என் மலர்
புதுச்சேரி

மழைநீர் புகுந்த வீட்டினை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
மழை நீர் தேங்கிய வீடுகளில் அதிகாரி ஆய்வு
- மழை நீர் தாழ்வான பகுதியில் சாலை அருகில் உள்ள வீடுகளில் பெருகியது.
- வீடுகளில் உறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதில் திருபுவனை பகுதியில் 3 மணி நேரம் இடைவிடாத மழை பெய்தது தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது . இதனால் சாலை உயரமாக போடுவதால் மழை நீர் தாழ்வான பகுதியில் சாலை அருகில் உள்ள வீடுகளில் பெருகியது.
இதனால் முழுவதும் தங்கள் வீடுகளில் உறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில் ராஜன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மழை நீர் தேங்கியிருந்த வீடுகளில் ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
Next Story






