என் மலர்
நீங்கள் தேடியது "Medical festivals"
- பல்வேறு நல திட்டங்களை தடை இல்லாமல் நிறைவேற்றி வருகிறது.
- மருத்துவ திருவிழா கண்டிப்பாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் மக்கள் நல திட்டங்களை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. மகளிருக்கு உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உயர்வு போன்று பல்வேறு நல திட்டங்களை தடை இல்லாமல் நிறைவேற்றி வருகிறது.
அரசு குறிப்பாக மருத்துவ துறையில் கொரோனா தொற்றுக்கு பிறகு புதுவை மாநிலம் சிறந்து விளங்கு கிறது. நடைபெற்ற சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவ துறைக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதில் சிறப்பு அம்சமாக இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத மருத்துவ திருவிழா என்ற சிறப்பான திட்டத்தை புதுவை அரசு கொண்டு வந்துள்ளது. நேற்றைய தினம் கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் ஆரம்பித்து வைத்து வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
கிராமபுறங்களில் ஏழை எளிய மக்கள் சிறந்த மருத்துவத்தை ஒரே இடத்தில் பெற்றிட இந்த மருத்துவ திருவிழா கண்டிப்பாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மருத்துவ முகாம் மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வை ஏற்படுத்திய சுகாதார துறைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இதே போன்று மருத்துவ திருவிழாக்களை கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்களிலும் நடத்த அரசு முன் வர வேண்டும். கிராம புறங்களிலும் இது போன்று மருத்துவ திருவிழாக்கள் நடத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறந்த மருத்துவம் என்ற முதல்- அமைச்சரின் கனவை எட்ட முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






