என் மலர்
நீங்கள் தேடியது "old houses"
- கட்டிடத்தினுடைய ஸ்திரத்தன்மை குறைந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது
- பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் இன்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் பேட் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1974-ஆம் ஆண்டு சபாபதி எம்.எல்.ஏ.வாக இருந்த பொது ஆதிதிரா விடர் பொதுமக்கள் சுமார் 50 பேருக்கு மனை பட்டா வழங்கப்பட்டு அங்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீடுகள் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடத்தினுடைய ஸ்திரத்தன்மை குறைந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ. சிவா முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவின் பேரில் துறை செயலாளர் கேசவன் மேற்பார்வையில் கொம்பாக்கம்பேட் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இள ங்கோவன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது ஆதிதிராவிடர் பொதுமக்கள், 50 ஆண்டு களுக்கு மேலாக உள்ள குடியிருப்பு களை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட வேண்டும், அரசு வழங்கிய மனைபட்டாக்க ளில் குளறு படிகள் இருப்பதை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன் கோரிக்கையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் இடம் ஆலோசனை மேற்கொண்டு நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும் கொம்பாக்கம்பேட் பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன சமுதாய நல கூட கட்டிடத்தை ஆய்வு செய்து விரைவில் அதனை திறப்பதற்கு இயக்குனர் சாய்.இளங்கோவன் ஏற்பாடு செய்து வருகிறார். ஆய்வின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.






