என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gias delivery"

    • தற்போது இந்த திட்டத்தை புதுவையில் அமல்படுத்த அரசு முயற்சி எடுத்துள்ளது.
    • மாநிலம் முழுவதும் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கும்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கி விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.

    நாட்டின் சில நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு–களில் கியாஸ் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. பயன்பாடை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படு–கிறது. சமீபத்தில் தமிழ–கத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு பரீட்சார்த்த முறையில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கிராம மக்கள் குழாய் மூலம் கியாஸ் வழங்கியதால் 15 முதல் 20 சதவீத பயன்பாடு குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ள னர்.

    புதுவையில் 4 பிராந்தி யங்களிலும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை செயல்படுத்தும் 4 தனியார் நிறுவனங்களை கண்டறிந்து உள்ளனர்.

    கடந்த காலங்களில் இதற்கான முயற்சி எடுக்கவில்லை. தற்போது இந்த திட்டத்தை புதுவையில் அமல்படுத்த அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்காக தொழில்துறை மூலம் விதிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளனர்.

    குழாய்களை எந்த வழியாக கொண்டுசெல்வது, கொண்டுசெல்லும் குழாய்களை எத்தனை அடி ஆழத்தில் புதைப்பது, சாலை மார்க்கமாக கொண்டு ல்லும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு என பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது.

    இதற்கான பூர்வாங்க பணி தொடங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    இதன்பிறகு பரீட்சார்த்த முறையில் ஏதேனும் ஒரு பகுதியில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும். அதன்பிறகு மாநிலம் முழுவதும் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கும்.

    ×