என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "submitted in full"

    • பல முன்மொழிவுகள் முழுமையாக இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது.
    • அரசு துறைகளுக்கு உத்தரவு

    புதுச்சேரி:

    புதுவை நிதித்துறை துணை செயலர் ரத்னகோஷ்கிஷோர் சவுரி அனைத்து துறை செயலர்கள், தலைவர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நடுவர்மன்ற தீர்ப்புகளை தீர்ப்பதற்கான முன்மொழிவு கள் நிதித்துறைக்கு அதிகமாக வருகிறது. பல முன்மொழிவுகள் முழுமையாக இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நடுவர்மன்ற முன்மொழிவுகளை முழுமையான விபரங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    வேலை திட்டத்தின் பெயர், டெண்டர் தொகை, வேலை நாட்கள், நடுவர் மன்றத்தை நாடிய காரணம், தீர்ப்பு, வட்டி விகிதம், ஒப்ப ந்ததாரர்களிடம் வட்டியை குறைக்க துறை எடுத்த நடவடிக்கை, செலுத்த வேண்டிய மொத்த தொகை என முழு விபரங்களை சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்த ரவில் குறிப்பிட்டுள்ளார்.

    ×