என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கோவில் அறங்காவலர்களுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல்
- சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது.
- சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் ஸ்ரீ வரபத்திர காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேவஸ்தான பொறுப்பில் இருக்கும் தேங்காய்திட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த பூவராகவன் என்பவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் வசிக்கும் விநாயகமுருகன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப் குருப் ஒன்றில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கோவிலின் சித்திரை பவுர்ணமி திருவிழாவில் அறங்காவலர் வாரியத்தினர் கலந்து கொண்டால் அவர்களை அடித்து விரட்டுவோம். போலீசார் வந்தாலும் அவர்களையும் தாக்குவோம் இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்திரை திருவிழாவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.






