கும் நாதஸ்வரம் 2 பேருக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் குமரன், துணை இயக்குனர் சுகந்தி பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் பா.ஜனதா விவசாய அணி சக்திபாலன், ஞானசேகர், கிருஷ்ண மூர்த்தி, தவளக்குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், சுகுமார், ராஜா, ஜெயக்குமார், நாகமுத்து, செல்வி, வீரபாலன், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






