என் மலர்
புதுச்சேரி
- பாவேந்தர் பாரதி தாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
- புரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும் என்ற தலைப்பில் பேசுகிறார்.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதி தாசன் அரசு அருங்கா ட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. புரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும் என்ற தலைப்பிலான இந்த மாத விழா வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற வுள்ளது. விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசன் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் புரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும் என்ற தலைப்பில் பேசுகிறார்.
விழாவில் முனைவர் பாபு எழுதிய செங்கழுநீர் என்ற நூல் குறித்துச் சீனு.வேணுகோபால் ஆய்வுரை நிகழ்த்துகிறார். கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் வாழ்த்துரை பேசுகிறார். மடமைதான் அச்சத்தின் வேராம் என்ற பாரதிதாசன் அறக்கட்டளை கவிதை வரியிலான தலைப்பில் நடைபெறும் கவியரங்கத்தில் கவிஞர்கள் கவிதை வாசிக்கின்றனர். செயலர் வள்ளி, கிருஷ்ணகுமார், ஜெயந்தி இராஜவேலு, கணேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் பங்கேற்றுப் பத்து திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது.
- தொகுதி எம்.எல்.ஏவும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது.
புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது.
இந்த இலவச பொது மருத்துவ முகாமினை தொகுதி எம்.எல்.ஏவும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்து வர்கள் செங்கதிரேசன், மடோனா டிசோசா மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவன தாளாளர் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கட்டிடத்தினுடைய ஸ்திரத்தன்மை குறைந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது
- பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் இன்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் பேட் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1974-ஆம் ஆண்டு சபாபதி எம்.எல்.ஏ.வாக இருந்த பொது ஆதிதிரா விடர் பொதுமக்கள் சுமார் 50 பேருக்கு மனை பட்டா வழங்கப்பட்டு அங்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீடுகள் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடத்தினுடைய ஸ்திரத்தன்மை குறைந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ. சிவா முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவின் பேரில் துறை செயலாளர் கேசவன் மேற்பார்வையில் கொம்பாக்கம்பேட் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இள ங்கோவன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது ஆதிதிராவிடர் பொதுமக்கள், 50 ஆண்டு களுக்கு மேலாக உள்ள குடியிருப்பு களை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட வேண்டும், அரசு வழங்கிய மனைபட்டாக்க ளில் குளறு படிகள் இருப்பதை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன் கோரிக்கையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் இடம் ஆலோசனை மேற்கொண்டு நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும் கொம்பாக்கம்பேட் பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன சமுதாய நல கூட கட்டிடத்தை ஆய்வு செய்து விரைவில் அதனை திறப்பதற்கு இயக்குனர் சாய்.இளங்கோவன் ஏற்பாடு செய்து வருகிறார். ஆய்வின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
- நமது நாட்டின் 98 சதவிகித மக்களையும் 95 சதவிகித நிலப்பரப்பையும் உலக அளவில் 120 நாடுகளையும் சென்றடைகின்றன.
- ஆகாசவாணி என இந்தியில் அழைக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசு பிரசார் பாரதி ஒலிபரப்புக்கழகத்தின் மக்கள் தொடர்பு சாதனமான அகில இந்திய வானொலி நிலையம் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி அறிக்கைகள், நமது நாட்டின் 98 சதவிகித மக்களையும் 95 சதவிகித நிலப்பரப்பையும் உலக அளவில் 120 நாடுகளையும் சென்றடைகின்றன.
இந்த நிறுவனம் ஆல் இண்டியா ரேடியோ என வெள்ளையர் காலம் தொட்டு அழைக்கப்பட்டா லும் இடையிடையே இதனை பல்வேறு மொழிகள் பேசும் நாட்டின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் நோக்கில் ஆகாசவாணி என இந்தியில் அழைக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களின் அடாவடி செல்லுபடியாக வில்லை. மேலும் ஆங்கிலச்செய்திகளில் ஆல் இண்டியா ரேடியோ என்றே அழைக்கபடுவது சட்டப்படி ஏற்றுக்கொள்ள ப்பட்ட நடைமுறையாகும். தற்போது இதற்கு மத்திய அரசு தனது ஓர் அலுவலக ஆணைமூலம் தடை போட்டுள்ளது.
இதன்படி ஆங்கில செய்திகள் மற்றும் இதன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆகாசவாணி என்றே இந்தியில் இனி அழைக்கவேண்டும் என கடுமை யாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்று ஏற்கனவை ஆணைகள் வந்த போது கடும் போராட்டங்களை சந்தித்தது. தற்போது இந்தித்திணிப்பாக மக்கள் விருப்பத்துக்கு எதிராக இந்த ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக பாமர கிராமப்புற மக்களிடம் இந்த இந்தி திணிப்பு பல்வேறு விளைவுகளை உருவாக்கும். இதனை புதுவை சிந்தனையாளர்கள் பேரவை கடுமையாக எதிர்க்கிறது.உடனடியாக இந்த ஆணை திரும்பப்பெற வேண்டும்.
இந்த நாடு தழுவிய அரசு மக்கள் தொடர்பு சாதனங்களில் நடைபெறும் இந்தித்திணிப்பை தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமுக ஜனநாயக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் தங்களது வலுவான கண்டன அறிக்கை கள் மூலம் துடைத்தெறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- இந்த நிலையில் மதகடிப்பட்டிலிருந்து பங்கூர் பகுதி வரை 4 வழி சாலை போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதகடிப்பட்டிலிருந்து பங்கூர் பகுதி வரை 4 வழி சாலை போடப்பட்டுள்ளது.சாலையின் இந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு நடந்து செல்ல முடியாதவாறு இரும்பு கேட்டால் அடைக்கப்படுகிறது. இதனால் கிராமப் பகுதியில் இருந்து 4 வழி சாலையை இணைக்கும் பகுதியில் இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளதால் சாலையின் மறு பகுதிக்கு பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று சாலையின் மறு பகுதிக்கு வர முடிகிறது. இதனால் வயதானவர்கள் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது பணி நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமப் பகுதியில் இருந்து 4 வழி சாலையை இணைக்கும் பகுதியில் இரும்பு கம்பிகளை அமைக்காமல் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல முன்மொழிவுகள் முழுமையாக இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது.
- அரசு துறைகளுக்கு உத்தரவு
புதுச்சேரி:
புதுவை நிதித்துறை துணை செயலர் ரத்னகோஷ்கிஷோர் சவுரி அனைத்து துறை செயலர்கள், தலைவர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நடுவர்மன்ற தீர்ப்புகளை தீர்ப்பதற்கான முன்மொழிவு கள் நிதித்துறைக்கு அதிகமாக வருகிறது. பல முன்மொழிவுகள் முழுமையாக இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நடுவர்மன்ற முன்மொழிவுகளை முழுமையான விபரங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
வேலை திட்டத்தின் பெயர், டெண்டர் தொகை, வேலை நாட்கள், நடுவர் மன்றத்தை நாடிய காரணம், தீர்ப்பு, வட்டி விகிதம், ஒப்ப ந்ததாரர்களிடம் வட்டியை குறைக்க துறை எடுத்த நடவடிக்கை, செலுத்த வேண்டிய மொத்த தொகை என முழு விபரங்களை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்த ரவில் குறிப்பிட்டுள்ளார்.
- சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது.
- சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் ஸ்ரீ வரபத்திர காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேவஸ்தான பொறுப்பில் இருக்கும் தேங்காய்திட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த பூவராகவன் என்பவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் வசிக்கும் விநாயகமுருகன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப் குருப் ஒன்றில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கோவிலின் சித்திரை பவுர்ணமி திருவிழாவில் அறங்காவலர் வாரியத்தினர் கலந்து கொண்டால் அவர்களை அடித்து விரட்டுவோம். போலீசார் வந்தாலும் அவர்களையும் தாக்குவோம் இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்திரை திருவிழாவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- உழவர்கரையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது.
- மாலையிலும் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
புதுச்சேரி:
உழவர்கரையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று காலை திருப்பலியுடன் அன்னை திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை பெரிய தேர் பவனியும் 10 நாட்கள் விழாவும் நடக்கிறது. வரும் 14-ந் தேதி காலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
புதுவை, கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருப்பலி நடத்தி ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். அன்று மாலையிலும் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழாவினை ரெட்டியார்பாளையம் பங்கு தந்தை ஆரோக்கிய நாதன், உதவி பங்கு தந்தை ஆரோக்கிய சகாயராஜ் மற்றம் விழா குழுவினர் செய்துள்ளனர்.
- நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் பல மாதமாக போராடி வருகின்றனர்.
- அவர்களின் போராட்ட த்துக்கு ஏ.ஐ.யூ.டி.யூ.சி. முழு ஆதரவு தெரிவிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், பொதுச்செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் பல மாதமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்ட த்துக்கு ஏ.ஐ.யூ.டி.யூ.சி. முழு ஆதரவு தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் பணியின்றி, சம்பளமின்றி வாடுகின்றனர்.
கூட்டுறவுத்துறையில் அமுதசுரபி, பாண்டெக்ஸ் உட்பட பல நிறுவனங்களில் பல மாதமாக சம்பளம் வழங்கவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்கோ நூற்பாலை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. தொழி லாளர் விரோத போக்கை கைவிட்டு, தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தி அரசு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- கடனை திருப்பி செலுத்தும் கால அளவு ஓராண்டுக்கு மேல் இருக்கக்கூடாது.
- நிதி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு.
புதுச்சேரி:
புதுவை நிறுவனங்களின் பதிவாளர் கோகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதி நிறுவனமானது அதன் உறுப்பினர்களுக்கு தங்கம், வெள்ளி நகைகள் உட்பட பிணையங்களுக்கு எதிராக மட்டுமே கடன் வழங்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் கால அளவு ஓராண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. தனி நபர் கடன் பிணையமாக வழங்கப்படும் சொத்து மதிப்பில் 50 சதவீதத்திற்கு மிகக்கூடாது. இந்த கடனை திருப்பி செலுத்தும் கால அளவு 7 ஆண்டுக்கு மிகக்கூடாது. நிதி நிறுவனம் தனி நபர் ஒருவரை 5 ஆண்டுக்கு மேல் தொடர்ச்சியாக தணிக்கையாளராக பணி அமர்த்தக்கூடாது.
நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு அரையாண்டு முடிவடைந்த 30 நாளில் பதிவாளரிடம் தொழிற்பயி ற்சியில் உள்ள நிறுவன செயலர், பட்டய கணக்கர், கணக்காளரால் உரிய சான்றளிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
விதிகளில் உள்ள அனைத்து சட்ட வரைமுறை களுக்கும் நிறுவனம் இணங்கி நடந்துள்ளதற்கான சான்றிதழை நிறுவனத்தின் தணிக்கையாளர் ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் தணிக்கை அறிக்கையுடன் இணைக்க வேண்டும். முதலீட்டாளர்கள் முதலீடு அல்லது வைப்பீடு எதையும் செய்யும் முன் மத்திய அரசின் அதிகார முறை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இருந்து நிதி நிறுவனத்தின் தகுதி நிலையை சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது.
- சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளது.
தற்போது மக்கள் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் மது கடைகளும், ரெஸ்ட்ரோ பார்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான கடைகளில் 30-க்கும் மேற்பட்ட பீர்வகைகள், 100-க்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள், 200-க்கும் மேற்பட்ட பிராந்தி வகைகள், 30-க்கும் மேற்பட்ட ஒயின்வகைகள், 100-க்கும் மேற்பட்ட ஓட்கா என சுமார் 1500-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா காலத்தின்போது மதுபானங்களுக்கு 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.
புதுவையில் உள்ள 4 பிராந்தியங்களின் அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளை விட பல முன்னணி நிறுவனங்களின் மது வகைகள் இங்கு கிடைப்பதால் மதுபானங்கள் விற்பனை மூலம் கலால்துறைக்கு ஆண்டுதோறும் வருவாய் உயர்ந்து வருகின்றது. இந்த ஆண்டு ரூ.1,393 கோடி மது விற்பனை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.
இதுபற்றி கலால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது. கொரோனா காலத்தில் வருவாய் குறைந்தது. தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2021-ல் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தொட்டது. தற்போது முதன் முறையாக கலால்துறை வருவாய் ரூ. 1,393 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை விட ரூ.321 கோடி அதிகமாகும். இதில் சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.
- கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முத்துக்குமரன் பதவி ஏற்று கொண்டார்.
- தலைமை உறுப்பினராக ஜெகன், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை தொகுதியில் உள்ள திருபுவனைபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், இயக்குனர்கள் பதவியேற்பு விழா துலுக்கான மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
புதுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுத்துறை நிர்வாக அலுவலர் ஆகியோரின் கடித உத்தரவின் பேரில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டு திருபுவனைப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முத்துக்குமரன் பதவி ஏற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமை உறுப்பினராக ஜெகன், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிகா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பதவி ஏற்று கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மதகடிப்பட்ட கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் துளசிங்க பெருமாள் வரவேற்று பேசினார். மதகடிப்பட்டு பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன் அனைவரையும் வாழ்த்தி பேசினார்.
திருபுவனை பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகத்திற்கு புதிதாக நிலம் வாங்கி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவில் திருபுவனைபாளையம், மதகடிப்பட்டுபாளையம், கஸ்தூரிபாய் நகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலக செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.






