என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவை எம்.எல்.ஏ.க்கள் துபாய்க்கு உல்லாச பயணம்
- அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய அழைத்து சென்றனர்.
- வையாபுரி மணிகண்டன் சாடல்
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் தவறு களை தட்டிக்கேட்பவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். பட்ஜெட் அறிவிப்பு களை செயல் வடிவம் பெற முதல்கட்ட பணிகளை கூட தொடங்கவில்லை. அரசின் செயல்பாடுகளை தட்டிக்கேட்க வேண்டிய எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் மவுனம் காத்து முதல்-அமைச்சருக்கு வெண்சாமரம் வீசுகின்றனர்.
தன் கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் காரணமாகவும், எதிர்கட்சி களுக்கு கைமாறு செய்யவும் மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையில் கட்சி வித்தியாசமின்றி எம்.எல்.ஏ.க்கள் துபாய் நாட்டிற்கு இன்பச்சுற்றுலா அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். மதுபான ஆலை தொழிலதிபர்கள், கவர்ச்சி நடன மதுபார் உரிமையா ளர்கள், எம்.எல்.ஏ.க்களின் துபாய் இன்ப சுற்றுலா பயண செலவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களால் புதுவை மக்களின் வேதனையை எப்படி புரிந்து கொள்ள முடியும்? உல்லாச பயணத்துக்கு ஏற்பாடு செய்த முதல்-அமைச்சரால், ஏன் டெல்லிக்கு எம்.எல்.ஏ.க் களை அழைத்து சென்று மத்திய அமைச்சர்கள், பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த இயலவில்லை?
புதுவை மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்ய ஏன் கட்சி வித்தியாச மின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கி ணைக்க முடியவில்லை? புதுவை மாநிலத்தில் நடை பெறும் அனைத்து நிகழ்வு களையும் பொதுமக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர். வாக்களித்த மக்களை மறந்து, மக்களால் வழங்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தையும் மறந்து, பதவி சுகம் கண்ணை மறைக்க, உலகை சுற்றி வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புதுவை மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






